Saturday, April 13, 2024

#*கிராம ஆலோசனை கூட்டத்துக்கு* *தடையா*⁉️

#*கிராம ஆலோசனை
கூட்டத்துக்கு* *தடையா*⁉️
————————————
எனது சொந்த ஊரான குருஞ்சாக்குளம் கிராமத்தில்  கிராபைட் கனிமம் கிடைக்குறது என்கிற நிலையில் அதைப் பற்றியான பாதகங்கள்- பிரச்சனையை கலந்து ஆலோசிப்பதற்காக சுற்றுபட்டில் உள்ள 40 கிராம மக்களை அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டம் குருஞ்சாக்குளத்தில் நடத்துவதற்கென அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தோம்.

இன்றைய 13ஆம் தேதி மாலை அந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தை அனுப்பியிருந்தேன். எப்படியும் அனுமதி வந்துவிடும் இது வெறும் மக்கள் ஆலோசனை கூட்டம் தானே அதுவும் ஒரு ஜனநாயக உரிமை உள்ள ஆலோசனைக் குழுக்கான அனுமதி தானே என்கிற நம்பிக்கையில் சென்னையில் இருந்து ஊருக்கும் புறப்பட்டு விட்டேன். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு காலையில் அந்த ஆலோசனை கூட்டம் நடத்தக் கூடாது என்று மறுப்பு ஆணை வந்துள்ளது.

இதை எப்படி எடுத்துக் கொள்வது
என்று தெரியவில்லை.
 ஊர் பொதுமக்களாகக்  கூடுவது  போக குறிப்பிட்ட அந்தப் பகுதி வாழ் மக்கள் நலம் சார்ந்து அங்கு  வரப்போகும் கனிம ஆய்வுகளைப்பற்றிக் கலந்தாலோசித்து அத்திட்டத்தினால் ஏற்பட போகும் பாதக அம்சங்களைப் பேசுவதுஎன்ன தேச  விரோத செயலா. இதில் என்ன தவறு இருக்கிறது . அரசின் இந்த போக்கு மக்களுக்கு எதிரானது இல்லையா? கூட்டம் கூட்டமாக தேர்தல்ப் பிரச்சாரங்களுக்காக அனைத்து கட்சியினரும் மக்களை அமர வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் யார் அனுமதி வழங்குகிறார்கள்.

யாரையும் எதையும் செயல்படுத்த விடாத இந்த ஏதோச்சதிகாரப்போக்கு்தான்தோன்றி தனமான அதிகார மமதையையும் கூடவே அதன் அராஜகத்தன்மையைத்தான் காட்டுகிறது.

#குருஞ்சாக்குளம்கிராபைட்கனிமம்
#kurunjakulamGraphite

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
13-4-2024.




No comments:

Post a Comment

2023-2024