Monday, February 24, 2025

#*எனது வாழ்கை பயணம் “#சுவடு”தொடர்*

#*எனது வாழ்கை பயணம் “#சுவடு”தொடர்*
————————————
எனது வாழ்கை பயணம், அரசியல் வாழ்வில் நான் கண்ட சந்தித்த ஆளுமைகள் அனுபவங்கள் முக்கியமான சம்பவங்கள் யாவும் “சுவடு” என்கிற தலைப்பில் இந்து தமிழ்த் திசை இணைய இதழில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நீண்ட தொடராக வர இருக்கிறது.

1967 லிருந்து சரியாகச் சொன்னால் அதற்கு முன்பு இருந்தும் கூடத் துவங்கித் தமிழக அரசியல் வரலாறும் இந்திய அரசியல் வரலாறும் அதை ஒட்டி நடந்த உலக அரசியல்களையும் உள்ளடக்கி அறியாத பக்கங்கள் பலவற்றுடன்  இந்தத் தொடர்  உங்களுடன் உரையாட பகிர்ந்து கொள்ள வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

I am happy to share my journey in politics , 54years through a series of articles in the internet version of the Tamil Hindu daily. Having witnessed and experienced the evolving landscape of Indian and Tamil Nadu politics since 1967, I will reflect on key events, political figures, and vital issues that have shaped our society. This series will revisit the past, analyze significant moments, and offer insights into the transformations that continue to influence our present and future. Stay tuned!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-2-2025.


YaltaConference

Eighty years ago this month, Churchill, Roosevelt, and Stalin met on the shores of the Black Sea to shape the post-war world. In his memoirs, Churchill painted a vivid picture of the setting—grand palaces alongside war-torn ruins, strict Soviet security, and an almost surreal level of hospitality. From high-ranking officials sharing cramped quarters to goldfish and lemon trees appearing at the mere mention of them, the experience was unforgettable.

Want to learn more? Read the latest edition of the Churchill Bulletin for Churchill’s firsthand account and insights into this historic moment. Subscribe today and stay connected with Churchillian history! Learn more: https://bit.ly/3WPWUSl

What fascinates you most about this pivotal meeting—the diplomacy, the setting, or the personalities involved? Let us know in the comments!

#Churchill #History #WWII #ChurchillBulletin #OnThisDay #HistoricMeetings #YaltaConference


*Health is like money, you will never have a true idea of its value until you lose it*.

*Health is like money, you will never have a true idea of its value until you lose it*. Poor health is not caused by something you don’t have, it’s caused by disturbing something that you already have. Yes health is not something that you need to get, it’s something you have already if you don’t disturb it. So think positively, worry less, be happy  and eat healthy food. You know that food is a medicine, perhaps the most powerful drug on the planet with the power to cause or cure most disease....

#KSRPost 
24-2-2025.


Sunday, February 23, 2025

#எனதுசுவடு பகுதி 84…. ;#*காங்கிரஸில் பணியாற்றிய இறுதி கட்ட நாட்கள்*"| #*Ksr* | #ksrvoice |

#எனதுசுவடு பகுதி 84
—————————— 
"#*காங்கிரஸில் பணியாற்றிய இறுதி கட்ட நாட்கள்*"| #*Ksr* | #ksrvoice | 

#Indiragandhi, #Indira, #Nedumaran, #Tamilnadu, #Politics, #DMK, #Kalaignar, #Congress, #Moopanar, #PARamachandran, #Kamarajar, #Emergency, #Marinameeting, #Narasimharao, #kavignarkannadasan, #kannadasan, #Sanjaygandhi, #Tamilnaducongress, #Kamarajar,   #RVSwaminathan, #Karuppiahmoopanar, #dmk, #Pchidambaram, #CSubaramaniam, #TindivanamRamamurthee,#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #கேஎஸ்ஆர்வாய்ஸ், #ksr,, #ksrpost, #ksradhakrishnan, #enadhusuvadu, #yenadhusuvadu,

https://youtu.be/IP1Nc8JW2tI

அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, பணி என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக இன்றைய வியாபார அரசியல் களத்தில் என்ன செய்துவிட முடியும்?

அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, பணி என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக இன்றைய வியாபார அரசியல் களத்தில் என்ன செய்துவிட முடியும்?

ஓர் அரசியல் சித்தாந்தத்துக்கு நன்றிக்கடன் பட்டவர்களைப்போல….   ஒரு அரசியல் சித்தாந்தத்தை சுயலாபம், பதவி, அதிகாரம் அடைய பயன்படுத்துபவர்கள் மட்டுமே மேற்கண்ட வகைமையில் வருவர். அவர்களுக்கு மட்டுமே அறிவைத்தாண்டிய 'விசுவாசம்' (அடிமையாக) இருக்கும். 

இங்கு இருக்கும் பலப்பல சித்தாந்தங்களில் மனித குல மேம்பாட்டுகானது என்று ஒன்றை ஆராய்ந்து, கண்டறிந்து அதில் பிடிப்புடன் இருப்பவர்களை இந்த மேற்கோள் குறிப்பிடவில்லை என வைத்துக் கொள்ளலாமா ?  நமது அடையாளம் என்பது நம்முடைய அறிவுச் செயல்பாடுகளால், சமூகப் பங்களி
ப்பால் …..அந்த அறிவுச் செயல்பாடுகளையும், சமூக பங்களிப்பையும் செய்யும் துணிவையும், ஊக்கத்தையும் எது எளிக்கிறதோ அதுவே சித்தாந்தம் அல்லது கொள்கை.

#ஈவேகிசம்பத் #EVKSSampat #தமிழ்தேசியகட்சி #CongressParty #காங்கிரஸ்

#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977-
 ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங்கள் ஞாபகத்தில் இருக்கிறது! சொல்லின் செல்வர் ஈவேகிசம்பத் துவக்கத்தில் எளது Political mentor. எனவே பழ. நெடுமாறன் உடன் பயணித்தேன்.



1977ல் இல் அவர் சென்னை பொது மருத்துவமனையில் இறந்தபோது ஒரு நல்ல வழிகாட்டியை அரசியல்ச் சிந்தனையாளரை இழந்துவிட்டோம் என்று என் மனம் அதிகம் துக்கம் அடைந்தது. திருச்சி தேவர்ஹாலில் ஆலோசித்து முடிவெடுத்த பின்பு தான் காங்கிரஸில் இணைந்தார்கள்.









அவருடன் இருந்த ஞாபகங்கள் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது.. 

 சம்பத்  அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம்! என்னவெனில்  சாதாரணமாக யார் ஒருவர் அல்லது தொண்டர்கள் அல்லது அந்த நபர் தனக்கு அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் கூட அவரிடம் இருந்து கடிதம் வந்தால்  அதற்குப் பதில்க் கடிதம் எழுதிப் பொறுப்பாக அனுப்பி வைப்பார்! அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் அது!
அதுபோல சம்பத் அவர்கள் வீட்டில் இல்லாத போதும் தொலைபேசி வந்தால் யார் யார் பேசினார்கள் என்று குறித்து வைத்துக் கொண்டு அதை அவர் வீட்டுக்கு வரும்போது அவர் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற  நடைமுறையும் இருந்தது! 

பணிகளைஒரு அச்சிட்ட தாளில் குறிப்பெடுத்துக் கொள்வார். காலை 8 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரையில் தனது நிகழ்ச்சி நிரல்களை அதில் குறித்து வைத்தும் கொள்வார்! 
இப்படியான வாடிக்கை இன்றளவிலும் என்னில் தொடர்கிறது!   பல நுட்பமான தன்மைகள் கொண்டவர் ஈ விகே சம்பத்! அவருடன் பழகி வந்த நாளில் தெரிந்து கொண்ட அறிந்து கொண்ட பழக்கங்கள்   பலவும் இருக்கின்றன.

அதை நானும் நெடுமாறனும் கூட இன்றளவிலும் பாவிக்கிறோம்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் என்ன பேச வேண்டும் என்பதை எல்லாம் அன்றைய நாளின் படி அந்த தினத் தாளில் குறித்து கொள்வார்.

நான் கல்லூரி காலத்தில்  எப்பொழுதும்  ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் சட்டக் கல்லூரியில் திரிந்து கொண்டிருப்பேன். அது தமிழ்ப் புதினங்களாக இருக்கும் அல்லது ஆங்கிலப் புதினம் அல்லது கட்டுரைப் புத்தகங்களாக இருக்கும்!

