Thin, colorful, shiny and juicy. Wonderful!
Monday, December 23, 2019
சாமானியர்களுக்கு தான் புரியும்.
#டெல்லி_தாரியா_கஞ்ச் பகுதியில் பனிவிழும் நேரத்தில் காலணி பாலீஷ் போடும் தொழிலாளியும் அருகே அவருடைய மகன் பள்ளிப் பாடத்தை கற்பதும்....
இதிலுள்ள அர்த்தங்களும் செய்திகளும் சாமானியர்களுக்கு தான் புரியும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.12.2019#ksrposts
#ksradhakrishnanposts
Sunday, December 22, 2019
#என்ன_கூத்து_என்று_தெரியவில்லை. இலங்கையில் #அம்மன்தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99 வருட குத்தகை
#என்ன_கூத்து_என்று_தெரியவில்லை. இலங்கையில் #அம்மன்தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99 வருட குத்தகை
————————————————
இலங்கையில் கோத்தபய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அம்மன் தோட்டா துறைமுகம் குறித்து சீனாவுடைய 99 வருட குத்தகை ஒப்பந்தம் திரும்ப பெறப்படும் என்றும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
அதில் மாற்றம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு இலங்கையில் உள்ள சீன தூதரக இதை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கோத்தபய அரசு ஒன்றும் மாற்ற முடியாது எனவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட படி 99 வருடம் குத்தகையில் தான் அம்மன் தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் தொடர்ந்து இருக்கும். அரசு மாறினாலும் இதில் மாற்றம் ஏதும் இல்லை என்று தெளிவாக சொல்லி உள்ளது. இது என்ன கூத்து என்று தெரியவில்லை.
****
Press Release of the Embassy of China 20191220
2019/12/20
On December 19, H.E. President Gotabaya Rajapaksa met with the Foreign correspondents based in Colombo, making it clear that the Sri Lankan government will not re-negotiate the existing agreement on Hambantota Port, and the commercial contract that has been signed will not be changed due to government changes. The Chinese side highly appreciates the remarks and is willing to guide relevant enterprises to work with the Sri Lankan side to expedite implementing the established agreement and further promote the prosperity and development of Hambantota Port.
China reiterates once again that it highly respects the sovereignty and territorial integrity of Sri Lanka. The security and control of Hambantota Port is entirely in the hands of the Sri Lankan Government and Navy, which is no any different from other ports in Sri
#China
#அம்மன்தோட்டா
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
22.12.2019
#ksrposts
#ksrpostings
வி_கே_கிருஷ்ணமேனன் #அண்ணாவுக்கு #முக்கிய_கடிதம்
#வி_கே_கிருஷ்ணமேனன் #அண்ணாவுக்கு
#முக்கிய_கடிதம்
————————————————-
பாதுகாப்பு அமைச்சராகவும், காமன்வெல்த் மற்றும் ஐநா சபையில் இந்திய பிரதிநிதியாகவும், சீனா மற்றும் அண்டை நாட்டு எல்லை பிரச்சினை போன்றவற்றை கையாண்ட *வி.கே.கிருஷ்ண மேனன்*, நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். நேருவின் பல புத்தகங்கள் அச்சிற்கு வர காரணமாக இருந்தவர். 1967ல் தேர்தலில் போட்டியிட விரும்பிய மேனனுக்கு காங்கிரசின் முக்கிய தலைவர் எஸ்.கே. பாட்டீல் எதிர்க்க அவருக்கு டிக்கெட் மறுக்கப்படுகிறது. அதை மீறி மேனன் சுயேச்சையாக போட்டியிட்டு வட கிழக்கு மும்பையில் தோல்வியைத் தழுவுகிறார். அதன்பிறகு எம்பி ஆக முடிவு செய்த வேளையில் அண்ணா தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைகிறது. அந்த கட்டத்தில் தென்சென்னையில் இடைத் தேர்தல் வர மேனன் அண்ணாவிடம் தனக்கு தென்சென்னை தொகுதியை ஒதுக்கினால் அனைவரும் இணைந்து காங்கிரசை எதிர்க்கலாம் என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறார். திமுக தொகுதியை ஒதுக்க முடியாது எனவும், கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் அந்த தொகுதியில் போட்டியிட போவதாக சொல்லி அண்ணா அவருடைய வேண்டுகோளை மறுக்கிறார். நேருவின் நெருங்கிய சகாவாக இருந்த மேனன் திமுகவிடம் வேண்டி நின்ற நிலை 1967ல் நிலவியது.
