Monday, April 15, 2024

தேர்தல் சித்து விளையாட்டு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது... இளம் பருவமெல்லாம் நேர்மை அரசியல் பயணம் செய்த எங்கள் தற்போதைய மன உணர்வுகள்…..

தேர்தல் சித்து விளையாட்டு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது... இளம் பருவமெல்லாம் நேர்மை அரசியல் பயணம் செய்த எங்கள் தற்போதைய மன உணர்வுகள்…..

கூட்டம் சேர்க்க ஒரு தலைக்கு 500 ரூபாயாம்.. பப்ளிக்காக காசு, மது, பிரியாணி பொட்டனம் கொடுக்கும்.. பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு   நோக்கி பவுசாக பறக்கும் தொண்டர்கள்.. மனசாட்சி அற்ற நிலை…

எங்கோ படித்தது நினைவில் வருகிறது… 

வாழ்க்கை என்பது என்ன
உங்களுக்குள் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்

வாழ்க்கை என்பது என்ன
உயிரோடு இருப்பதா
மகிழ்ச்சியாக இருப்பதா

பணம், புகழைத் தேடி தலைதெறிக்க ஓடுவதாதோல்விகளில் கற்றுக் கொள்வதா
வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும்
பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, 
அழ வைக்கிறது.
முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்.

பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது  தன் பணியை செய்து கொண்டிருக்கிறது.நாமும் நம் பணியை சரியாக செய்தால் வெற்றி நிச்சயம்.


No comments:

Post a Comment

All face storms in life.

  All face storms in life. Some are more difficult than others, but we all go through trials and tribulation. Nobody is exempt from the tria...