நான் அவரைப் பார்க்க போகிறேன் என்றால் அவர் என்ன புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள்? என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று ஆர்வமாகக் கேட்பார்! நான் எதையாவது வித்தியாசமாகப் படித்துக் கொண்டிருப்பேன் என்று அவருக்குத் தெரியும்! பலமுறை அவரோடு அண்ணா சாலையில் ஹிக்கின் பாதம்ஸ்க்கும் அன்றைக்கு இருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸிற்கும்  போய்  இருவரும் புத்தகங்களைப் பார்த்து வாங்கி இருக்கிறோம். அதேபோல் ஓரியண்ட் லாங்மேன் ஆக்ஸ்போர்டு பதிப்புகள் விற்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பில்டிங்கில் போய் நூல்களை வாங்கி உள்ளோம்! அவரே சில புத்தகங்களை  வாங்கி இதைப் படி என்று என்னிடம் கொடுப்பார்..

அதேபோல் வேறு ஒன்றையும் அவர் முக்கியமாகச் சொல்லுவார்! அமெரிக்கத் தூதரகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஜெர்மன் தூதரகம் போன்றவற்றில் வரும் சஞ்சிகைகளையும் சோவியத் பதிப்புகளையும் சென்று வாங்கிப் படித்தால் தான் உலக அரசியல் தெரியும் என்று சொல்லுவார்!

ஒரு முறை அவருடன் திருநெல்வேலி சென்றபோது அங்கு பிரசித்தி பெற்ற எஸ்.ஆர. சுப்பிரமணிய பிள்ளை புத்தகக் கடைக்குச் சென்று
அங்கு திருப்பதி வேங்டேஸ்வர பல்கலைகழக பேராசிரியர் சுப்புரெட்டியார் எழுதிய வைணவம் குறித்த ஒரு நூலை அவர் வாங்கியதெல்லாம் உண்டு. எங்கள் கிராமத்திற்கு வந்து திருவேங்கடத்தில் போலீஸ நிலைய திடலில் பேசினார்.

இன்று சம்பத் சாலை பெயர் சூட்டப்பட்ட  அன்றைய நாள் சாலையில் இருந்த  அவரது இல்லத்தில்  நான் அவரைச் சந்திக்கப் போகும் போது பெல் பாட்டம்  அணிந்து முழுக்கை சட்டையை அதில் டக் பண்ணிக் கொண்டு ஹிப்பி முடிவைத்து வித்தியாசமான style கண்ணாடி சகிதம் சம்பத் அவர்களின் மகன் ஈவேகேஎஸ்.இளங்கோவன் இளமையாகக் காட்சி அளிப்பார்! சுலோச்சனா சம்பத் அவர்கள் இனிமையான வரவேற்பு கொடுத்து உபசரிப்பார். இளங்கோவன் எங்கு போனாலும்  சைக்கிளில்தான்   போவார்.1980 களில் டிஸ்கோ டான்ஸ் மிகப் பிரபலமாக இருந்தது. இளங்கோ அந்த நடனத்தை நன்றாக ஆடுவார். நினைத்துப் பார்க்கும்போது அவரும் இப்போது இல்லை!. காலங்கள் கண் முன்னே மாறிக்கொண்டே வந்து விட்டது!இன்னொரு புதல்வர் கொளதமன் அங்கே இருந்த அச்சகத்தை கவனித்து கொண்டார். புதல்வியின் பெயர் மிரண்ட என நினைவு.
நணபர் இனியன் சம்பத் கடைசி புதல்வர்.

ஒரு உத்தமமான அருமையான தலைவரின் நினைவு நாளில் அவருடன் நான் பயணித்து அறிந்தது நிறைய என்பதாலும் இந்த நாளில் அவரது நினைவுகளுக்கு என் மனப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!  ஈரோடில், வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமியின் மகனாக பிறந்தவர், ஈ.வெ.கி.சம்பத்.  நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1961ல் திராவிட நாடு கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.. அதில் அவரது நண்பர்களான கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் அக்கட்சியில் மற்ற முக்கிய தலைவர்கள் ஆவார். 1962 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது -1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார். இவர் மகன் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்களுள் ஒருவர், இவர் தி.மு.க.விலிருந்தபொழுது "Sunday Times" என்னும் ஆங்கில வார இதழுக்கு ஆசிரியராகவும் உரிமையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.மேலும் ஜெயபேரிகை, தமிழ்ச் செய்தி ஆகிய இதழ்களை சொந்தமாக நடத்தியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் கவிஞர் கண்ணதாசனுக்கு மனத்தாங்கல் ஏற்பட்டு போது சிவாஜி இல்லம் சென்று சமதானம் செய்தார் சம்பத். கடந்த 1977
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சிக்கு சம்பத்தையும் நெடுமாறனும்  கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திரா காந்தி அறிவித்த நிலையில் சம்பத் மறைந்தார். அன்று தமிழக காங்கிரஸ் கட்சியில் 
நெடுமாறன் அணி ஜிகே மூப்பனார் அணி
என இரு துருவங்களாக இருந்தது.



#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-2-2025.

திமுக DMK

*கட்சியை வளர்த்தெடுத்த நிர்வாகிகளின் உழைப்பை சுரண்டிவிட்டு "இருந்தால் இரு, போனால் போ" என அவமதிப்பது மனிதாபிமானமா*? 

*நிர்வாகிகளை மாற்றி விட்டால் சரியாகி விடுமா??.  களத்துல உழைத்த கழகத்தவர்கள் கவனியுங்கள். அதிமுகவினரை தனியாக சீராட்டுவது நல்லதா⁉️அறமும் பண்பும் இல்லாதவன் கொள்கைவாதியா! ஜனநாயகமா*?

#திமுக

#ksrpost
23-2-2025.


Understand fears and anxiety can stop you in your tracks and hold you back.

Understand fears and anxiety can stop you in your tracks and hold you back. It’s not easy to face your fears and push through them, but it’s essential. Each of us must confront our own fears, must come face to face with them. How we handle our fears will determine where we go with the rest of our lives. To experience adventure or to be limited by the fear of it. Yes the brave man is not he who does not feel afraid, but he who conquers that fear. Live a fearless life..... 

#ksrpost
23-2-2025.


Saturday, February 22, 2025

*இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்*. @ksrvoice

*இந்தி படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்*. @ksrvoice

#KSRVOICE 

#*கேஎஸ்ஆர்*,
#கேஎஸ்ஆர்போஸ்ட்,
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksrvoice,#ksrpost,
#ksradhakrishnan ,
#hindi ,
#AgainstHindi ,
#mkstalin, 
#dmk ,#bjp , ,#tamilnadu ,#duraimurugan, #threelanguageformula,
youtu.be/bpspthxcqf8?si…

#*எதை நோக்கிச் செல்கிறது இன்றைய ஸ்டாலின் திமுக*?

#*எதை நோக்கிச் செல்கிறது இன்றைய ஸ்டாலின் திமுக*? 
————————————
கடந்த காலங்களில் அதாவது 2018 வரை தலைவர் கலைஞர் இருந்த போது திமுக சார்பில் ஒரு போராட்டம் நடந்தால் அதை ஏற்றுப் போராட்டத்தை நடத்த முயலும் மாவட்ட அனைத்து கிளை உறுப்பினர்களும் நிர்வாகிகளும் வருகிற தேதியில் கலைஞரின்  வேண்டுகோளின்படி/அறிக்கைப்படி/அறிவுறுத்தலின்படி இந்தப் போராட்டம் நடக்கும் என்று தான்  தொண்டர்களைக் கூட்டி நடத்துவார்கள்.

இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அவரது உத்தரவுப்படி இந்தப் போராட்டம் நடக்கும் என்று ஒப்புதல் அளிக்கிறார்கள்.இம் மாதிரியான அவல முறை யார் காலத்தில் ஆரம்பித்தது என்றால் ஜெயலலிதா காலத்தில் ஆரம்பித்தது! அவர் ஏதாவது சொன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி உத்தரவுப்படி என்று தாள்பணிந்து அதிமுக காரர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இன்று திமுகவும் அதை பின் தொடர்கிறது என்றால் காரணம் வேறு எதுவும் இல்லை அண்ணா திமுகவிலிருந்து அனைவரும் திமுகவிற்குள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தம்!

