Monday, April 1, 2024

#*ஒருவர் தனது செயலாலே அறியப்படுவார் அன்றி பிறப்பால்அல்ல*. *சிலர் போல நான் நடிக்க மாட்டேன். ஆம், நான் தெலுங்கு பேசும் தமிழன். நான் மறுக்கவில்லையே*…⁉️ கேஎஸ்ஆர்-KSR

#*ஒருவர் தனது செயலாலே
அறியப்படுவார் அன்றி
பிறப்பால்அல்ல*. 
*சிலர் போல நான் நடிக்க மாட்டேன். ஆம், நான் தெலுங்கு பேசும் தமிழன். நான் மறுக்கவில்லையே*…⁉️ 
————————————
என்னைத் தமிழரா என்று கேட்கிறார்கள். தெலுங்கு ஆரிஜன் என்று சமீப நாட்களில் சொல்கிறார்கள் சரிதான் ஏற்றுக்கொள்கிறேன். சிலர் போல நான் நடிக்க மாட்டேன். ஆம், நான் தெலுங்கு பேசும் தமிழன். நான் மறுக்கவில்லையே…⁉️ பல தெலுங்கு பேசும் ஆளுமைகள் தமிழ்மொழி வளர்ச்சி,தமிழக முன்னேற்றத்தில் கடமை ஆற்றியும் ஆற்றிக்கொண்டும் உள்ளனர் . இதில் என்ன பிரச்சனை உள்ளது. 

காவிரி நதிநீர்த் தாவாவில் இருந்து ஈழப் பிரச்சனை வரை கடந்த 53 ஆண்டுகளாக நான் அரசியலில் ஈடுபட்டுத் தமிழ் மக்களுக்காக தமிழர் பிரச்சினைகளுக்காக எங்கள் பகுதியில் உள்ள அச்சன் கோவில் -பம்பயாறு- தமிழக வைப்பாறு இணைப்பு, கண்ணகி கோவில், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை கூடங்குளம் அணு மின்னசார ஆலை வரை என சில சுற்றுசூழல் பாதுகாப்பு, மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சிமலை என போன்ற பல நீர்வரத்து உரிமைகளுக்காகவும், பல விவகாரங்கள வரை உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற படிகளில் ஏறி 45 வழக்கில் ஈடுபட்டு சில தீர்ப்புகளை பெற்றவன். தமிழக நலம் நாடும் எனது எழுத்துக்கள், பதிவுகள். விவசாய போராட்டங்கள், கிரா-கதைசொல்லி  இதழ் ஆசிரியர் என பல தள செயல்பாடுகள்…ஈழத்தமிழர் சிக்கல்….

இதுவரை தமிழ்நாட்டின் அரசியலில் எனக்கு பொது வாழ்வில் எந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் சரி வழங்கப்படாமல் இருந்தாலும் சரி தமிழர் நலன்களுக்காக தொடர்ந்து போராடி வருபவன்.

இந்திய தேசிய நதிகளை கங்கை தென் குமரியை தொடமாறு இணைக்க வேண்டும் காவேரி நீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட வேண்டும் கேரளாவின் மேற்கு நோக்கி பாயும் west flowing rivers தமிழகத்திற்கு திருப்பி விடுதல் குறித்த பொதுநல வழக்குகளிலும்சுற்றுச்சூழல் சார்ந்த பல வழக்குகளிலும் கூடங்குளம் அணுமின் நிலைய என நான் முதன்மை பங்கு பெற்று பணியாற்றி இருக்கிறேன். இதையெல்லாம் நான் செய்திருக்கிறேன்  என்பதை அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மேலும்ஊடகங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். என் வாழ்நாள் அரசியல் அடையாளமும் மேற் சொன்ன விதத்தில்தான் இருந்து வருகிறது. மட்டுமல்ல இனியும் அந்தப் பணிகளை மேற்கொண்டு செய்து கொண்டே தான் இருப்பேன்.

இதைவிட  நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ள  வேறு என்ன  வேலைகள் செய்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கிறார்களா?

பச்சை தமிழன் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் தங்களுடைய அரசியல் போராட்டத்தில் என்ன பங்கு பற்றியிருக்கிறார்கள் என்று சொல்லட்டும்.

அவமானத்தை 
அனுபவமாகக் கொள்ளுங்கள் !
உதாசீனங்கள் பலநேரங்களில்
மன உளைச்சலை தரும்
உயிர்ப்போகும் வலியை உண்டாக்கும்...
ஆனால்
கொஞ்சம்நாட்களுக்கு பிறகுஓர் தெளிவை கொடுத்து
உங்களை அமைதிப்படுத்தும்
இவையெல்லாம் தேவையற்றது என....

A problem is a chance for you to do your best.

ஒருவர் தனது செயலாலே அறியப்படுவார்அன்றி பிறப்பால் அல்ல.

I was born in a particular religion, in a particular community. I had no choice, no say in it  It has been a life of privilege, one I don't know if I deserved. 
I hope I can decide what I will die as: and this is what I want it to be - 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
1-4-2024.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...