எலக்சன்ல யார் ஜெயிச்சு வருவாங்க எத்தனை சீட்டு வருவாங்கன்னு டெலிபோன்ல நண்பர்கள் கேட்கிறார்கள்.
யார் ஜெயிச்சு வந்தா மட்டும் என்ன ஆகப்போகுது! 50 வருஷமா கெடக்கிற பிரச்சனை கெடப்பிலதான் இருக்கும்.
அது காவேரி பிரச்சனையாகட்டும் கச்சத்தீவுப் பிரச்சனையாகட்டும் இல்ல சேது சமுத்திரக் கால்வாய் திட்டமாகட்டும் இல்ல தமிழ்நாட்டின் நலன்கள் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஆகட்டும் இங்கிருந்து ஜெயிச்சு போற யாரராலும் எதுவும் ஆகப் போறது இல்ல .
எல்லா கூட்டத்தொடர்க்கும் விமானத்தில் போவாங்க வருவாங்க அலவன்ஸ் வாங்கிகிட்டு நாடாளுமன்றத்தில் கொட்டாவி விட்டு தூங்கி எழுந்து வர வேண்டியது தான்.
ஜெயிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. செயல்பாட்டில் ஊக்கமும் ஒருமித்த கருத்தும் இல்லாமல் இங்கு ஒன்றும் நிகழாது. இது வெறும் ஒரு அலங்காரப் பதவிதான்.
எந்த விதத்திலும் ஒரு எம்பி தனது தொகுதிக்கான காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியாது. மசோதாக்களை எதிர்த்தோ ஆதரித்தோ இரட்டை வேடமிட்டு
வேண்டுமானால் சிலவற்றைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்.
ஆகவே இந்த எம்பி பதவி என்பது பல்லு இல்லாதவனுக்கு பட்டாணி கடலையைக் கொடுத்த மாதிரிதான்.
ஒரு பதவி என்றால் அதற்குரிய கம்பீரமும் நடத்தையும் செயல் திறனும் சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் அது இல்லாமல் பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்கிப் பதவியில் அமர்ந்தால் அதற்கு மக்களிடத்தில் என்ன மரியாதை இருக்கும்.
ஆகவே யார் ஜெயித்தால் என்ன எத்தனை எம்பி வந்தால் என்ன என்று ஒன்னும் ஆகப்போறது இல்லை ஐயா என்று சொல்லி விட்டேன்.
அதுபோக ஊடகங்களில் கருத்துக்கணிப்பு என்று சொல்லுகிற அனைவருமே திமுகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஏதோ இவர்கள்தான் ஊடக நடுநிலைச் செய்தியாளர்கள் போல நிறைந்து வழிகிறார்கள்.
எத்தனை சப்பை கட்டுதல் எத்தனை விதமான மூடு மந்திரங்கள் எல்லாவற்றிற்கும் பின்னாலான காரிய பின்னணி . இவர்களையெல்லாம் தேர்தல் கணிப்பாளர்கள் என்றோ சிந்தனையாளர்கள் என்றோ ஏற்றுக் கொள்ள முடியுமா? ஊதுற சங்க ஊதி வைக்கக்கூடிய ஆண்டிகள் தான் இந்த திமுக செய்தியாளர்கள்.
எனக்குத் தெரிந்து தேர்தலை நடுநிலையாக பொதுவாக சமூக பார்வையுடனும் இன்று நடந்து இருக்க கூடிய மாற்றங்களுடன் கூடிய சில முன்னெடுப்புகளை இணைத்து பேசக்கூடிய ஒரு அறிவார்ந்த ஒரு ஊடகவியலாளரை நான் பார்க்க முடியவில்லை.
அனைத்தும் விலை போன காலத்தில் எம்பி பதவி யாரிடம் இருந்து என்ன பயன். ஒட்டுமொத்த பங்குதாரர்கள் தேர்தலை நடத்தி தங்கள் வணிகத்தை செய்யப் போகிறார்கள்.
இதில் நாம் கருத்து கூற என்ன இருக்கிறது.
No comments:
Post a Comment