அந்த வகையில் அண்ணாவும் கலைஞரும் தங்களது போராட்ட அறிக்கைகளை எவ்வளவு கண்ணியமாக மக்களுடன் இணைந்து எழுதிப் போராடிக் களம் கண்டார்களோ அப்படி அல்லாமல் இப்பொழுது எல்லாம் உத்தரவு /ஆணைக்கிணங்க என்று வருவது அவர்கள் கட்டிக்காத்த ஜனநாயக அரசியல் மாண்பைக் கேலிப் பொருள் ஆக்குகிறது. இந்த உத்தரவு ஆணை என்பதெல்லாம் அடிவருடிகள் அதிகாரத்திற்கு அடிபணிவதாகத் காட்டிக்கொண்டு தங்கள்  பதவியை நாடி- நலன் கருதி செயல்படுவது அன்றி வேறென்ன.! பதவி கொடுத்து அழகு பார்த்து என்று ஜெயலலிதா காலத்தில் ஒரு சொற்றொடர் 'ஶ்ரீ ராமஜயம்' போல் எழுதுவார்கள். இப்போது இவர் காலத்திலும் அழகு பார்த்தல் தொடர்கிறது. இவையெல்லாம் மக்களாட்சி தத்துவத்தை கேலி செய்வது ஆகும்.
துதிபாடிகளின் வேடிக்கைகள் என்ன சொல்ல…

கலைஞர்  என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் உத்தரவுக்கு இணங்க ஆணைக்கிணங்க  என்ற வார்த்தைகளை மனுவில் பார்த்தாலே கோபப்படுவார்! கலைஞர் தன் பேச்சுவாக்கில் சொல்லும் போது கூட “மகாபலிபுரம் என்று ஏன் சொல்கிறார்கள் மாமல்லபுரம் என்று தானய்யா சொல்ல வேண்டும்! சென்னை மவுண்ட் ரோட்டை எனது ஆட்சியில் அண்ணா சாலை என்றுபெயர் மாற்றினேன். பிறகு மகாபலிபுரம் மவுண்ட் ரோடு என்று இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இவர்களைக் கட்டிக்கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும்” என்று கோபிப்பார். 

அப்படியெல்லாம் இருந்த நிலை மாறி ஸ்டாலின் கலாச்சாரம் இன்றைக்கு ஜெயலலிதாவின் கலாச்சாரமாக ஆகிவிட்டது.! இது அதிமுக பரிவாரம் திமுகவிற்குள் வந்துவிட்டது என்பதைத் தானே காட்டுகிறது!

இதுதான் திமுகவின் சுயமரியாதையா இதுதான் பகுத்தறிவா இல்லை இதுதான் திராவிட மாடலா? இப்படித்தான் ஸ்டாலின் திமுக இருக்கிறதே ஒழிய அது பழைய திமுக அல்ல! இப்படி எல்லாம் நல்லது சொல்ல வந்தால் அதை எடுத்துக்கொண்டு மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டு ஒரு நான்கு பேர் ஒன்றும் தெரியாமல் முட்டாள் தனமாக வந்து திமுகவிற்கு வேப்பிலை அடிக்கிறேன் என்று நிற்பார்கள்!

ஆணைக்கிணங்க என்று அதிகாரப் படிநிலைக்கு வந்து விட்டார்கள் எனில் மக்களாட்சி என்பதற்கு என்ன அர்த்தம்!  இன்றைய திமுக எங்கே செல்கிறது? இப்படிச் சொல்வதை ஸ்டாலின் மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறாரா? ஒரு காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா அவர்கள் அரசு பணித்துறைகளில் இருந்த காவல்துறை அதிகாரி மாவட்ட வருவாய் அதிகாரி என்பதையெல்லாம்  காவல்துறை அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று மாற்றவேண்டும் என்று முதல்  கோப்பில் கையெழுத்து இட்டார்.

அந்தக் காலங்கள் நினைவில் வந்து போகிறது!

அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?எனும் கேள்விக்கு, அதிசயப் பதிலாக ஒரு நாள் அமையும்

#தமிழகஅரசியல்
#திமுக

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
22-2-2025.

#The Constitution Of India

#The Constitution Of India  ———————————————————



This Special Edition provides a comprehensive exploration of Indias foundational 

, featuring the complete Constitution text alongside a detailed list of the distinguished members of the Constituent Assembly who contributed to its creation. Also appendixs are there containing 
like proclamation, Swaraj bill-1895, Common wealth of India bill-1925,Opperation of the Constitution and laws, Nehru report -1928, Sapru Committee report-1945 etc. The special fully updated Flexi Leather Edition of The Constitution Of India! It is antique value!

O.P. Jindal Global University Publications 

#TheConstitutionOfIndia

#ksrpost
22-2-2025.’ll

Friday, February 21, 2025

அண்ணாசாலை அரசியல் நினைவுகள்

#*அண்ணாசாலை நினைவுகள்*…. அண்ணாசாலையில் 1991ல் நடந்த காங்கிரஸ் திமுக மோதலில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயர் கொல்லப்பட்டார்.நெருங்கிய குடும்ப நண்பர் தி.சு.கிள்ளிவளவன் ஒரு கண் இழந்தார். வாழப்பாடியார் உயிர் தப்பினார்.வழக்கு வழக்கம்போல் ஒன்றுமில்லாமல் போயிற்று. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாண்டி பஜாரில் பல கோடி மதிப்புள்ள தெரு ஓர அரசு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. கொலையுண்ட சுப்பிரமணிய ஐயருக்கு இரண்டு மகள்கள்.அவர்கள் படிப்பிற்கு வாழப்பாடியார் உதவினார். கிள்ளிவளவனை கடைசி வரையில் காப்பாத்தினார்.
அன்று குறிவைக்கப்பட்டது வாழப்பாடியார். சிக்கியது மற்றவர்.
அண்ணாசாலை - அண்ணாமலை - உதயநிதி என்றவுடன் இது நினைவிற்கு வந்தது. அதே போல எம்ஜிஆர் ஆட்சி 1980இல் என நினைவு கலைக்கப்பட்டது. அதை கண்டித்து நடந்த பேரணியை தாக்கும் வகையில் பெரிய கலவரம் பல்லவன் இல்லம்- காமராஜர சிலை அருகில் நடந்தது.காமராஜர் காலத்தில் 
ஸ்தாபன காங்கிரஸ் பேரணியை 1973 இல் தாக்குதல் நடந்து சென்னை பொது மருத்துமனையில் பலர் சிகிச்சைக்கு சேர்கப்பட்டனர்.
#ksrpost
21-2-2025.

*This is for you... You might been thinking that you had a rough past, seem to be under constant strom clouds, felt that your life is slipping by, had lost faith and blamed yourself for everything that gone wrong*.

*This is for you... You might been thinking that you had a rough past, seem to be under constant strom clouds, felt that your life is slipping by, had lost faith and blamed yourself for everything that gone wrong*. Its not so. Have confidence in all that you do, remember you are pretty darn fabulous. You are incredible. You make this world a better place. You have so much potential and things left to do. You have time. Better things are coming your way, please hang in there. You can do wonderful things.keep going... Stay home stay safe.. 

#ksrpost
21-2-2025.


Thursday, February 20, 2025

#இந்திதிணிப்பை எதிர்த்தது ஏன்? | #HindiImposition

#மும்மொழி...வசமாக சிக்கிய திமுக! #இந்திதிணிப்பை எதிர்த்தது ஏன்? | #HindiImposition | #DMK Protest

https://youtu.be/L12bk1GwwUo

If you are walking with two other men each of them will serve you as your teacher*.

*If you are walking with two other men each of them will serve you as your teacher*.You have to pick out the good habits of the one and imitate them, and the bad habits of the other and correct them in yourself. If you are going to achieve excellence in big things, you develop the habit in little matters.If your habits don’t line up with your dream, then you need to either change your habits or change your dream. Results can only change when we change our consistent actions and make them habits... 

#ksrpost
20-2-2025.


Wednesday, February 19, 2025

#கதைசொல்லி(காலண்டிதழ்) இதழ் 38. நல்ல அர்த்தமுள்ள சில தமிழ் #பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு...

#கதைசொல்லி(காலண்டிதழ்) இதழ் 38.
தயாராகி வருகிறது. அடுத்த வாரம் வெளி வரும்.
கிரா, நிறுவன ஆசிரியர்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன், 
ஆசிரியர்.
••••
நல்ல அர்த்தமுள்ள சில தமிழ் #பழமொழிகள்  சிந்தித்து  ரசிப்பதற்கு...

