Friday, October 24, 2014

விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
-----------------------------------------------------------------------------------------------------


பெருகிக் கொண்டு வருகின்ற வழக்குகளை விரைந்து முடிக்க, உயர்நீதி மன்றங்களில், சிறப்பு விரைவு நீதிமன்றங்களையும், கீழாண்மை நீதிமன்றங்களையும் கூடுதலாக அமைத்து வழக்குகளை முடிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒரு வேலை திட்டத்தை நேற்று தயாரித்துள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் பிரதிநிதிகள் (அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள்) மீதான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் உத்திரவுப்படி விரைவில் முடிக்க சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ளப் படும். குறிப்பாக பொது வாழ்வில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை முடிக்க நீதித்துறை உரிய நடவடிக்கைகளை வேகமாக எடுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...