திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள
சித்தன் வாழ்வூரைச் சேர்ந்த 37வயதான ராஜாராமன் என்ற விவசாயி கடன் தொல்லையால் பருத்திப் பயிருக்கு அடிக்கும் பூச்சுமருந்தைக் குடித்து, கடந்த 27-04-2015 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
பருத்தி விவசாயியான இவர் பி.டி பருத்தியினைச் சாகுபடி செய்திருந்தார். சமீபத்தில் தமிழகமெங்கும் பெய்த இரண்டு நாள் மழையில் தாக்குப் பிடிக்க முடியாமல் இவரது பருத்திச் செடிகள் அழுகிப் போய்விட்டன.
பெருமழைக்குத் தாங்காத பன்னாட்டு நிறுவனங்களின் பி.டி பருத்திவிதையினை பயிர் செய்ததால் தான் பருத்திப் பயிர்கள் நாசமாகி விட்டது. இதற்காகத் தான் உள்நாட்டுப் பருத்திகள் வேண்டுமென்று வலியுறுத்து வருகின்றோம்.
தனியார் நிறுவனங்களிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்த பயிர் வீணாகிப் போனதில் வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் விவசாயி ராஜாராமன்.
2012க்குப் பிறகுதான் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற சோகமான கொடூரங்கள் உருவெடுக்கத் தொடங்கியது.
ஏற்கனவே தமிழகத்தின், கோவில்பட்டி அருகேயுள்ள நெல்லைமாவட்டம் வரகனூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் வெள்ளப்பனேரி செந்தூர்பாண்டியன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி, ஏழை உழவன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், சிவகாசி அருகே பாண்டி, இப்படி பத்துக்கும் மேற்பட்ட மற்றும் தற்போது ராஜாராமன் போன்ற விவசாயிகள் தமிழ்நாட்டில் கடன் தொல்லையால் தற்கொலைச் செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.
விவசாயிகள் தற்கொலையை மத்திய மாநில அரசுகள் தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது வேதனையிலும் வேதனை.
விவசாயிகள் தற்கொலை பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவுகள் சில...
பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-05-2015.
No comments:
Post a Comment