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். 
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.

11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். 
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், 
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-2-2025.


When you live for a strong purpose, then hard work isn’t an option.

When you live for a strong purpose, then hard work isn’t an option. It’s a  necessity. Working hard becomes a habit, a serious kind of fun. You get self-satisfaction from pushing yourself to the limit, knowing that all the effort is going to pay off. Yes a dream doesn’t become a reality through magic; it takes sweat, determination, and hard work. The harder you work for something, the greater you’ll feel when you achieve it.... 

#ksrpost
19-2-2025.


Tuesday, February 18, 2025

*Today, when corporate houses and mafia are pumping huge amounts into the elections, we need political leaders like Kidwai who can stand up to this trend*

*Today, when corporate houses and mafia are pumping huge amounts into the elections, we need political leaders like Kidwai who can stand up to this trend*. RafiAhmadKidwai, a member of the Jawahar Lal Nehru’s cabinet, was an epitome of an ideal politician. Since joining the freedom struggle in 1920, Kidwai worked tirelessly towards strengthening the secular and democratic structure of Indian polity. As the home minister of Uttar Pradesh, his role in countering the two-nation theory of the Muslim League and controlling the partition riots is well documented. 
 
Today, when elections have become an expensive proposition, Kidwai’s views are worth recalling. When the first General Elections were called in 1951, all the rich and powerful tried to enter the newly formed government. Lala Yodh Raj, owner of the Punjab National Bank - one of the richest banks in India - applied for a ticket from Congress to contest the election from Delhi. His request was rejected.
 
A disappointed Yodh Raj later decided to contest from Karnal as a Bharatiya Jana Sangh (BJS) candidate. He had declared that he would be spending a huge amount on the election campaign. Worried about his candidature, Congress workers told Kidwai that it would be difficult to defeat Yodh Raj. They had approached a sugar mill owner to contest against Yodh Raj. However, he didn’t show interest.

Kidwai patiently listened to the party activists. He told them that elections should not be about the money that one can spend and asked them to find a candidate with little money. Subhadra Joshi, secretary of Delhi Congress Committee, was handpicked by Kidwai to contest against Yodh Raj. When Joshi was asked to fight elections she wondered how could she contest elections when she didn’t have money to buy a bus ticket to go to the Delhi Railway Station. Rafi remained firm on his decision and gave her 500 Rupees to visit Karnal. 
 
Subhadra later recalled Yodh Raj stopped campaigning before the election day as there was overwhelming support for ‘a poor’ social activist. In the election, Yodh Raj received 28,932 votes against 2,03,588 votes of Subhadra. 
 
Today, when corporate houses and mafia are pumping huge amounts into the elections, we need political leaders like Kidwai who can stand up to this trend.

#ksrpost
18-2-2025


All go through phases in life. If you are not okay now.

All go through phases in life. If you are not okay now. It's okay, you will find your way. So stay  positive and keep believing. Better things are ahead. Stop putting your time and energy into things that aren’t benefiting you. Life often becomes hard due to complicated situations you've created ourselves. Don't blame life. Change the situations. You may not always end up where you thought you were going, but you will always end up exactly where you are meant to be... Good Morning

#ksrpost
18-2-2025.


Monday, February 17, 2025

#திருநெல்வேலி ‘’#நெல்லைச்சீமையின்ஒருநூற்றாண்டுகட்டுரைகள்’ #tirunelveli #nellai

‘’#நெல்லைச்சீமையின் ஒரு நூற்றாண்டு கட்டுரைகள்’’ என்னும் இந்த நூல் நண்பர் R Narumpu Nathan இரா. நாறும்பூநாதன் மற்றும் திரு வேலயுத முத்துக்குமார் தொகுத்து, திருநெல்வேலி மாவட்டம் ஆ்ட்சி நிர்வாக சார்பில்; நல்ல கட்டமைப்போடு விரிவான முறையில் வெளியிடபட்
டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மரு கா. ப.கார்த்திகேயன் வழிகாட்டுதலில் இந்த  சீர்மிகு பணி நடந்துள்ளது. பொருநை விழா-2025 என திருநெல்வேலி புத்தக திருவிழாவில்
இதை வெளியீடு செய்யப்பட்டது.

#பாரதி, #வஉசி, #ரசிகமணிடிகேசி, #மாதவையா, #காசுபிள்ளை, #புதுமைப்பித்தன் என துவங்கி இன்றைய நெல்லை மாவட்ட பல தரப்பட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் வரை இடம்பெற்றுள்ளன. இன்று என் கையில்
இந்த புத்தகம் கிடைத்தது. என்னுடைய கட்டுரையும்,  எங்கள் பகுதி ,‘’கழுகுமலை வெட்டுவான் கோயில்’’ சிற்பப் சிறப்பை ….பற்றி  இடம் பெற்றுள்ளன. 

#திருநெல்வேலி
‘’#நெல்லைச்சீமையின்ஒருநூற்றாண்டுகட்டுரைகள்’
#tirunelveli
#nellai

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-2-2025


*All comes in to this world with a specific destiny, and to fulfill something , to deliver some*

*All comes in to this world with a specific destiny, and to fulfill something , to deliver some* All message and to  complete some workff. So be content with rwhat you have, rejoice in the way things are and in dwelling, live close to the ground. In thinking, keep to the simple. In conflict, be fair and generous. In governing, don’t try to control. In work, do what you enjoy. In family life, be completely present. When you realise there is nothing lacking, the whole world belongs to you. Yes live your life content and completely.. .. 

#ksrpost
17-2-2025.


Sunday, February 16, 2025

கிராம ராஜ்யம்-ஆங்கிலேயரின் வருகைக்கு முன், கிராமங்களில்தான் அதிகாரம் குவிந்திருந்தது மட்டுமல்லாமல், சிறப்பான‌ கிராம சுயாட்சி நடந்தது

அன்றைய செங்கல்பட்டு வட்டாரத்தில்,

 என்றும் மீளாய்வுகள் புது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.பல வரலாற்று நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன.நல்ல கட்டுரை 
இன்றைய  16-2-2025.தினமலர்-சென்னை பதிப்பு.

#எனதுசுவடு83 - *இந்திரா காந்திக்கு நெடுமாறன் எழுதிய கடிதம்*|

#எனதுசுவடு83
••••••••••••••
*இந்திரா காந்திக்கு நெடுமாறன் எழுதிய கடிதம்*| #*Ksr* | ksrvoice 

#nedumaran,#periyar,#indiraghandi,#narasimarao,#ksr,#kamarajar


https://youtu.be/R3v8mbAl-po

#*திராவிடம்* #*Drvida*

#*திராவிடம்* #*Drvida* 
————————————
திராவிடம் அல்லது இன்று நிலவும் திராவிடியம் என்கிற சொல் வரலாற்றுப் பூர்வமாக எப்படி வந்தது என்பதை அதன் மூலத்திலிருந்து அறியாமல் அவர்ரவர் மனம் போன போக்கில்  திராவிடத்தை வகை பிரிக்கின்றனர்! 

பொதுவாக இனங்களின் யாப்பு என்கிற வகையில் திராவிடம் வந்ததா? இல்லை அது சிறு சிறு  குழுக்களின் பகுதியாக இந்தியாவில் நிலவி வந்ததா? என்பதை ஆராய வேண்டும்! 

வடக்கு  தெற்கு எனும் இரட்டை   நிலையில்   மட்டும் திராவிடம் இருந்ததில்லை!  சில நேரம் சில சொற்கள் திசை சொற்கள் ஆகவே இருக்கின்றன!அத்தகைய குறிப்புகள்  இந்தியாவின் வடக்கிலும் நிலவி வந்திருக்கிறது! 

ஏற்கனவே புழங்கி வந்த திராவிடம் என்ற சொல்லை பெரியார் எப்படி அரசியல் யாப்பாக மாற்றினார் என்பது ஒருபுறம் இருக்க இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையே திராவிடம் இருந்திருக்கிறது. ராகுல் டிராவிட் போன்ற கிரிக்கெட் வீரருக்கு பின்னொட்டுப் பெயராக இருக்கிறது திராவிடம். நாட்டின் தேசிய பாடலில் திராவிட உத்கல வங்கா என்று குறிப்பிடப்படுகிறது.

