நேற்று தென்காசி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட குருஞ்சாக்குளம் கிராமத்தில் நேற்றைய நாளில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி கட்டியும், பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்தும் கிராபைட் திட்டத்தை எதிர்த்தார்கள்.
கிராபைட் எதிர்ப்பு
நேற்று குருஞ்சாக்குளம் மற்றும் பாதிப்பு அடையும் மற்ற ஊர்களில் கருப்பு பட்டை அணிந்து வாக்கு செலுத்தினர்.
நான்கு மணி வரை கிராமத்தில் உள்ள 710 வாக்குகள் உள்ள பூத்தில் வாக்கு செலுத்த செல்லவில்லை. இதனால் பதறிப்போன அதிகாரிகள் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, தென்காசி மாவட்ட அதிகாரிகள் என்னிடம் பேசிய பின்னர் நான் தலையிட்டு பொது மக்களை சமரசம் செய்து வாக்கு செலுத்த வைத்தார்கள்.
பிறகு மாலை வாக்கு சாவடிக்கு சென்று அமைதியான முறையில் வாக்கு செலுத்தினார்கள். இதனை நேரில் சென்று நான் கண்காணித்தேன்.எந்த அரசியல் சார்பும் இல்லாமல் ஊர் நலன் கருதி செய்ய வேண்டிய கடமை.
No comments:
Post a Comment