#*கச்சத்தீவு*
*பிரச்சனையில்உண்மையில் நடந்தது என்ன*?
கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது நடந்த பல்வேறு உண்மை நிலவரங்களை மேலும் அந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த அனைத்தையும்” கனவாகிப் போன கட்சத் தீவு” என்கிற தலைப்பில்
ஒரு நூலாக எழுதி அதை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியில் நிகழ்ந்த ஒன்றை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைய பாரதிய ஜனதா கட்சி அன்றைக்கு ஜன சங்கமாக இருந்தபோது அதன் தலைவர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கச்சத்தீவு விவகாரத்திற்கான தரவுகளை என்னிடம் இருந்து வாங்கித் தான் அது யாருக்கான உரிமை என்கிற முறையில் அன்றைக்கு வழக்குத் தொடுத்தார்.
இன்றைக்கு ஒருவருக்கொருவர் கச்சத்தீவு விவகாரத்தில் கொந்தளிக்கிறார்கள் .
அக்காலத்தில் கனவாகிப்போன கட்ச தீவு நூலை படித்த கலைஞர் அவர்களே “ஆமாம் பா அப்படித்தான் நடந்து விட்டது” என்று என்னிடம் கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் நாளை ஊடகங்களில் நான் கொடுத்திருக்கும் கட்சத்தீவு குறித்த நேர்காணல் இந்த பிரச்சனைகளின் உண்மை தன்மையை காய்தல் உவத்தல் இன்றி அதன் நிதர்னத்தை முன்வைக்கும் படியாக இருக்கும் என்பதைக் கூறிக் கொள்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அதை கண்டு தெளியும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
#கச்சதீவு
#Katchatheevu
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-4-2024.
No comments:
Post a Comment