சேது சமுத்திரத் திட்டத்திற்கு பாக்-ஜலசந்தி கடற்பகுதியில் மணல்திட்டுக்களை தோண்டக்கூடாது என்று குரல்கொடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கினார்கள்.
இப்போது பாக் ஜலசந்தி பகுதியில் விசைப்படகுகளை சேதப்படுத்தும் ஆற்றுவாய்ப்பகுதியை ஆழப்படுத்தவேண்டும் என்றும் அறுபது ஆண்டுகளாக இது நிறைவேற்றப்படவில்லை என்று தங்கள் வேதனையைத் தெரிவித்துள்ளார்கள்.
தாங்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது இக்கடல்பகுதியில் ஆழமில்லாததால் விசைப்படகுகள் பாதிப்புக்குள்ளாகிறது என்றும், எனவே பாக் ஜலசந்தி பகுதியை ஆழப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் 237கி.மீட்டர் நீளமுள்ள பாக் ஜலசந்தியை உள்ளடக்கிய மண்டபம் வடக்கு கடற்பகுதியில் அதிக அளவில் பாறைகள் உள்ளன. இதனால் விசைப்படகுகள் பாறையில் மோதி சேதம் அடைகின்றது என்று தங்கள் ஆதங்கத்தைச் சொல்லி வருகின்றனர்.
சேது சமுத்திரத்திட்டத்தையும் பவளப்பாறைகளுக்குச் சேதாரமில்லாமல் தோண்டுவோம் என்று உறுதிமொழி கொடுத்தும் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
ஒரு பக்கத்தில் ராமர் சேதுபாலம், இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல் என்று நிறைவேற்றப்பட்ட திட்டமே நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது அதே பகுதியைத் தோண்டி ஆழப்படுத்தவேண்டும் என்று சொல்வதை யாரும் குறையாகப் பார்க்கவில்லை.
ஆனால், சேதுசமுத்திரத்திட்டத்தையும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இதுபோல தோண்டி இருந்தால் இந்த காலகட்டத்தில் சேதுகால்வாய் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்குமில்லையா? தமிழக வளர்ச்சிக்கு பயன் தந்திருக்குமில்லையா..?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2015.
No comments:
Post a Comment