Sunday, February 2, 2025

தமிழறிஞர் மு. இராகவையங்கார்

தமிழறிஞர் மு. இராகவையங்கார் நினைவு நாள் – பிப்ரவரி 2, 1960 . இவர் தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், சொற்பொழிவாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஆய்வுகளைச் செய்து ஆய்வுத்துறை முன்னோடி என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படுபவர்.தமிழறிஞர் ரா. ராகவையங்கார். மு.இராகவையங்கார் இராமநாதபுரம் சேதுபதி ஆதரவில் வாழ்ந்தார். இராகவையங்கார் பதினெட்டு வயதில் சேது சமஸ்தான அவைப்புலவர் பட்டம் பெற்றார். 1901-ல் பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. அதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-1912 வரை மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.பாண்டித்துரைத் தேவர், நாராயணையங்கார் ஆகியோர் இவருடன் கல்விபயின்றவர்கள். பின்னாளில் மு.இராகவையங்கார் ’செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’என்ற பெயரில் பொன்னுச்சாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர் ஆகியோரின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.இராகவையங்கார் செந்தமிழ் இதழில் ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் கல்வித்துறை பணிகளின் போதும் பழந்தமிழ் ஆய்வுகளையும் கல்வெட்டாய்வுகளையும் செய்து வந்தார். 12 ஆய்வு நூல்களை எழுதினார். தன் எண்பதாவது ஆண்டு நிறைவின் போது வினைத்திரிபு விளக்கம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

No comments:

Post a Comment