#*தேர்தல் 2024இல் கட்சிகள் தவறியவை*
#*2026 சட்டமன்றத்தேர்த்ல்*
*திமுக-அதிமுக-பாஜக பார்வை*
——————————
கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் வரை அதிமுக ஆட்சி செய்து கொண்டு இருந்த தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெறும் எதிர்கட்சியாகவே தேங்கிப் போன வரலாற்றை நாம் பார்த்து வந்துள்ளோம்.
இதன் உண்மையான அதிருப்தி என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்ப அரசியல் கட்சியாக சுருங்கிப் போனதைப் புரிந்து கொண்டு தான் தமிழக மக்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற குடும்ப வாரிசு அற்றவர்களை ஆதரித்து தங்கள் வாக்கை எதிரொலித்தார்கள்.
அவற்றை கவர்ச்சி அரசியல் என்று வர்ணித்த பல்வேறு முற்போக்கு அரசியல்ப் பொருளாதார அறிவு ஜீவிகள் கூட இறுதி காலம் வரையிலான எம்ஜிஆர்,ஜெயலலிதாவின் வெற்றியைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரின் மறைவிற்குப் பின்பே மீண்டும் தனது ஆட்சிக் கட்டிலை பழைய திராவிட அரசியல் எச்சங்களின் மூலம் மீட்டெடுத்துக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகம் இன்றும் தன் குடும்ப அரசியல் அதிகாரங்களின் மீது எளிய மக்கள் கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்க்க முடியவில்லை.
அந்த வகையில் இன்றைய ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இல்லாத ஊரில் இலுப்பைப்பூச் சக்கரையாக தான் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இப்படியாக ஆளும் வாய்ப்பு கிடைத்தபோதும் கூட திமுகவின் கொள்கைப் பூர்வமான அதன் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற தாரக மந்திரத்தை ஆட்சி கட்டிலில் பயன்படுத்தாமல் மீண்டும் மீண்டும் ஸ்டாலின் அரசு தன் குடும்ப நலனாகவே திமுகவை கலைஞர் வாங்கி கொடுத்துவிட்டு போன அவரின் வாரிசுகளின் அதிகாரச் சொத்தாகவே பாவிக்கிறது.
அதற்கான நேற்று கலைஞர் காலம வரை திமுகவை திட்டி தீர்த்த பல கால் நக்கிகளை விசுவாசிகளை தங்களுக்குள் இணைத்துக் கொண்டு ஒரு தனி நிறுவனமாகவே வணிக வர்த்தக அரசியல் சுயலாபங்களைப் பெருக்கி கொண்டு அதன் பலத்தில் வாழ்ந்து வருகிறது.
குறிப்பாக எல்லாச் சாதியிலும் அரசியல் அதிகாரம் பணபலம் மற்றும் பொதுச் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்கள் மாவட்டங்கள் தோறும் ஆளும் அரசாங்கத்திற்கு விசுவாசம் உள்ளவர்கள் தான் இன்று திமுகவில் இருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிவிட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் கிராமப்புறத்தில் பேசிக் கொள்வது போல உங்கள் ஆட்சிக்கு ஒரு அரை பரீட்சை போன்றது தான்.
ஒரு 2026ல் நீங்கள் சந்திக்க போவது முழுப் பரீட்சை.
ஒரு பக்கம் பாரதிய ஜனதா கடந்த கால திமுக ஆட்சின் அதிருப்திக்குள்ளே வெவ்வேறு வகையில் கால் ஊன்றி வருகிறது. அது சாதியங்களில் கூட்டுத் தொகையை மிகச் சாதுரியமாகக் கையாளுகிறது.
இன்னொரு புறம் நடிகர் விஜய் மிக தீவிரமாக அம்பது லட்சம் உறுப்பினர்களோடு 2026 தேர்தலைச் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த முறை பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை. அதேபோல் விருதுநகரில் நடிகை நாயுடு என பாஜக தவறாக கருதினாலும் அங்குள்ள மக்கள் ராதிகா அதிக வாக்குகள் பெறறோ ஜெயிக்க முடியாது. அந்தத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிராக நிறுத்தி இருந்தால் முடிவுகள் சாதகமாக இருந்திருக்கும்.
அதேபோல் ஶ்ரீபெரும்தூரில் டி ஆர் பாலுவிற்கும் வலுவான பாஜக சார்பில் எதிர் வேட்பாளர் இல்லை. சிவகங்கையில் இதே நிலை… டாக்டர் கிருஷ்ணசாமியை பாஜக தன் கூட்டணியில் சேர்க்க தவறி விட்டது.
அந்தந்த தொகுதியில் வாழும் சமுதாய மக்களுக்கு ஏற்றவாறு வேட்பாளரை நிறுத்த பிஜேபியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தவறிவிட்டது.
அதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவும் பல தொகுதிகளில் சரியான பொருத்தமான அதிமுக வேட்பாளர்களை அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதில் சாதிரியம் இல்லாமல் ஆகிவிட்டார்.
குறிப்பாக தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை.
இப்படி என்றாலும் ; வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு மிக சுலபமாக இருக்கப் போவதில்லை . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக சார்ந்த வாக்கு வங்கி வலுவாகவே இருக்கிறது. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் முன்னும் பின்னுமான குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களே இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன்.
அந்த வகையில் இனியுமான இரண்டு வருடத்திற்கு பின் வரப்போகும் 2026 தேர்தல் திமுகவிற்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும். புதிய பரிணாமங்கள் உருவாகும்.
ஆபாசம், பொய், புரளி பேச்சுக்களை கேட்ட தமிழகம்….
தமிழக அரசியலில்" intellectual" என்ற அதித அறிவு பூர்வமான பேசுபவன் அல்லது "think tank" என்று இல்லாமல்
கொஞ்சம் மாசாலா கலந்து அரசியல் தான் தமிழ் மண்ணுக்கும் எடுபடும்.
அதுமட்டுமின்றி அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் தரும்.
சினிமாவை பார்த்து அரசியல் கற்ற நம் மக்களுக்கு அறிவுபூர்வாமன கருத்து data, factor என்றொருவர் பேசினால் அது எரிச்சலை ஏற்படுத்தும்.
கடல்களைத் தேடி எத்தனை நதிகள் போனாலும் அவை தன் நன்நீரத் தன்மையை இழந்து உப்பு தன்மையைத் தான் பெறும் . இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்த்தால்தான பலவிதமான விடைகள் கிடைக்கும்.
#தேர்தல்2024இல்_கட்சிகள்தவறியவை
#2026சட்டமன்றத்தேர்த்ல்
#திமுக_அதிமுக_பாஜகபார்வை
#நாடாளுமன்றதேர்தல்2024
#தமிழகதேர்தல்கள்
#தமிழகஅரசியல்
#ParliamentElection2024
#tamilnadupolitics
#TamilNaduElections
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-4-2024.
No comments:
Post a Comment