திரமிள திராவிட என வரலாற்றில்  காஷ்மீர பண்டிட்கள், ஆதி சங்கரர், இராமானுஜர்,தாகூர், மனோன்மணியம் சுந்தரனார்,கால்டுவெல், மாக்ஸ்முல்லர் சொன்னது போல திராவிடத்தை மறுக்க முடியாது.திராவிட சிசு திருஞானசம்பந்தரை, திரவிட வேதம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை என சொல்லாடல்கள் வழக்கில் நீண்ட காலமாக உள்ளன.

பி.டி. சீனிவாச அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரி, சத்தியநாத அய்யர், கே. கே. பிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் மற்றும் மறைமலை அடிகள், திருவிக, நாவலர்  சோமசுந்தர பாரதி போன்றவர்களின் பார்வையை இந்த விடயத்தில் கவனிக்க வேண்டும்.

வட மாநிலங்கள் முழுவதையும் எப்படி ஆரிய வகைப்பாட்டில் அடக்கமுடியாதோ அதேபோல் தெற்குப் பகுதி முழுமையும் திராவிடம் என்கிற வகைப்பாட்டில் அடக்க என்பதுதான் நிதர்சனம் .

ஆக ஆரிய திராவிட பேதம் என்பது ஒரு அரசியல் யாப்பாக வகைப்படுத்தி கொள்ள வேண்டி வந்தது.
அதாவது இது மாதிரியான குறிப்பான சொற்கள் வழியாக அரசியலைக் கட்டமைக்கும் போது அது எல்லா தரப்பு மக்களுக்குமான குறிப்பாக இந்தியாவின் தென்பகுதி முழுமைக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்! ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் என்று மறுபடியும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அவை கருத்தில் ஒற்றை நிலை அடைந்திருப்பதை என்ன செய்வது! இந்த இடத்தில் அண்ணா பெரியார் பேசிய திராவிடத்தை முன்னேற்றக் கழகமாக மாற்றியதை மறந்து விடக்கூடாது!

எல்லாச் சொல்லும் அதிகாரத்திற்கும் வர்க்கத்திற்கும் அதன் நலன்களுக்கும் ஏற்றவாறு தான் கட்டமைக்கப்படும் என்பது உண்மையானால் எல்லா தேசியங்களும் தனித்தன்மையோடு நில எல்லைகளையும் கொண்டிருக்க வேண்டுமேயானால்   அதற்கான நடைமுறை சாத்தியங்கள் என்ன என்பதை விட்டுவிட்டு யாரேனும் ஒருவரை எதிரியாக பாவித்து கொண்டு ஒருவருகொருவர் சுயலாபங்களை அடைந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் நிலைக்கு எதற்கு இவ்வளவு உதாரணங்கள். இடைநிலையில் தான் மிக மோசமாக எந்தத் தகுதியும் அற்று வெறும் வீர முழக்கங்களை வைத்துக்கொண்டு ஆபத்தாக உள்ளே நுழைகிறார்கள்!

இப்படி எந்தப் பார்வையும் இல்லாமல் இன்றைக்கு திமுகவில் இருக்கக்கூடிய பலருக்கும் புதிதாக வந்த பலருக்கும் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் பதவியைக் கேட்டு வாங்கிக் கொடுத்துப் பெற்றுக்கொண்டு பிறகு சாதிகள் இல்லை என்று பேசிக்கொண்டு அதே சாதியை வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்திக் கொண்டு இறுதியில் அந்தப் பலன்கள் எங்கே சென்று குவிகின்றன என்பதைப் பார்க்க வேண்டி இருக்கிறது!

ஒரு நல்லாட்சிக்குத் தேவை திராவிடமா? ஆரியமா? தனித்தமிழா? எது வேண்டுமானாலும் யாப்பாக இருக்கட்டும். பல்வேறு நாடுகளில் எப்படி தேசிய இனங்கள் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதோ வளர்ச்சி அடைகின்றனவோ அதை நோக்கி தான் நகர வேண்டும்!

இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் விளக்கமாகச் சொல்லி எடுத்துரைக்க தகுதியான ஆட்களை எல்லாம் இன்றைய ஸ்டாலின் தலைமையிலான திமுக வெளியே தள்ளி வைத்துவிட்டு தங்கள் குடும்பப் போக்கில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய திமுக ஆட்சி பலவற்றையும் கவனத்தில் எடுக்க தவறி பல்வேறு குற்றங்கள் நடக்கும் மாநிலமாக  தமிழ்நாட்டைமாற்றி இருக்கிறது! . எது எப்படி இருந்தாலும் ஒரு ஆட்சிக்கு அது எந்த வகையான ஆட்சியாக இருக்கட்டும் அதற்கான அறிவு ஜீவிகள் குறைந்து வருவது அல்லது இல்லாமல் போவது அதன் எதிர் காலத்திற்கு ஆபத்து! மற்றபடி எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அவ்வளவுதான்! 

#திராவிடம் #Drvida 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-2-2025.
.


Miguel de Cervantes’ DonQuixote

Miguel de Cervantes’ #DonQuixote (published in two parts in 1605 and 1615) is often hailed as the first modern novel, a masterpiece of world literature that blends humor, adventure, tragedy, and deep philosophical insight. The novel follows the misadventures of an aging nobleman, Alonso Quixano, who, after reading too many chivalric romances, reinvents himself as the valiant knight Don Quixote. Accompanied by his loyal yet skeptical squire, Sancho Panza, he sets out on a series of misguided quests to revive the lost age of knighthood—only to clash with the harsh realities of the world.

At its heart, Don Quixote is a story of contrasts. Don Quixote sees the world not as it is, but as it should be—a place where knights fight for honor, damsels need rescuing, and justice always prevails. His grand illusions lead him into comical and tragic situations, from mistaking windmills for giants to believing an inn is a grand castle. Meanwhile, Sancho Panza, a down-to-earth farmer, serves as his foil and reality check, humorously balancing Don Quixote’s delusions with common sense.

Themes That Make It a Masterpiece

1. The Power (and Danger) of Imagination – Don Quixote's world exists only in his mind, but his belief is so strong that it influences those around him. The novel raises the question: Is it better to see the world for what it is or what it could be?

2. Reality vs. Illusion – What is real? Don Quixote sees wonder where others see nothing, challenging the reader to reconsider their own perceptions.

3. The Role of Literature – Cervantes satirizes the chivalric romances that inspired Don Quixote, questioning whether literature distorts reality or helps us understand it.

4. Friendship and Loyalty – Despite mocking his master’s fantasies, Sancho Panza stays by his side, proving that true friendship transcends reason.

5. The Tragedy of Aging and Disillusionment – As the novel progresses, Don Quixote’s idealism fades, leading to a poignant ending where he returns to reality—but at great cost.

#DonQuixote

#ksrpost
16-2-2025.


Saturday, February 15, 2025

கொத்தமங்கலம் சுப்பு!

தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு! நினைவு தின சிறப்புப் பகிர்வ

சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.

கவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்பு

இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துவைத்தார் தந்தை. பின்னர் ஒரு மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்த சுப்புவுக்கு கவனம் முழுவதும்  நாடகம், நடிப்பு, பாடல் புனைவது, என்ற விஷயங்களிலேயே இருந்தது. வியாபாரத்தில் துளியும் கவனமில்லை. ஒருமுடிவாக காரைக்குடி அருகே இயங்கிவந்த நாடகக் குழு ஒன்றில் இணைந்தார். நாடக குழுவின் நாடகங்கள் பலவற்றில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது சுப்புவுக்கு. 1936-ல் ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபால் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் சுப்பு. அக்காலகட்டத்தில் 'பட்டினத்தார்' 'மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களில் தலைகாட்டத்துவங்கினார். அதுவரை படத்தில் அவரது சுப்ரமணியன் என்ற அவரது நிஜப்பெயரே இடம்பெற்றது. 1939-ல் திருநீலகண்டர் படத்தில்தான் முதன்முதலாக கொத்தமங்கலம் சுப்பு என்ற பெயர் இடம்பெற்றது. இந்த பெயர் காரணம் சுவாரஸ்யமானது. சுப்பு நாடகங்களிலும் படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த காலத்தில் கொத்தமங்கலம் சீனு என்பவர் திரைப்படத் துறையில் புகழ்பெற்றிருந்தார். அவர்தான் சுப்புவை அன்றைய பிரபல இயக்குநர் டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் "பக்த சேதா , "கச்ச தேவயானி" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட நட்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்றார் சுப்ரமணியம். அப்போது சுப்ரமணியத்தால் 'சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்' என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இந்த காலகட்டத்துக்குள் மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்துமுடித்தார்.

ஜெமினியில் சுப்புவின் கொடி பறக்க ஆரம்பித்தது. ஜெமினியில் அவருக்கு அளிக்கப்பட்ட  ஊதியம்  மாதம் 300 ரூபாய். கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்கு திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் சுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் அவரே. 1954-ல் ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டித்தள்ளினர்.

இப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தும் இருந்தார். மனைவிக்கு பயந்தவரான அந்த கதாபாத்திரத்தின் சேஷ்டைகள் ரசிகர்களை சிரிக்கவைத்தது.

திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை கே.பி சுந்தராம்பாளை ஔவையாராக நடிக்க வைத்து ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியான ஔவையார் படம் இன்றைக்கும் ஜெமினியின் மாஸ்டர் பீஸ் என்றால் மிகையாகாது.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் வாழ்க்கைத் துணையையும் தந்தது. ஆம்...1945-ல் வெளியான இந்த படத்தின் கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு...
‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. தொடர்ந்து ‘ஞான சௌந்தரி’ யில் வசனம் எழுதியிருந்தார். இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த ஆண்டில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ அன்றைக்கு பேசப்பட்ட படம். ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற ஆங்கில நாவலான இந்தப்படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949-ல் வெளிவந்தது.

1951 இல் ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்துவந்தது எனலாம். 1955-ல் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வள்ளியின் செல்வன்’ படத்தினை இயக்கியிருந்தார் சுப்பு. ஜெமினியின் வெற்றிப்படங்களில் ஒன்று இது.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.

தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே  தயாரிக்க இருந்த நிலையில்,  இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்  வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு,  "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்.

1960-ல் ‘இரும்புத்திரை’ ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ 1965-ல் 'படித்த மனைவி' உள்ளிட்ட சில படத்துக்கு வசனம் எழுதினார். சில படங்களில் தலைகாட்டினார்.

1970-க்குப்பிறகு முற்றாக திரையுலகில் இருந்து விலகினார். 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவை கவுரவித்தது.

வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

 

கொத்தமங்கலம் சுப்பு பங்கேற்ற படங்கள்....

1.அனாதைப்பெண்- நடிப்பு 1938 
2. அதிர்ஷ்டம்- நடிப்பு 1939
3. சாந்த சக்குபாய் -வசனம், நடிப்பு 1939
4. அடங்காப்பிடாரி -நடிப்பு 1939 
5. சுகுண சரசா -நடிப்பு 1939 
6. பக்த சேதா -நடிப்பு 1940
7. சூர்ய புத்ரி- நடிப்பு 1941
8. மதனகாமராஜன் -நடிப்பு 1941
9. நந்தனார் - நடிப்பு (ஜெமினி) 1942
10. பக்த நாரதர் -நடிப்பு 1942
 11. தாசி அபரஞ்சி - கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி) 1944
12.  கண்ணம்மா என் காதலி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1945
13. மிஸ் மாலினி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1947
14. ஞான சௌந்தரி -வசனம் (கூட்டாக) 1948 
15.  சந்திரலேகா- வசனம் (கூட்டாக) (ஜெமினி) 
16. அபூர்வ சகோதரர்கள்- பாடல் (ஜெமினி) 1949
17. சம்சாரம் -பாடல் (ஜெமினி) 1951
 18. மூன்று பிள்ளைகள் -பாடல் (ஜெமினி) 1952 
19. ஔவையார்- திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி) 1953
20. வள்ளியின் செல்வன்- திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி) 1955
21. வஞ்சிக்கோட்டை வாலிபன் -வசன பாடல், நடிப்பு (ஜெமினி) 1958
22. இரும்புத் திரை -வசனம், பாடல் (ஜெமினி) 1960
 23. களத்தூர் கண்ணம்மா -பாடல் (ஏவிஎம்) 1960
24. படித்த மனைவி வசனம் -(கூட்டாக) 1965
25. தில்லானா மோகனாம்பாள் -கதை 1968
26. விளையாட்டுப் பிள்ளை 1970
27. சக்ரதாரி பாடல் (ஜெமினி) 1948

திரையுலகிலிருந்து முற்றாக விலகி ஓய்விருந்த கொத்தமங்கலம் சுப்பு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி 15 ந்தேதி தனது 63 வயதில் மறைந்தார். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்களிப்பு செய்த திரையுலக முன்னோடிகளில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு தனியிடம் உண்டு.

Courtesy-Malaichamy Chinna C



#*திராவிடம்*, #*தமிழ்தேசியம்*, #*விசால பாரத்*

#*திராவிடம்*,  #*தமிழ்தேசியம்*, 
#*விசால பாரத்* என்று பேசப்படுகிறது! இவை குறித்த இன்றைய பின்நவீனத்துவம் நிலையில் மறுவாசிப்பிற்குத் தேவைப்படும் கட்டுரைகள் வரவேற்கப்பட்ட நிலையில் கட்டுரைகள் சில வந்துள்ளன .
இக்கட்டுரைகள் ஒரு முழு நூலாக தொகுக்கப்பட்ட பின் சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தி அவற்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் மேற்குறித்தக் கட்டுரைகளைக் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

rkkurunji @mail.com

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
15-2-2025

Monday, February 10, 2025

#பெரியார்பிரபாகரன்சர்ச்சைகள் #இன்றையதிமுகவின்நிலைப்பாடுகள் #கடந்தகாலஅரசியல் #விஜய்அரசியல் #திருப்பரங்குன்றம்

*இன்றைய 10 2 2025 இந்து தமிழ் திசையில் பெரியார் பிரபாகரன் சர்ச்சைகள்! இன்றைய திமுகவின் நிலைப்பாடுகள்! கடந்த கால அரசியல் வரலாறுகள்! மற்றும் திருப்பரங் குன்றம்  குறித்த என் விரிவான பேட்டியுடன் வந்துள்ளது.
அதற்கான முழுப் பதிவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது*.

மாற்று அரசியலுக்காக விஜய் வரட்டும்!
வரவேற்கும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

