Thursday, April 11, 2024

#ParliamentElection2024 #நாடளுமன்றதேர்தல்

#தேர்தல்_சித்துவிளையாட்டுகள் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கிறது... இளம் பருவமெல்லாம் நேர்மை அரசியல் பயணம் செய்த எங்கள் தற்போதைய மன உணர்வுகள்…..

கூட்டம் சேர்க்க ஒரு தலைக்கு 500 ரூபாயாம்.. பப்ளிக்காக காசு பணம் பசை மது என கொடுக்கும்.. பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கடைகளை நோக்கி பவுசாக பறக்கும் தொண்டர்கள்..  ஓட்டு விற்பனை என அரசியியல் brokerகளின் பல வகை வியாபாரங்கள்…..

திமுக இந்தியக் கூட்டணி வேட்பாளர்கள் தூத்துக்குடி தொகுதி திருவண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் கரூர் ஓசூர் மயிலாடுதுறை சிவகங்கை போன்ற பல தொகுதிகளில் வாக்கு சேகரிக்கப் போகும் போது அங்குள்ள மக்கள் எதிர்க் கேள்வி கேட்டு மறியல் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி கனிமொழி ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு சிவகங்கை சிதம்பரத்தின் மகன்  கரூர், தென்காசி, மதுரை, என இப்படி முக்கியமான வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அடங்குகிறார்கள். இது எப்படி என்றால் 1996 இல் அதிமுகவைச் சேர்ந்த  வேட்பாளர்கள் பலர் வாக்கு கேட்டு போனபோது ஏன் நாவலர் நெடுஞ்செழியனைக் கூட மக்கள் பல கேள்விகளைக் கேட்டு எதிர்வினை செய்து உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று விரட்டிய சம்பவங்கள் என் ஞாபகத்தில் வருகிறது. அதிருப்தி என்பது அதிருப்தி மட்டுமே!போக இவர்களின் செல்வாக்கு எப்போதும் மக்களுக்கு ஆனது இல்லை  என்பதை மக்கள் சரியாகத்தான் புரிந்து இருக்கிறார்கள். பொறுத்திருப்போம்.

#ParliamentElection2024
#நாடளுமன்றதேர்தல்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-4-2024.


No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...