மக்களிடம் வாக்குகளைப் பொறுக்கி அமைச்சரான பா.ஜ.க -வின் பிரேந்திர சிங் அப்பாவி விவசாயிகளைப் பார்த்து,” இதோ பார் என் கையிலிருக்கும் வாட்ச் விலை ஒன்பது லட்சம் ரூபாய் . காலில் அணிந்திருக்கும் ஷூ விலை நாற்பத்தைந்தாயிரம்” என்று தன்னுடைய பெருமையாக தம்பட்டம் அடித்துத்திருக்கிறார்.
பிரேந்திர சிங்கின் இந்த பேச்சைக் கண்டித்து உலகம் சுற்றும் மோடி உடனே அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். என்ன அகம்பாவமான பேச்சு, வெட்டி ஜம்பம்.
சமீபத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் சிலர் கண்ணியமில்லாத பேச்சுக்களை பொது இடங்களில் பேசுவது மக்களை முகம் சுழிக்கச் செய்கின்றது.
மக்களோடு சேர்ந்து உண்டு வாழுங்கள் என்று மாவோ சொன்னார்.
மக்களோடு சேருங்கள் என்று தன்னுடைய காங்கிரஸ் சகாக்களை நேரு வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா, மக்களோடு இருங்கள் என்று குறிப்பிட்டார்.
மக்களோடு சேருங்கள் என்று தன்னுடைய காங்கிரஸ் சகாக்களை நேரு வலியுறுத்தினார். பேரறிஞர் அண்ணா, மக்களோடு இருங்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த உயிரோட்டமான வரிகளுக்கு அர்த்தமில்லாமல் பிரேந்திர சிங் மன்னராட்சியில் நடப்பது போல தன் பந்தாக்களை வெளிப்படுத்துவது அரசியலுக்குத் தகுதி அற்றவர் என்று பொதுவாழ்விலிருந்து அவர் அப்புறப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment