ஏப்ரல் 28 - பிரபல T.V.S. குழுமத்தின் நிறுவனர் T.V. சுந்தரம் நினைவு நாள் இன்று (1955 ).
இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 1877ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிறந்தார்.
இவர் வழக்கறிஞர் ரயில்வே குமாஸ்தா வங்கி ஊழியர் என வேலை செய்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தொழில்துறையில் இறங்கினார். முதலில் தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரத்தை தொடங்கினார்.
இவர் 1911ல் தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1912ல் தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கி தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.
பேருந்து கட்டணம் இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம் ரசீது வழங்குவது ஆகிய நடைமுறைகளை கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் ரப்பர் புதுப்பிப்பு ஆலை தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட் சுந்தரம் மோட்டார் லிமிடெட் வீல்ஸ் இந்தியா ப்ரேக்ஸ் இந்தியா டி.வி.எஸ் இன்ஃபோடெக் சுந்தரம் ஃபைனான்ஸ் என டி.வி.எஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
டி.வி.சுந்தரம் ஐயங்கார் தனது 78ஆவது வயதில் (1955) காலமானார்
@aratnam @tvsmotorcompany
No comments:
Post a Comment