டி.கார்த்திக்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் களத்தில் பெரியார், பிரபாகரன், திராவிடம் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்த விமர்சனங்கள் இன்னமும் சூடான விவாதத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அரசியலாளரும் பிரபாகரனுக்கு நன்கு பரிச்சயமானவரும் ‘கதைச் சொல்லி’ ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.
பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1978 முதல் 1980 வரை இலங்​கைக்​கும் தமிழகத்​துக்​கும் போக வர இருந்​தார் பிரபாகரன். 1981 முதல் 1987-ல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் ஏற்படும் வரை தமிழகத்​தில் இருந்​தார். தமிழகத்​தில் நான், நெடு​மாறன் உள்பட நான்​கைந்து பேர்​தான் பிரபாகரனுக்கு அறிமுக​மாகி​யிருந்​தோம். தன்னுடைய போராட்ட உத்தி​கள், வாழ்க்கை முறையைப் பற்றியெல்​லாம் தினசரி அவர் என்னோடு பேசி​யதுண்டு. 10 ஆண்டு​காலம் அவருடன் பழக்​கவழக்கம் உண்டு. பிறகு நானும் வவுனி​யா​வுக்கு சென்​றிருக்​கிறேன். அப்போதெல்​லாம் பெரியார் பற்றி பிரபாகரன் பேசி​ய​தில்லை. எதிர்​வினை​யாற்றிய​தில்லை. எம்ஜிஆரை மலை போல் நம்பி​னார். அவர் திராவிட இயக்​கத்​தின் தலைவர்​தானே. மு.கருணாநி​தியை எனது திரு​மணத்​தில் சந்தித்​துப் பேசி​னார். எனக்​குத் தெரிந்து திராவிட இயக்​கங்கள் பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ பிரபாகரன் குறை சொல்லி எதுவும் பேசி​ய​தில்லை. ஆனைமுத்து தொகுத்து எழுதிய ‘பெரி​யார் சிந்​தனை​கள்’ பற்றிய 3 தொகு​திகளை பிரபாகரன் வாங்​கிச் சென்​றார். பிரபாகரன் சென்னை​யில் உண்ணா​விரதப் போராட்டம் நடத்​தி​ய​போது, அப்போ​ராட்​டத்தை கி.வீரமணி​தான் பழச்​சாறு கொடுத்து முடித்து வைத்​தார். திராவிட தலைவர்​களோடு முரண் இருந்​தால், கி.வீரமணி வேண்​டாம் என்று சொல்​லி​யிருப்​பார் அல்ல​வா? கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்ற பெரியாரிஸ்டுகளும் அவரோடு நெருக்கமாகத்தான் இருந்தனர்.
பெரியாரை சரமாரியாக சீமான் விமர்சிக்கும் நிலையில், அதற்கு திராவிட இயக்கங்கள் சரியாக எதிர்வினையாற்றியதாக நினைக்கிறீர்களா?
எ​திர்​வினை எங்கே ஆற்றி​னார்​கள்? அங்கு​தான் (திமுக) தகுதியான ஆட்களை வைத்​துக் கொள்ள​மாட்​டார்​களே. தகுதி​தான் அங்கு தடை. நானும் அங்கிருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​வன்​தானே. இப்போது திமுக-​வில் இருப்​பவர்​களுக்கு திமுக-​வின் வரலாறு தெரி​யுமா? திரா​விடம் என்று பெயர் வைத்​தவர்கள் யாரென்று இவர்​களுக்​குத் தெரி​யுமா? இந்து மதம் சம்பந்​தப்​பட்​ட​வர்கள் வைத்த பெயர்​தான் திரா​விடம். இதைச் சொல்​லக்​கூடிய​வர்கள் இன்று திமுக-​வில் யார் இருக்​கிறார்​கள்? இன்றைய திமுக-​வில் சிந்​தனை​யாளர்​களுக்கு வேலை இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களைப் போன்றவர்கள் முட்டு கொடுக்க வேண்டும். திமுகவை எதிர் முகாமிலிருந்து திட்டிக் கொண்டிந்தவர்கள், திமுக ஆளுங்கட்சியான பிறகு இந்திரனே, சந்திரனே என்று பேசுகிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்றுதான் தெரியவில்லை. அதனால்​தான் இன்று யார் வேண்​டு​மா​னாலும் திராவிட இயக்​கங்​களைப் பற்றி பேசலாம் என்றாகி​விட்​டது. தகுதி​யானவர்கள் இருந்​திருந்​தால் சரியாக எதிர்​வினை​யாற்றி​யிருப்​பார்​கள். ஒரு காலத்​தில் அற்புத​மாகப் பேசக்​கூடிய தலைவர்கள் திமுக-​வில் இருந்​தார்​கள். இன்றோ ஓட்டுக்கு காசு, லஞ்சம் வாங்​குபவர், தொடர்ந்து எம்எல்ஏ, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்​து​கொண்டு பெரிய காரில் முரட்டுத்​தனமாக ஹாரன் அடிப்பவர்கள் இருந்​தால் போதும் என்றாகி​விட்டது. இதுதான் இன்றைய திமுக நிலை. அதனால்​தான் மாற்று அரசியல் வேண்​டும் என்று நினைக்​கிறோம்​.
நீங்கள், நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரனுடனும் நெருக்கமாக இருந்தவர்கள். சீமான் பேசும் விஷயங்களில் உள்ள உண்மை தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்குமே..?
அவர் (சீமான்) அங்கு (இலங்கை) இருந்ததே சில நிமிடங்​கள்​தான். மகேந்​திரன் உள்ளிட்ட இயக்​குநர்கள் பிரபாகரனை சந்திக்கச் சென்​றார்கள் அல்லவா? அந்த அணியில் இருந்​தவர்​தான் சீமான். ஒரு 5 - 10 நிமிடங்​கள்​தான் அவர் பிரபாகரனைச் சந்தித்​திருப்​பார். தமிழகத்​தில் பிரபாகரனை யாருமே அறியாதவர்கள் போல் சீமான் பேசுகிறார். தமிழ்​நாட்​டில் முன்​பைப் போல நாகரிக அரசியல் இல்லை. முன்பு கண்ணியம் இருந்​தது. பிரபாகரனை பார்க்காத ஆட்கள் எல்லாம் அவரைப் பற்றி இணையத்​தில் எழுதுகிறார்​கள். நாம் ஏதும் மறுத்​துப் பேசி​னால் ஆபாச​மாக, கீழ்​தரமாக விமர்​சிக்​கிறார்​கள். ஒருவர் சொன்னதை இட்டுக் கட்டி 100 பேர் பேசி​னால், அது உண்மை​யாகி​விடு​கிறது. இதற்​கெல்​லாம் அஞ்சியே நாங்கள் அமைதியாக இருக்​கிறோம்​.
இலங்கையின் தமிழ் தேசியம் வேறு. அதை தமிழ்நாட்டில் பின்பற்ற முடியாது என்று ஈழத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் சொல்கிறார்கள். பிரபாகரனின் தமிழ்த் தேசியம் என்றுதானே சீமான் இங்கு பேசுகிறார். அதுபற்றி உங்கள் பார்வை?
தமிழ்த் தேசியம் எந்தக் கோட்​பாட்​டில் இயங்க வேண்​டும் என்கிற கர்த்​தாவை உருவாக்​கியவர்கள் வள்ளலார், மறைமலை​யடிகள், திரு.​வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர்​தான், 1930-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்​டத்​தில் பங்கேற்ற சோமசுந்தர பாரதி நடைபயணமாக சென்னை பொதுக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​துக்கு நீலாம்பரி அம்மை​யார் தலைமை தாங்​கி​னார். பெரி​யாரும் அந்தக் கூட்​டத்​துக்கு வந்தார். அந்தக் கூட்​டத்​தில்​தான் பெரி​யார் என்கிற பட்டம் கொடுக்​கப்​பட்​டது. இந்தியா​வில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்​கின்றன. பல்வேறு மொழிகள், மாறு​பட்ட சீதோஷ்ண நிலைகள், மாறு​பட்ட பழக்​கவழக்​கங்​கள், கலா​சா​ரங்கள் இருக்​கின்றன. தமிழ் கலாச்​சா​ரம், தமிழர்​களின் தேசிய தன்மை பாதுகாக்​கப்பட வேண்​டும் என்று இந்தியா​வில் தமிழ்த் தேசியம் ஆரம்​பிக்​கப்​பட்​டது.
இலங்​கை​யில் சிங்​களம், தமிழ் என இரண்டே இனங்​கள்​தான். தமிழர்​களுக்கு உரிமைகள் வழங்​கு​வதாக ஒன்பது ஒப்பந்​தங்களை பல்வேறு சிங்கள அரசுகள் போட்டன. தமிழ் அடையாளம், கலா​சா​ரம், சம உரிமைகள் பாதிக்​கப்​ப​டாமல் காப்​போம் என்று சொன்​னார்​கள். ஆனால், இவையெல்​லாம் நிறைவேற்​றப்​பட​வில்லை. பிறகு​தான் வட்டுக்​கோட்​டை​யில் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சி தீர்​மானம் நிறைவேற்றியது. இனி சிங்​களர்​களோடு வாழ முடி​யாது. நாம் ஒரு தனி தேசிய இனம். தனி நாடு, தனி வாழ்வு இவற்றை முன்னிறுத்த வேண்​டும் என்று சொல்​லித்​தான் இலங்​கை​யில் தமிழ்த் தேசியம் முன்னெடுக்​கப்​பட்​டது. இதனாலேயே ஈழ மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தமிழரசுக் கட்சி 18 எம்பிக்களைப் பெற்றது. அங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. இங்கிருக்​கும் தமிழ்த் தேசியம் வேறு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்​டும்​.
தமிழ்த் தேசியமும் திராவிடமும் எங்களுக்கு இரண்டு கண்கள் என்று விஜய் சொல்கிறார். அது இரண்டும் வேறு வேறு என்கிறாரே சீமான்..?
தமிழ் நாட்​டைப் பொறுத்​தவரை திரா​விட​மும் தமிழ்த் தேசி​ய​மும் ஒன்றோடொன்று பிணைந்​து​தான் செல்​கிறது. அந்தக் காலத்​தில் தமிழ்​நாட்​டில் தமிழ்த் தேசியம் பேசி​ய​வர்கள் பெரி​யாருடன் மாறு​பட்டு நிற்​க​வில்​லை.
சில நேரத்தில் உங்களுடைய பதிவுகள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறீர்கள். விஜய்யின் அரசியல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் நாட்​டில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்​டும் என திமுக-வை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று, பொதுக்​கூட்​டங்​களில் பேசி 15 ஆண்டு​களில் திமுக-வை ஆட்சிக்​குக் கொண்டு வந்தவர் அண்ணா. 60 ஆண்டு​களுக்​குப் பிறகு பல பிழைகளும் தவறுகளும் மக்கள் விரோத செயல்​பாடு​களும் இந்த இயக்​கத்​தில் தெரி​கின்றன. இப்போது ஒரு மாற்று அரசியல் தேவை. தமிழ்த் தேசி​ய​மும் திரா​விடத்​தை​யும் ஒன்று கலந்து எடுத்​துச் செல்​வேன் என்று விஜய் சொல்​கிறார். இதில் எந்தப் பிழை​யும் இல்லை. மாற்று அரசி​யலுக்காக விஜய் வரவேண்​டும். அவருக்கு வாழ்த்து​கள்​.
கடந்த காலங்களில் திமுக - மதிமுக என மாறியிருக்கிறீர்கள். உங்களை மீண்டும் திமுக அழைத்தால் செல்வீர்களா?
என்னை அழைக்​க​மாட்​டார்​கள். அதற்கு நான் தயாரும் இல்லை. மதிமுக என்கிற இயக்​கத்​தின் நிறுவன தலைவர்​களில் நானும் ஒருவன். வைகோ எனக்கு எதுவும் செய்ய​வில்லை. ஆனால், அந்த இயக்​கத்தை கட்டமைக்க நான் பட்ட கஷ்டம் எனக்​குத் தெரி​யும். என் இளமை, என் காலம், வழக்​கறிஞர் தொழில் ஆகிய​வற்றை இழந்​து​தான் வைகோவுக்கு உறுதுணையாக இருந்​தேன். நான் எல்லா அரசி​யலை​யும் பார்த்து​விட்​டேன். ஏதாவது ஒரு கட்சி​யில் இருந்​தால் என்னால் ஒரு நியா​யத்தை எழுத முடி​யுமா?
எனக்​குப் படிப்​ப​தற்​கும் எழுது​வதற்​குமே நேரம் இல்லை. நான் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவன். காமராஜர் காலத்​திலிருந்து அரசி​யலில் இருக்​கிறேன். என் அரசியல் அனுபவ வயது இல்லாதவர்​களிடம் இன்று என்னால் எப்படி கூழைக் கும்​பிடு போட முடி​யும்​?
இன்னும் ஒரு சில மாதங்களில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் வர இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருந்தீர்கள். பிரபாகரன் குறித்து அவ்வப்போது வரும் தகவல்கள் போன்றதுதானா இது?
எனக்​கும் நெடு​மாறனுக்​கும் விடு​தலைப் புலிகள் பற்றிய எல்லா விஷயங்​களும் தெரி​யும். அதற்​காக, முன்​னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை நாங்கள் நியாயப்​படுத்​தவில்லை. இந்தப் படுகொலையை அவர்கள் (விடு​தலைப் புலிகள்) செய்ய​வில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம். விடு​தலைப் புலிகளும் இதை அன்றே மறுத்து​விட்​டார்​கள். இலங்​கை​யில் உள்ள மக்கள் ஒரு குடை​யின் கீழ் வர வேண்டு​மென்​றால் பிரபாகரன் வந்தால்​தான் வருவார்​கள். நிச்​சயம் பிரபாகரன் வருவார். அதற்கான தடைகள் இந்தியா​வில் இருக்​கிறது. அப்படி வரும்​போது பிரதமர் மோடிக்​கு​தான் பிரபாகரன் கடிதம் எழுது​வார்​.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து நடைபெறும் சர்ச்சைகளைத் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக எப்படி பார்க்கிறீர்கள்?
​திருப்​பரங்​குன்றம் ஆர்ப்​பாட்​டத்​தில் பங்கேற்​றவர்கள் பாஜக-வைச் சேர்ந்​தவர்கள் அல்ல. இந்து அமைப்பு​களுக்கு தமிழகத்​தில் இவ்வளவு பெரிய செல்​வாக்கா இருக்​கிறது? அது தானாகக் கூடிய கூட்​டம். ஒரு மணி நேரத்​தில் இவ்வளவு கூட்டம் என்றால், பாஜக தலைவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கூட்டி வந்த கூட்​டமா? பாஜக-வுக்காக இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவர்கள் மக்கள​வைத் தேர்​தலில் வெற்றி பெற்றிருக்க வேண்​டுமே. இங்கு இந்துக்கள் பெரும்​பான்​மையாக இருக்​கிறார்​கள். தங்களுக்காக அவர்கள் திருப்​பரங்​குன்​றத்​தில் கூடி​யிருக்​கிறார்கள். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி​யைச் சேர்ந்த இந்துக்​களும் இதில் பங்கேற்றிருப்​பார்​கள். இந்துக்​களுக்கு விழிப்பு​ணர்வு இருக்​கிறது என்​பதை அரசு புரிந்​து​கொள்ள வேண்​டும்​. மதுரா விஜயம், கம்பணன் நூல்களைப் படித்தால் திருப்பரங்குன்றம் பற்றிய புரிதல் ஏற்படும்.