கிருஷ்ண மேனன், கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். கோயம்புத்தூரில் சிறிது காலம் தங்கியிருந்தார். அதன் நினைவாக கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வி.கே.மேனன் வீதி என்ற பெயர் கொண்ட தெரு இன்றும் இருந்து வருகிறது.இது குறித்து மத்திய முன்னாள்
அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தன்னுடைய
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Within 5 days office defeat however V.K.Krishnamenon wrote to the chief minister of Madras Anna, Party Gl.Seretary,DMK had just then swept into power.
‘’I am now writing to ask your advice and support in regard to you are offering myself as a candidate in the impending bye election in South Madras. I would not consider this much less entertain it, without your full and pressure support. I feel that you would consider that my return to parliament would in a small measure be of service to the country and to Madras. I have publicly declared my support of your government on always have had the enthusiastic and active assistance of the DMK supporters in Bombay.
With your support on endorsement I can win in South Madras. I will do my best to be of service to the Madras state and to further its interests at the centre. I am as you know, totally and strongly e opposed to the Congress and its government as it is today. If there is to be a Congress candidate in South Madras whoever it is I would have no reservations in opposing him fully andvigorously.’’
-V.K.Krishnamenon
#வி_கே_கிருஷ்ணமேனன்
#V_K_Krishnamenon
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
22.12.2019
#ksrposts
#ksrpostings
#திருப்பாவை #கோதைமொழி
#திருப்பாவை
#கோதைமொழி
06.மார்கழி
" *வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை* "
புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!
புள்ளும் சிலம்பின காண் = புள் என்றால் பறவை! பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன! கூவாமல் ஏன் சிலம்புகின்றன? சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்!
அதே போலத் தான், பறவைகளும் விட்டு விட்டுக் கூவுது!
புள் அரையன் கோயிலில் = பட்சி+ராஜன் = புள்+அரையன்! எப்படி அழகா வடமொழியில் இருந்து தமிழுக்கு மாத்திடறா பாருங்க கோதை?
புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!
புள்+அரையரையன் = கருடனுக்கும் அரசன் = பெருமாள்!
இன்றைக்கும் வில்லிபுத்தூரில் அது புள்ளரையன் கோயில் தான்! பெருமாளுக்கும் கோதைக்கும் நிகராக, அதே ஆசனத்தில், கருடனும் சரி சமமாக நிற்கிறான்! பொதுவாக, கருடன் பெருமாளைப் பார்த்தவாறு, எதிர்ப்புறத்தில் சேவகனாய்த் தானே நிற்பான்? இங்கு மட்டும் அப்படி இல்லை! ஏன்?
அரங்கனில் கலந்து விட்டாள் கோதை! ஆனால் தந்தைக்கோ ஊரறிய மகளின் கண்ணாலம் பண்ணிப் பார்க்க ஆசை! ரங்க மன்னாராக வில்லி வந்து ஊரறியக் கரம் பற்றுகிறேன்-ன்னு சொல்லிட்டான் அரங்கன்! ஆனால் மண நாளன்றோ அரங்கன் வர லேட்டாகுது! அரங்க வாசிகள் அவனை விட்டால் தானே? சும்மா....ஊர் வேலையே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி?
இங்கோ இந்த ஊர் வேற மாதிரி பேச ஆரம்பிக்குது! கருடன் வேத சொரூபம்! அவனுக்கு உண்மை விளங்கி விட்டது! ரங்க மன்னாரைப் பரபர-வென்று புயல் வேகத்தில் பறந்து அழைத்து வருகிறான்! அந்த வேகம் ரங்க மன்னாருக்கே பயத்தைக் கொடுத்ததாம்! கல்யாணத்துக்கு சீவிச் சிங்காரிச்சி வந்தான் அரங்கன்! அடியவன் கருடனோ வேர்த்து விறுவிறுத்து வந்தான்! பார்த்தாள் ஆண்டாள்! சேர்த்தாள் ஆசனத்தில்!
தன் வருங்காலக் கணவன் கண்ணன்! இன்னும் கண்ணாலமே ஆகலை! அவன் பணியாட்கள் மேல், அவனைக் காட்டிலும் அவளுக்குள்ள பரிவு தான் என்ன!
இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் சமத்துவம் பேசுகிறோம்! ஆனால் அதை ஆண்டாள் அன்றே செய்தாள்!
இன்றும் முதலாளி அம்மாவோடும், முதலாளி ஐயாவோடும், தொழிலாளி கருடன், ஒரே சிம்மாசனத்தில், தோளோடு தோள் நிற்கிறான்!
கோதை! உனக்குத் தான் எத்தனை முகங்கள்! எத்தனை அகங்கள்! அதில் சமத்துவமும் ஒன்றோ? ஆண்டாள் திருவடிகளே சரணம்!
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = தூய்மையான வெள்ளை நிறச் சங்குகள்! அவையெல்லாம் நம்மை விளிக்கின்றன! அந்தச் சத்தம் கூடவா காதுல விழலை?
பிள்ளாய் எழுந்திராய் = அட, எழுந்திருடீ பொண்ணே!
பேய் முலை நஞ்சுண்டு = பூதனை என்னும் கம்சனின் பேய் அவனைக் கொல்ல வந்ததே! அவள் முலைப்பால் குடித்து மலைப்பாம்பு அல்லவா மலைக்க வைத்தான்?
கள்ளச் சகடம் கலக்கு அழிய = வண்டிச் சக்கரமாய் வந்தான் சகடாசுரன்! அவன் கலக்கையும் ஒரு கலக்கு கலக்கினானே நம்ம கண்ணன்?
கால் ஓச்சி = காலை ஓச்சினானாம் சக்கரமாய் வந்த சகடன் மீது!
அப்போ கண்ணனைக் காத்தது யார்? அவன் திருவடிகள் தானே! இதான் திருவடிப் பெருமை!
* நம்மையும் காத்து,
* அவனையும் காத்து,
* அவனுக்கும்-நமக்கும் பாலமே இந்தத் திருவடிகள் தான்! திருவடிகளே சரணம்-ன்னு வரிக்கு வரி சொல்வது இப்போ நல்லாப் புரிந்திருக்குமே?
வெள்ளத்து அரவில் = பாற்கடல் வெள்ளத்தில், அரவமான பாம்பின் மீது
துயில் அமர்ந்த வித்தினை = துயில்+"அமர்ந்த" மூல புருஷன்!
பரமபதத்தில் அமர்ந்த கோலம்! பாற்கடலில் கிடந்த கோலம்! அதான் ஒரு சேரப் பாடுகிறாள்!
வெள்ளத்து அரவில் = துயில்! வித்தாக இருக்கும் பரத்தில் = அமர்ந்து!
இறைவனின் நிலைகள் ஐந்து!
1. பரத்தில் = அமர்ந்தும்,
2. வியூகத்தில் = கிடந்தும்,
3. விபவத்தில் = நடந்தும்,
4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்
5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!
இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்!
அந்த வித்தினை "உள்ளத்தில்" கொண்டு, முனிவர்களும்+யோகிகளும்,
லேட்டாயிருச்சே-ன்னு அலறி அடிச்சிக்கிட்டு எழுந்திரிக்காம, சீக்கிரமாகவே விழித்துக் கொண்டு, "அரி" என்ற பேர் அரவம் = ஹரி ஓம்! ஹரி ஓம்!
அது உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!!
அனைவரின் "உள்ளமும் புகுந்து", அவர்கள் மனங்களை எல்லாம் "குளிர்வித்து", அடியார்களுக்கு நலம் எல்லாம் "அருள" வேணுமாய், ஆண்டாள்-அரங்கனை, வேண்டிக் கொண்டு அமைகிறேன்! "அரி" என்ற பேர் அரவம்! ஹரி ஓம்!
#திருப்பாவை
#கோதைமொழி
Saturday, December 21, 2019
Cleopatra from "Antony and Cleopatra-Shakespeare
"Eternity was in our lips and eyes,
Bliss in our brows bent."
--
" (1.3.36)
" (1.3.36)
விவசாயிகளின்_எழுச்சி_தலைவர் #நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள்
#விவசாயிகளின்_எழுச்சி_தலைவர்
#நாராயணசாமி_நாயுடு 35வது நினைவு நாள்
இன்று (21-12-2019) கோவை வையம்பாளையத்தில் உள்ள வேளாண் தலைவர் நாராயணசாமி அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவரதுநினைவிடத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
21-12-2019.
Subscribe to:
Posts (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...