Saturday, January 30, 2021


———————————————————
இன்று எம்ஜிஆர் நினைவு நாள்
எம்ஜிஆர் 1977 முதவரானபோது எங்கள் பகுதிகள் வறட்சியால பாதிக்கப்பட்டிருந்தது. அதை குறித்து முதல்வரை எம்ஜிஆரை சந்திக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரகளான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான சோ.அழகிரிசாமியும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாம் திரு எம். கல்யானசுந்தமும் எம்ஜிஆர் அவர்கள் மதுரை வந்தபோது அவர் தங்கியிருந்த அரசினர் விருந்தனர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) சந்திக்க சென்றபோதுதான் எனக்கு அறிமுகம். அதற்கு முன் பத்திரிக்கையாளர் சோலையுடன் எம்ஜிஆரை சந்தித்துள்ளேன். அப்போது நான் நெடுமாறனுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.

நாங்கள் மதுரையில் சந்திக்கும் போது மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்படும் நேரம். எம்ஜிஆர் –யுடைய பொருட்களை அவருடைய உதவியாளர் பேக் செய்துகொண்டிருந்தார் அப்போது அதை நான் ஆர்வமாக கவனித்தேன். அவர் பயன்படுத்திய மூன்று பொருட்கள் அவர் முகதிற்கு போடுகின்ற சாண்டல் பவுடர், சார்லி வாசனை திரவியம், மைசூர்சாண்டல் சோப். நான் நினைத்தை விட பிரம்மாண்டமான பொருட்கள் அப்படி ஒன்று அங்கு இல்லை.
பின்னாட்களில் விடுதலைப்புலி தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் எம்ஜிஆர் அவர்களை சந்தித்தது, வீட்டில் விருந்து உண்டது எம்ஜிஆர் வழங்கிய கோடிக்கானப் பணத்தை விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்டபோது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு பேபிசுப்ரமணியத்தோடு இருந்ததெல்லாம் எம்ஜிஆர்-ன் நினைவு வந்து செல்கிறது.

கடந்த 1980நாடாளுமன்றம் தேர்தலின்போது காங்கிரஸ் நெடுமாறன் தலைமையில் நாங்கள் வெளியேறியபோது சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் என்னை போட்டியிடவேண்டுமென்று எம்ஜிஆர் விரும்பியதுண்டு. எனக்கு அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிடுவது, சட்டமன்ற தேர்தல் என்றால் பரவாயில்லை என்று அச்சத்தின் காரணமாக நான் மறுத்தபோது எம்ஜிஆர் கோபப்பட்டதுண்டு. அந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி கோபிசெட்டிபாளையத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. பின்னாட்களில் சிவகாசியில் போட்டியிட்டிருக்கலாமே என்று எம்ஜிஆர் என்னிடம் கூறியது எல்லாம் கடந்தகால நினைவுகள். அக்காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் எம்ஜிஆர் எனக்கு வீடும் ஒதுக்கீடு செய்துகொடுத்தார்.
எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள்
1. பேரறிஞர் அண்ணாவுடன் எம்ஜிஆர்
2. கலைஞர் - எம்ஜிஆர்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
24-12-2020


#நாங்குநேரி, #முனைஞ்சிபட்டி #எம்_ஜி_சங்கர_ரெட்டியார் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டம், 1952 முதல் 1962 வரை நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தையாருக்கு நெருக்கமாகஇருந்தவர்.நான்குநேரி அருகே இன்றைக்கு கம்பீரமாக காஷ்மீர் -கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இருக்கின்ற சங்கர ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியை துவங்கியவர். அதேபோல் அவருடைய சொந்த ஊர் முனைஞ்சிபட்டி யிலும் இதேபோல மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது.
திருநெல்வேலி ரத்னா தியேட்டர் இவருடைய குடும்பத்தை சார்ந்தது.
எல்லோராலும் போற்றப்பட்டவர். நல்ல மாமனிதர். இன்றைக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் பலருக்கு கவனத்தில் படாது நினைவுக்கும் வராது. அதுதான் இன்றைய வணிக அரசியல். அன்றைக்கு தன்னுடைய கையில் இருந்து பணத்தை செலவு செய்தவர்கள் அரசியல் பெருந்தகைகள். இன்றைக்கு நிலைமை தான் நமக்கு தெரியுமே சந்தை அரசியலில்.....
25-12-2020



