Saturday, May 16, 2015

டெல்லியில் பழசு - Old Delhi .



முதன்முதலாக பல ஆண்டுகளுக்கு முன், சென்னையிலிருந்து ரயிலில் சென்று டெல்லியில் இறங்கிய போது, பழைய டெல்லி ரயில்வே நிலையம் பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது.

பல சாம்ராஜ்யங்களுடைய எழுச்சியும், வீழ்ச்சியும் கண்டதுதான்  டெல்லி மாநகரம்.

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...? என்ற கவியரசு கண்ணதாசன் பாடலுக்கு அர்த்தங்கள் ஆயிரம்.

டெல்லியில் மனிதர்கள் வந்தார்கள் சிலர் வென்றார்கள் சிலர் ஆடினார்கள் எல்லோரும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் இம்மாதிரியான டெல்லியின் பழைமைவாய்ந்த கட்டிடங்கள்  மௌன மொழியில் காலம் கடந்தும் பேசுகின்றது.  இந்த கட்டிடங்கள் வென்றவன், தோற்றவன் என அத்தனைபேரையும் அறிந்திருக்கும். நண்பர்களுக்கு ஒரு பதிவு.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-05-2015.

#Delhi
#KSR_Posts
#KSRadhakrishnan

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...