இப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் பாய்ந்து பாய்ந்து செல்கிறார்கள்.
இது அவர்களுக்கான வசதி வாய்ப்பும் உரிமையும் கூட.
ஆனால் கலைஞர் இருந்தவரை தனது 98 வது வயது வரையும் கூட சாலைகளில் தான் பயணித்தார்.
ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.
கலைஞரின் நள்ளிரவு கைதிற்குப் பின்பு என்று நினைக்கிறேன். அனேகமாக
2001 ஆக இருக்கலாம். கலைஞர் கோவா செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். என்னையும் உடன் அழைத்தார்.உடனே முரசொலி மாறன் அவர்கள் உங்களுக்கு ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.
எனது தனி விமானமா. அதெல்லாம் வேண்டியதில்லை நான் எப்போதும் ரயிலில் தான் போவேன் கொஞ்சம் தொலைதூரமானாலும் என்னுடைய பிரச்சார வேனில் செல்வது தான் எனது வழக்கம். அப்படியும் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு தூர தொலைவு செல்ல வேண்டும் எனில் பயணிகள் விமானத்தை தான் பயன்படுத்திக் கொள்வேன் என்று அந்த தனி விமானப் பயணத்தை மறுத்தார்.
அப்படியான பல தலைவர்களும் இருந்தார்கள். இப்போது வட இந்தியத் தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னை போன்ற இடங்களுக்கு வர வேண்டுமென்றால் தனி விமானம்,ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது சரிதான். அது காங்கிரஸோ பாஜகவோ யாராக இருந்தாலும் சரி.
ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்கள் பத்து மைலுக்குள் தாங்கள் செய்ய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்திற்கு என தனி விமானம்,ஹெலிகாப்டரில் வந்தா பந்தாக் காட்டுவது?
இது அவர்களின் செல்வாக்கை
மக்களின் முன்பு பெருமிதமாக நிலை நாட்டுவதன்றி இவர்களையெல்லாம் மக்கள் தலைவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்களால் மக்களுக்கு எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதுதான் இந்த ஹெலிகாப்டர் பிரச்சாரங்களின் பின்னணி.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மக்களின் முன் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்வது அவர்களை கவர்ந்திழுக்க உதவும் என்று நினைக்கிறார்கள். இது என்ன சினிமா காட்சியா? இவர்கள் மக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாளைக்கு மக்களுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்றால் இவர்களெல்லாம் ஹெலிகாப்டரில் வந்து உதவி செய்வார்களா? 40 சதவீதத்திற்கு மேல் வறுமையில் இருக்கும் மக்களின் முன்பு இந்த பந்தா தேவை தானா?
கலைஞர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எல்லாம் ஹெலிகாப்டரில் ஒருபோதும் சென்றதில்லை.
எம்ஜிஆர் விமான பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறார். எனக்கு தெரிய ஜெயலலிதா பின் ஸ்டாலின் மட்டுமே தனிவிமானத்தில் பயணித்து இருக்கிறார்.
ஆனால் இந்த தேர்தலில் இந்த ஹெலிகாப்டர் கலாச்சாரம் மக்களுக்கான தலைவர்கள் எளிமையாக இருக்க வேண்டியது இல்லை கவர்ச்சிகரமாகவும் மிரட்டக்கூடிய அளவில் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் வளர்ந்து நிற்கிறது.
ஜனநாயகத்தில் மக்கள் தான் வளர்ச்சி அடைய வேண்டும் தலைவர்கள் அல்ல. அவர்களது பணி எளிமையான தொண்டு மற்றும் மக்களுக்கு உரிய நன்மைகளை சதா சிந்தித்து கொண்டு இருப்பது தனது வாழ்வை
ஒரு கட்டுக்குள் வைத்து பொதுச் சேவை செய்வது தங்களது வாரிசுகளை அரசியலில் இறக்கிவிடாமல் இருப்பது போன்ற அறங்களை உடையது. அப்படியான தலைவர்கள் தான் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடியுரமாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு வரைக்கும் அவர்களுக்கான மரியாதை எந்த வகையிலும் குறைவில்லாமல் அவர்கள் இருந்தாலும் மறைந்தாலும் பேசப்படுகிறார்கள்.
#parlimentelection2024
#நாடளுமன்றதேர்தல்2024
@mkstalin @KanimozhiDMK
@EPSTamilNadu
@annamalai_k @VanathiBJP
@BJP4TamilNadu
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2024.
No comments:
Post a Comment