 காலங்கள் மாறிக்கொண்டே போகலாம்.ஆனால் நம் மனதில் உள்ள அழகான நினைவுகள் என்றும் மாறாது.

இன்றைய தினம் கழியட்டும் எதுவானப்
போதிலும்.நாளை புதிதாய் மலரட்டும்.
இங்க யாருக்கும் சரியான ஆலோசனை, பதில் தேவையில்லை.அவர்கள் எதிர்பார்க்கிற பதில் தான் வேணும்.

Sunday, January 24, 2021


“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!”
................
பதவுரை
தூமணி - பரிசுத்தமான ரத்தனங்களால் செய்யப்பட்ட,
மாடத்து - மாளிகையில்,
சுற்றும் - நான்கு பக்கங்களிலும்,
விளக்கு எரிய - தீபங்கள் ஜொலிக்க
தூபம் கமழ - அகில் சந்தன கட்டைகளின் புகை வாசனை வீச,
துயில் - உறங்கப் பண்ணும் ஸ்வபாமுள்ள,
அணைமேல் - படுக்கையின் மேல்,
கண் வளரும் - கண்ணுறங்குகிற,
மாமான் மகளே - அம்மான் பெண்ணே,
மணி - ரத்நமயமான,
கதவம் - கதவுகளுடைய
தாள் - தாழ்ப்பாளை
திறவாய் - திறக்கவேணும்,
மாமீர் - மாமிமாரே,
அவளை - உன் பெண்ணை,
எழுப்பீரோ - எழுப்பக் கூடாதோ?
உன்மகள்தான் - உன்னுடைய பெண் தான்.
ஊமையோ - பேச முடியாத ஊமையோ,
அன்றி - அல்லது,
செவிடோ - காது இல்லாதவளோ,
அனந்தலோ - சோம்பலுள்ளவளோ,
ஏம - எழுந்திராதபடி பயங்கரமான,
பெரும் துயில் - பெரிய உறக்கம் கொள்ளும்படி,
மந்திரப்பட்டாளோ - மந்திரவாதம் செய்யப்பட்டாளோ,
மாமாயன் - அளவில்லாத, சேஷ்டிதங்களையுடையவன்,
மாதவன் - லக்ஷ்மி தேவியின் பர்த்தா,
வைகுந்தன் - ஸ்ரீவைகுண்டநாதன்,
என்று என்று - என்று இம்மாதிரியாக
நாமம் பலவும் - எல்லா நாமங்களையும்
நவின்று - சொன்னோம்,
ஏல் ஓர் - எம்பாவாய்.
............................................
“தூய்மையான மாணிக்கக் கற்களால் இழைக்கப்பட்ட மாளிகையைச் சுற்றி விளக்குகள் எரிகிறது. மணம் வீசும் தூபம் கமழ்கிறது.
அங்குள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே. உன் வீட்டின் கதவுகளைத் திறந்திடு.
மாமியே..! உன் மகளை எழுப்ப மனமில்லையா..?
உன் மகள் எதுவும் பேசாத ஊமையா? அல்லது எச்சொல்லும் கேட்கவியலாத செவிடா?
நீண்ட உறக்கம் கொள்பவளா? அல்லது உறங்குவதற்கான மந்திரத்தால் கட்டப்பட்டவளா..?
அந்த மாயக் கண்ணனை, மாதவனை வைகுண்டத்தில் வாழும் வேங்கடவனை நாங்கள் பாடுகிறோமே..!
இதைக் கேட்டாவது உன் மகள் துயிலெழக் கூடாதா...?”
என்று துயிலெழாமல் உறங்கும் ஆயர்குலப் பெண்ணை துயிலெழுப்பப் பாடுகிறாள் கோதை.
..........................................
இத்திருப்பாவைப் பாடலில் துயிலெழுப்பப் படுபவள் கண்ணனிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட பெருமைக்குரியவள். ‘அவனது உரிமைப் பொருளான நம்மை அழைத்துக் கொண்டு போவது அவனுக்கே உரிய பொறுப்பன்றோ? என்று உறங்கி கிடந்தாள்.
செல்வச் சீமாட்டியாய்த் திகழும் இவளது திருமாளிகையின் எழிலெல்லாம் துலங்கும்படி சொல்லி இவளை அழைக்கின்றார்கள். குற்றமில்லாத நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாட மாளிகையாதலால் இயல்பாகவே சுடர்விடும் இல்லம் இவளுடையது. இங்கு இவளே ஒரு ரத்தினம் போல் ஒளிவீசும் பாவை. அதற்கும் மேலாக எங்கு பார்த்தாலும் இந்தத் திருவிளக்குப் போல் அவளைச் சுற்றி பல விளக்குகள் எரிகின்றன.
இன்னும் அம்மனை முழுதும் சந்தனமும், அகிற்புகையும் கமழ்ந்து நறுமணம் வீசுகின்றன.அவள் படுத்துறங்கும் மெல்லணையோ கிடந்த மாத்திரத்தில் உறக்கத்திற்கு இட்டுச் செல்லும் இனிமையுடையது. அதனால் துயில்வது என்பதே ஒரு சுகமாகவும் சம்பத்தாகவும் உடையவள் இவள். இன்னும் இவள் நெருக்கமான உறவுக்குரிய மாமன் மகளாகவும் இருக்கிறாள். இத்தனையும் சொல்லி இவளைத் துயிலெழுப்பினார்கள்.
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே”
என்று இவளது செளபாக்கியங்களைச் சொல்லிச் செல்லமாய் அழைக்கின்றார்கள். “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று மல்லுக்கு நிற்கின்றார்கள்.

