Thursday, April 4, 2024

கச்சத்தீவை கொடுத்து இந்தியா பெற்ற வெறும் மணல்மேடான 6,500 சகிமீ பரப்பளவுள்ள 'வாட்ஜ்பேங்க்' பயன் அற்ற மணல் மேடு இந்தியா பெற்றத்து.

கச்சத்தீவை கொடுத்து இந்தியா பெற்ற வெறும் மணல்மேடான  6,500 சகிமீ பரப்பளவுள்ள 'வாட்ஜ்பேங்க்' பயன் அற்ற மணல் மேடு  மன்னார் அருகே கன்னியாகுமரிக்கு தென் கிழக்கில்  இந்தியா பெற்றது.

இரண்டாவது ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லையை வரையறுத்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கும் இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் டபிள்யு. டி.ஜெயசிங்கேவும் கையெழுத்திட்டனர்.
இதற்குப் பிறகு கேவல் சிங், டபிள்யு டி ஜெயசிங்கேவுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் வாட்ஜ் பேங்க் பகுதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டார்."வாட்ஜ் பேங்கில் மீன் பிடிப்பது தொடர்பாக இரு அரசுகளுக்கும் இடையில் பின்வரும் புரிந்துணர்வு எட்டப்பட்டிருக்கிறது.




1. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாட்ஜ் பேங்க், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியின் மீதும் அதன் வளங்கள் மீதும் இந்தியாவுக்கு முழு இறையாண்மை உண்டு.
2. இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளோ, மீனவர்களோ வாட்ஜ் பேங்க் பகுதியில் மீன் பிடிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா உரிமம் வழங்கும் படகுகள் மட்டும் அங்கே மீன் பிடிக்கலாம். இந்த காலகட்டத்திற்குப் பிறகு வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் மீன் பிடிக்கக்கூடாது.
3. இதற்காக இந்தியா விதிக்கும் கட்டணத்தையும் நிபந்தனைகளையும் இலங்கை மீன்பிடிப் படகுகள் ஏற்க வேண்டும்.
4. வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியமோ, பிற தனிமங்களோ கிடைக்கிறதா என இந்தியா ஆராய நினைத்தால், அது பற்றி இலங்கைக்குத் தெரிவிக்கப்படும். இந்தியா சொல்லும் தேதியில் இலங்கை படகுகள் வருவது நிறுத்தப்பட வேண்டும்.
5. வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கையின் படகுகள் மீன் பிடிப்பது தடுக்கப்படுவதால், புதிதாக மீன்பிடி மண்டலங்களை உருவாக்க இந்தியா இலங்கைக்கு உதவிசெய்யும்" என அந்தக் கடிதத்தில் கூறினார்.
இதனை ஏற்பதாக டபிள்யு. டி. ஜெயசிங்கே பதில் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த ஒப்பந்தத்தின்படியே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆனால் இதனால் எந்த  வகையிலும் லாயக்கோ, லாபமோ இந்தியாவுக்கு இல்லை.
#கச்சதீவுசிக்கல்
#Katchatheevu 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-4-2024.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...