Wednesday, May 11, 2016

பெர்னாட்ஷாவும் பாரதியும்

“நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டேன்.

- பெர்னாட்ஷா

பெர்னாட்ஷாவின் இந்த வரிகளோடு பாரதியின் வரிகளான,

அச்சமில்லை அமுங்குதலில்லை
அச்சமில்லை அமுங்குதலில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை
பாவமில்லை பதுங்குதலில்லை
ஏது நேரினுமு இடர்ப்பட மாட்டோம்
அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்

இவை யாவும் சிந்தனையில் இருந்து நமக்கு வழி நடத்தினால் தோல்விகளும், தடைகளும், நன்றியற்ற வினைகளும் நம்மை விட்டு ஓடிச் செல்லும். என்னிடம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொல்வார்கள். "நைனா, எதிலும் நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை" என்பார். இதில்தான் உலகமும், மானிடமும் இயங்கி பீடுநடை போடுகிறது. பலர் வருவார், சிலர் சாதிப்பார், சிலர் காணாமல் போய்விடுவார். மிகச் சிலரே வரலாற்றுப் பதிவில் இடம்பெறுவர். அதற்கு முயற்சிகளும், நம்பிக்கைகளும்தான் அடிப்படை. பெர்னாட்ஷாவும் பாரதியின் இச்சொற்கள் நமக்கு நம்பிக்கை தருகிறது.

No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...