இவள் மீண்டும் சோம்பலாய் உறங்கி இருக்க செல்வமணிக் கதவாதலால் ‘நீயே திற, எங்களால் திறக்க ஒண்ணாது’ என்றும் செப்புகின்றார்கள். அப்போதும் இவள் பதில் பேசவில்லை.
இவளிடம் பேசித் தோல்வியே கண்டோம். ஆதலால் இவளது தாயாரைக் கெஞ்சியேனும் கதவு திறந்து இவளைக் காண வேண்டும் என்னும் அவாவினாலே, ‘மாமீர் அவளை எழுப்பீரோ?’ என்று வேண்டி நின்றார்கள். அப்பொழுதும் பனிதலைப் பெய்ய நின்றார்க்கு இனித்தலைத் தடும் மறுமொழி ஏதும் கிடைக்கவில்லை.
இப்போதும் அவர்கள் சலித்துப் போகாத முயற்சி உடையவர்களாய் மாமியிடம் கேட்கிறார்கள். ‘மாமீர், உங்கள் பெண் எங்கள் விண்ணப்பங்கள் கேட்டும் பதில் கூறாமையால் அவள் ஒரு ஊமையோ? அப்படியே ஊமையாக இருந்து பேச முடியாவிட்டாலும் எழுந்து வந்து நாங்கள் பேசுவதைச் செவிகளாரக் கேட்கவும் கூடாதா? அல்லது அவள் செவிடும் ஆனவளோ? அல்லது அவள் கட்டும் காவலுமாய்ச் சிறைப்பட்டு கிடக்கிறாளா? அல்லது யாராவது பெருந்துயிலில் கிடக்கும்படியாக மந்திரம் போட்டு மயக்கி விட்டார்களா?’ என்று இவளது தாயாரிடம் பேசுவது போல இவளும் கேட்கும்படி குறை கூறுகிறார்கள்.
“ஊமை, செவிடு” என்றெல்லாம் சொன்னால் கோபித்துக் கொண்டு மறுவார்த்தை சொல்லுவாளோ? என்று பார்த்தால் இவள் அதற்கும் மசிந்து கொடுப்பவளாய் இல்லை. அவர்களும் அசைந்து கொடுப்பவர்களாய் இல்லை.
அப்போது இவள் தாயார், ‘போகட்டும் பெண்களே, என் மகள்தான் மந்திர வசப்பட்டு மயங்கிக் கிடப்பதாகவே இருக்கட்டும், மயங்கியவர்களைத் தண்ணீர் தெளித்து எழுப்புவதன்றோ முறை’ என்கின்றார்.
உடனே அப்பெண்கள் ஆன்மாவின் மயக்கத்தைத் தெளிவிப்பதெல்லாம் அப்பெருமானின் திருநாமங்கள் அல்லவோ என்று எண்ணியவர்களாய், ‘மாமாயன் மாதவன், வைகுந்தன் என்று நாமம் பலவும்’ நவில்கின்றனர். நவிலுதல் என்றாலே இனிமையாகச் சொல்லுதல் என்று பொருளல்லவா? சித்தம் இனிக்க, செப்பும் இதழ் இனிக்க குண விசேடங்களால் மனங்கவரும் மாமாயன் என்றும், திருவின்கேள்வனான மாதவன் என்றும், பரமபதத்திற்குரியவனான வைகுந்தன் என்றும் போற்றி செய்கின்றார்கள்.
இந்தத் திருநாமங்களைக் கேட்டு நெஞ்சம் சிலிர்ப்பதற்காகவன்றோ இவளொருத்தி உறங்குவதுபோல் பாவனை செய்திருந்தாள். இப்போது இவளும் அவர்களோடு சேர்ந்து கொள்ள நாமம் பலவும் நவின்று திளைக்கின்றார்கள்.
பரம பாகவதர்களாகிய அடியார்களோடு திவ்யத் திருநாமங்கள் சொல்லும் பேரின்ப பெருக்கை நாமும் அனுபவிக்குமாறு செய்கின்றார் ஆண்டாள் நாச்சியார்.


