பி.பி.சி தமிழோசைக்குப் பவளவிழா! அளப்பரிய பணியைத் தமிழுக்கு வழங்கிய பிபிசி தமிழோசை தமிழுக்குக் கிடைத்த அருட்கொடை! வாழ்த்துகள்.
பிபிசியில் திருமதி.ஆனந்தி அவர்கள் பொறுப்பிலிருந்த காலத்திலிருந்து தமிழோசையோடு தொடர்பு உண்டு. அக்காலங்களில் குறிப்பாக நெல்லை,தூத்துக்குடி, குமரி, விருதுநகர், இராமநாதபுரம் வரையுள்ள மாவட்ட கிராமங்களில் பல அலைவரிசைகள் அமைந்த ரேடியோவில் பி.பி.சி செய்திகளை கேட்பது வாடிக்கை.
அக்காலத்தில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பும், பிபிசி செய்திகளும் 1950-60களில் கேட்டது இன்றைக்கும் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். அன்றைக்கு இலங்கை வானொலி ஒலிபரப்பிய தமிழ்த்திரைப்படப் பாடல்கள் என்ன அற்புதமான, ரம்யமான கீதங்கள் கேட்டோம், ரசித்தோம் என்பது மலரும் நினைவுகளாகும்.
தமிழ்கூறும் நல்லுலகம் பிபிசி வானொலியினையும், இலங்கை வர்த்தக ஒலிபரப்புகளையும் மறக்காது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-05-2015.
No comments:
Post a Comment