#*ஈழவேந்தன் மறைவு*..
————————————
என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்
ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மாணிக்கவாசகர் கனகேந்திரன் (ஈழவேந்தன்)
14 செப்டம்பர் 1932 -
28 ஏப்ரல் 2024
கடந்த 1983 இல் என் ஏற்பாட்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில்
என் சீனியர் ஆர். காந்தி தலைமையில் ஈழத்தமிழர் துயர் குறித்து பேசினார். அதே ஆண்டு கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேச அழைத்து சென்றேன். நெடுமாறன், வைகோ இதில் பங்கேற்றனர். எனது கிராமத்தில் தங்கி எங்கள் பம்பு செட் கிணற்றில் குளித்து சந்தோஷ பட்டார். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டார் . ஆய்வு கட்டுரையை வாசித்தார்.
கொழும்பு மத்திய
வங்கியில் பணி புரிந்து கொண்டே தமிழரசுக்கட்சி மேடைகளில் முழங்கிய
அந்தக் குரல் ஓய்ந்து விட்டது.
நம்ப முடியவில்லை.இறுதியாக 2008இல் கொழும்பில் சந்தித்தது…
இன்றும் மனத்திரையில்.
தமிழ் தமிழ் தமிழீழம் என்று இறுதிவரை
செயற்பட்டவர்.
தந்தையாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் அன்பு மகள்
யாழினி அரசேந்திரன் மற்றும் குடும்பத்தவரின் துயரில் நானும் பங்கு
கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்,
#ஈழவேந்தன் #ஈழம்
No comments:
Post a Comment