———————————————————-
சமீபத்தில் ஈழ நண்பர் நடேசன் ஆஸ்திரேலியாவிலிருந்து "Heroes: Saviors, Traitors, and Supermen: A History of Hero Worship" என்ற அரிய நூலை எனக்கு அனுப்பியிருந்தார். அக்கிலஸ், போன்ற ஆளுமைகளை புகழ்ந்து வணங்கலாம் என்றும், புகழ்ச்சி அரசியல், தனி மனித துதி எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம், இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்திரா காந்தி காலத்தில், அரசியலில் ஜெயபிரகாஷ் நாராயணன், Personlaity Cult, Hero Worship என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியபோது, பத்திரிகைகளில் இது குறித்தான விவாதங்கள் அப்போது நடந்தன.
அரசியலில் நேர்மையாக செயல்படுவதை விட துதிப்பாடி முன்னுக்கு வருவதுதான் இன்றைய நிலை. இதில் கண்ணுக்கு தெரிந்த அடிமைகளும், இருக்கின்றார்கள். கண்ணுக்கு தெரியாத அடிமைகளும் பொது வாழ்வில் இருக்கின்றார்கள். சுயமரியாதையை விட பதவிகள்தான் முக்கியம். அசோக சின்னம் கொண்ட லெட்டர் பேட், காரில் சிவப்பு விளக்கு, தேசியக்கொடி போன்றவற்றிற்காக எந்த நிலைக்கும் சென்று தாழ்ந்து, சரணாகதி என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது இந்த பதவி மோகம்.


