இன்று கிராமத்தில் பொன் ஏர் கட்டல் …
கிராம்தில் இன்றைய பொழுது…. சித்திரை முதல் நாள் நீண்ட காலத்துக்கை பின் கிராமத்தில் இருப்பு.
அக்காலத்தில் சித்திரை முதல் நாள்,முதல்நாள்இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.
அறுவடைக் காலம் நிறைவடைந்து. விதைப்பு காலம் தொடங்குவதற்கு முன் சித்திரை மாதம் 1நாள் ஏர் பூட்டி உழும் நிகழ்விற்கு பொன் ஏர் கட்டுதல் என்று பெயர். மாடுகளை & tractor கழுவி மாலை அணிவித்து நிலத்தை உழும் கலப்பை நுகத்தடி போன்றவற்றிற்கு மஞ்சள் திலகமிட்டு பூமித் தாயை வணங்கி அந்த ஆண்டின் முதல் ஏர் உழவைத் தொடங்கி வைப்பர்.
பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் வெல்லம் தேங்காய் சேர்த்து வயலுக்கு வருபவர்களுக்கு கொடுப்பார்கள். நாட்டுப்புற பாடல்களில் உழவர் பாட்டில்
பொன் ஏர் பாட்டும் உண்டு.
பொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் உழவன்தான் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்.
#விவசாயம் #Farmers
••••••
சில காலங்களுக்கு முன்பு நம்மை வஞ்சித்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். அவர்களை எல்லாம் மனிதர்கள் என்று ஒரு காலத்தில் மனதில் தூக்கி வைத்திருந்தோம்.
ஆனால் காலமும் இயற்கையும் பொன் போன்றது மட்டுமல்ல பொல்லாததும் கூட. அப்படியான வஞ்சகர்களுக்கு எந்த நன்றியும் அற்றவர்களுக்கு தன்னைத்தானே மோகிக்கும் சுயநல அற்பர்களுக்குப் பாடம் கற்பிப்பதும் கூட.
இயற்கை அம்ம உலகம்.
நேற்று மாலை சங்கரன்கோவிலில் கண்ட காட்சி மனதில் பட்டது. விளம்பர வெளிச்சமற்ற வெள்ளந்தி மக்கள் மேன்மையானவர்கள்…..
••••
#குருஞ்சாக்குளம்கிராபைட்கனிமம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-4-2024
No comments:
Post a Comment