Friday, October 24, 2014

21 I.A.S. I.P.S. அதிகாரிகள் எங்கே? மர்மமாக உள்ளது....

21 I.A.S. I.P.S. அதிகாரிகள் எங்கே? மர்மமாக உள்ளது....
-----------------------------------------------------------------------------------------------


டெல்லியிலிருந்து வெளிவரும் ‘தி பயோனியர்’ ஆங்கில ஏட்டில், நாட்டில் பணியில் இருக்கும் 19 அய்.ஏ.எஸ்., 2 அய்.பி.எஸ். என மொத்தம் 21 அதிகாரிகள் காணவில்லை என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அதிகாரிகள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், காணாமல் போனவர்களின் பட்டியலையும், எந்த மாநிலத் தொகுப்பைச் சேர்ந்தவர்கள், எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்கள் போன்ற விவரங்களையும் தெளிவாக வெளியிட்டுள்ளது. இவர்கள் எங்கே? மர்மமாக மாயமாகி விட்டார்களா? எந்த விவரமும் தெரியவில்லையே? என அதிர்ச்சி தரக்கூடிய தகவலையும் வெளியிட்டுள்ளது. இந்த 21 அதிகாரிகளும் என்ன ஆனார்கள், எங்கு உள்ளார்கள் என்ற வினாவுக்கு, ஒரு ஜனநாயக நாட்டில், முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் எங்கே என மத்திய - சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிந்திருக்கிறதா? மர்மமாக உள்ளது.. ..

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...