Personlaity Cult, Hero Worship போன்றவை அரசியலின் தூய்மையையும், நேர்மையையும், சேதப்படுத்துகிறது. இப்படிப்பட்ட Personlaity Cult, Hero Worship எப்படி வந்தது என்பதை பற்றி இந்த நூல் அற்புதமாக சொல்கின்றது. ஒரு மனிதன் எப்படியெல்லாம், வளைந்து, குலைந்து, குனிந்து கும்பிடு போட்டு, தகுதிக்கு மேலாக, பாசாங்குதனமான போலி புகழாரங்களை சூட்டி, பதவிகளை பெற்றுவிடலாம் என்ற நிலைக்கு யார் காரணம்?. இது நல்ல அணுகுமுறைதானா?, இதற்கும் ஒரு எல்லைகள் இல்லையா?, இதற்கு எப்போதுதான் முடிவு வரும். சிறையில் இருக்க வேண்டியவர்கள், நாடாளுமன்றத்திற்குள் மாண்புமிகு என்ற அடைமொழியோடு உள்ளே நுழைகின்றனர். இப்படியெல்லாம், சமூகத்துக்கு விரோதமானவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல Personlaity Cult, Hero Worship தான் அவர்களுக்கு ஏணிகளாகவும், படிகற்களாகவும் இருக்கின்றன. லஞ்ச லாவண்யம், நேர்மையற்ற போக்கு, குற்றவாளிகள் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது போன்றவற்றை போலதான் Personlaity Cult, Hero Worship தகுதிக்கு மேல் ஒருவரை புகழ்வதும், தூக்கி பிடிப்பதும், காட்சி பிழைகள் மட்டுமல்ல, சமுதாயக் குற்றமும் கூட. It is a Sin.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2020.


———————————————————
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை செய்வோம்..
நேரு காலத்தில் புதிய தொழிற்சாலைகள் அமையும் வகையில் முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களும் திட்டமிடப்பட்டன. சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தர நடவடிக்கை எடுத்தார். ’ஜெய் கிஷான், ஜெய் ஜவான்’ என்ற முழக்கத்தை பிரதமர் சாஸ்திரி அன்றைக்கு 1964ல் முழங்கினார். சரண்சிங் முன்னாள் பிரதமராக சில காலம் இருந்தவர். மேற்கு உத்திரபிரதேசத்தில் மீரட்டில் பிறந்து, தொடர்ந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர். இருப்பினும், தமிழ்நாட்டில் தான் விவசாயிகளுக்கான உரிமை குரல், முதல் போராட்டக் களம், 1968 இறுதியில் அமைந்தது.
நாராயணசாமி நாயுடு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணசாமி கவுண்டர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முத்துசாமி கவுண்டர், மதுராந்தகம் புலம்பாக்கம் முத்துமல்லா ரெட்டியார், போன்ற பலர் அன்றைக்கு விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தது, 1970,80 ஏன் இன்றுவரை அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். நாராயணசாமி நாயுடு தமிழகத்தில் முன்னெடுத்த விவசாய போராட்டம், வடபுலத்திலும் அப்போது பரவியது. உத்திரபிரதேசத்தில் மகேந்திர சிங் திக்காயத் மாராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் வெங்காள் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்டராவ், அதுபோல கேரளம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், பிகார் வரை நாராயணசாமி நாயுடுவின் போராட்ட தாக்கத்தின் வெப்பம், அங்குள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டது. வடபுலத்தில் திக்காயத் அவர்களின் போராட்டக்களம் மகத்தானது.

“Mahendra Singh Tikait, leader who lead 1988’s farmers protest”
Popular farmers' leader and founder president of Bhartiya Kisan Union Mahendra Singh Tikait (1935-2011) was revered as the farmers' "second messiah" after the Prime Minister Chaudhary Charan Singh.
Born in Sisauli village of Muzaffarnagar district in Uttar Pradesh, Tikait emerged as the most powerful farmers' voice in North India. He shot into the national spotlight for the first time in 1987, when he gheraod the Karmukhera power house in Muzaffarnagar to demand the waiver of power dues of farmers.
Tikait's most spectacular show was at Delhi's Boat Club lawns in 1988 when nearly 5 lakh farmers from western Uttar Pradesh occupied the entire stretch from Vijay Chowk to India Gate. Delhi's power elite held out until the political pressure became too much to handle and after a week, the Rajiv Gandhi government bowed to his 35-point charter of demands that included higher prices for sugarcane and the waiving of electricity and water charges for farmers.
In September 1989, when a young Muslim girl was abducted and murdered in Bhopa village of Muzaffarnagar district, Tikait was the first to lead the farmers to gherao the local police station, and succeeded in pressuring the cops to bring the guilty to book.
In July 1990, Tikait protested in Lucknow with over two lakh farmers, urging the Government of Uttar Pradesh to concede to the farmers' demand for higher sugarcane prices and heavy rebates in electricity dues. The pressure tactics worked and the then Janata Dal-controlled government bowed to the demands.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2020.


———————————————————-
1960-70களில் சென்னை அண்ணாசாலையில் எல்சன்ஸ்(Elsons), இந்திய சில்க் ஹவுஸ்(India Silk House), செலராம்ஸ் ( Chellarams ) போன்ற ஆடை,துணி கடைகள் பிரபலமானது. இதில் எல்சன்ஸ் கடை, கற்கள் மற்றும் சிவப்பான செங்கற்களால் கட்டப்பட்ட தனித்துவமான கட்டிடமாக இருக்கும். மெயில் ஆபிஸூக்கு தென் புறம் இருக்கும். கல்லூரி நாட்களில் இந்த கடையில் துணிகள் எடுத்து, அந்த கடையிலுள்ள தையல்காரரிடம் சட்டை பேண்ட்களை தைத்து வாங்குவது வாடிக்கை. இன்றைக்கு அந்த கடை மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடையாக மாறிவிட்டது.
அதுபோலவே Ritchie Street பகுதியிலும் மென்பொருள் கடைகள் இப்போது அதிகமாக வந்துவிட்டன. Ritchie Street பகுதியில்தான் ஒரு காலத்தில் பெரியார் தங்கியிருந்தார். கர்நாடக முதல்வரக இருந்த என் மீது அன்பு காட்டிய தேவராஜ் அர்ஸ் அவர்களை முதன் முதலாக இந்த Ritchie Street பகுதியில்தான் சந்தித்தேன். அன்றிலிருந்து அவரோடு நெருக்கமும், அவர் என்மீது காட்டிய அன்பையும், பாசத்தையும் மறக்கவே முடியாது.

திரும்பவும் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வருகிறேன். எல்சன்ஸில் ஆடைகள் வாங்குவது ஒரு விருப்பம் என்பதை தாண்டி அங்கே தைக்கும் சட்டையின் காலாரில் உள்ள ஸ்டிக்கரை பார்த்து சக சட்ட கல்லூரி சக மாணவர்கள் எல்சன்ஸா என்று கேட்பார்கள். சென்னையில் சிந்தி சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள், வணிகர்கள், அண்ணாசாலையில் இந்த கடைகளை அப்போது நடத்தியது உண்டு.
இந்திய சில்க் ஹவுஸிலும், ஜிப்பா போன்ற உடைகளை ஆர்வமாக நானும் எனது நண்பர்களும், வாங்குவது வாடிக்கை. அதுபோல செலராமும் ஒரு முக்கிய கடையாக திகழ்ந்தது. அப்போது பெல் பாட்டம்ஸ், ப்ளூ கலர் ஜூன்ஸ் போன்றவை விற்பனைக்கு வந்த காலம்.
The Sindhis may be a small community in Madras but its contribution is big; more in the retail business that catered to our city, more in the decades gone by.
On Mount Road,shopping had to be either at Chellarams, or at India Silk House or at Elsons.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2020.

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...