Wednesday, September 20, 2023

#*தமிழக முதல்வரின் பார்வைக்கு*, #*இதுதான் தங்களின் தமிழ் இலக்கிய புரிதலா*? *கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை*, #*கு.அழகிரிசாமி கவிஞர் மீராவுக்கு சிலைஇல்லையா*?

#*தமிழக முதல்வரின் பார்வைக்கு*,
#*இதுதான் தங்களின் தமிழ் இலக்கிய புரிதலா*?
*கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை*,
#*கு.அழகிரிசாமி கவிஞர் மீராவுக்கு சிலைஇல்லையா*?
————————————
கவிஞர் தமிழ் ஒளிக்கு 
பல்கலைக்கழகத்தில் சிலை வைப்பது மகிழ்ச்சி தான். இன்றைய நவீன கூட்டணி சார் இடதுசாரிகளின் வற்புறுத்தலின் பேரில் அல்லது சிபாரிசுகளின் பேரில் இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் வானம்பாடி காலங்களில் இருந்து கலைஞருக்கு நெருக்கமாக இருந்தவரும் அன்றை இளைஞர்களின் மனதில் நீங்க இடம்பெற்று வருமான திராவிட சிந்தனைகளின் முன்னோடி கவிஞர் மீரா அவர்களுக்கு இந்த பார்வை ஏன் செல்லவில்லை. பகுத்தறிவும் தமிழ் வாழ்வின்  பண்பாட்டு நுட்பங்களை எல்லாம் திறம்பட கதைகளாக எழுதி மறைந்து போன 
கு .அழகிரிசாமி அவர்கள் மீது ஏன் இந்த பார்வை செல்லவில்லை. சந்தர்ப்பவாத கூட்டுகளுக்காக இத்தகைய விளம்பரங்களைச்செய்துகொண்டு  வரும் இன்றைய அரசு திராவிட இயக்கத்தை தோள் கொடுத்து தாங்கி நின்ற ஒரு பாரம்பரியத்தையே கைவிட்டு செல்கிறது என்பதை தவிர இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை .

குறிப்பாக இன்று மாறிவரும் நவீன இலக்கியப் போக்குகளை மேற்சொன்ன இருவரும் மாற்றியமைத்து இருக்கிறார்கள். அதை எடுத்துச் செல்லவும் அத்தகைய கலை இலக்கிய பண்பாட்டை வளர்த்தெடுக்கவும் இன்றைய அரசிற்கு அதை எடுத்துச் சொல்லவும் ஆட்கள் இல்லாமல் போய்விட்டது காலத்தில் பெரிய இழப்புதான்.
CMOTamilNadu  M. K. Stalin

கே.எஸ். இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-9-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...