Wednesday, May 6, 2015

மைத்ரி சிரிசேனா இராஜபக்‌ஷே சந்திப்பு ஏன்? - Srilankan President Maithri meets Mahinda.


இன்றைக்கு கொழும்புவில் மைத்ரி சிரிசேனாவும், தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்‌ஷேவும் புளகாங்கிதமாகச் சந்தித்த காட்சிகளைப் பார்க்கும் பொழுது, பல வினாக்கள் நம் மனதில் எழுகின்றன.

1. தமிழர்களிடம் வாக்குகள் பெற்று பொறுப்புக்கு வந்த மைத்ரிபால் சிரிசேனா  எப்படி இராஜபக்‌ஷே மீது சர்வதேச, சுதந்திரமான , நம்பகமான  விசாரணைக்கு ஒத்துழைப்பார்?.

2. தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்தவாறு, தமிழர்கள் இழந்த  உரிமைகளை சிரிசேனா திரும்ப  வழங்குவாரா?

3. தமிழர்கள் விரும்பும் தங்களுடைய நிலங்களைத் திரும்பப் பெறுவதும், வடக்குக் கிழக்கு மாகாணக் கவுன்சில்களுக்கு, காவல்துறை, நில நிர்வாகம், மீன்பிடித் தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கப் படுமா? 

4. தமிழகள் பகுதிகளில் இராணுவத்தைத் திரும்பப் பெற்று சுதந்திரமாக தமிழர்கள் வாழ வகைசெய்யப் படுமா? 

இந்த சந்திப்பில் பேசியமான கமுக்கமான வார்த்தைகள் என்னவோ?  ரணில் விக்கிரம சிங்கே தற்போது மறைமுகமாக மைத்ரி சிரிசேனாவுடைய அதிகாரங்களைக் கைப்பற்றிவிடுவார் என்ற பூடகமான பேச்சுகளுக்கிடையே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே சிரிசேனா இராஜபக்‌ஷேவுடன் இருந்தவர் தானே!  

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-05-2015. 


 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...