#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
10-2-2025.

Sunday, February 9, 2025

#கனிமொழி உங்கள் அண்ணன் ஆட்சியில் நடக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு போராட வேண்டும்... போராடுவீர்களா???

#கனிமொழி உங்கள் அண்ணன் ஆட்சியில் நடக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் மெழுகுவர்த்தி ஏந்தி நீதி கேட்டு போராட வேண்டும்...
போராடுவீர்களா???

#கிருஷ்ணகிரி - 8ம் வகுப்பு மாணவிக்கு 3 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை

#மணப்பாறை - ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை 

#மணப்பாறை - 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#கிளாம்பாக்கம் - மேற்கு வங்க சிறுமிக்கு பாலியல் தொல்லை

#சென்னை - 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

#சேலம் - 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#திண்டுக்கல் - அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#திருப்பூர் - அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை 

#கரூர் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#மதுரை - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#சங்கரன்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#நாகர்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

#திருவள்ளூர் - 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

#மானாமதுரை - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

#திராவிட_மாடல்_அரசு

#hilights 
#follower


#எனது சுவடுபகுதி 82 1980இல் காங்கிரஸை விட்டு நாங்கள் ஏன் வெளியேறினோம்?

#எனது சுவடுபகுதி 82 
1980இல் காங்கிரஸை விட்டு நாங்கள் ஏன் வெளியேறினோம்? | #Ksr | @ksrvoice 

தற்போது ஏறத்தாழ காங்கிரஸ் ஒரு இறுதி நிலைக்கு வந்துவிட்டது. விடுதலைக்கு முன் நேதாஜி பகத்சிங்  விடுதலைக்குப் பிறகு கிருபளானி ஜெயப்ரகாஷ் நாராயணன் உத்தரப்பிரதேசத்தில் முதல் பெண் முதலமைச்சர் ஆக இருந்த சுசிதா கிருபளானி அதேபோல் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவை தேர்தலில் வென்ற தமிழ்நாட்டின் முதல்ப் பிரிமியர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அது மட்டுமல்லாமல் இந்திராவின் உயிரை மதுரையில் காப்பாற்றிய பழ நெடுமாறன் வரையிலான பலரின் பாவங்களை அள்ளிக்கொண்டது தான்  இன்றைய சிதைந்த நிலையில் உள்ளஇந்தக் காங்கிரஸ். அதற்கான முடிவுரைகளைத்தான் சோனியா இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார். சோனியாவால் பாரம்பரியமான சிந்தியா குடும்பம் பாதிக்கப்பட்டது. அதை ஒட்டி பல பூர்வீக செழுமையான காங்கிரஸ் பற்றுள்ள குடும்பங்கள் காலாவதி ஆக்கப்பட்டன. இறுதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் பல்லாயிரத்திற்கு மேல்  லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு பின்னணிக் காரணமாய் இருந்தது   இப்படியாகத் தொடர்ந்த காங்கிரஸின் பெரியண்ணன் போக்கால் அரசியலிலும் பன்னாட்டு உறவிலும் செய்த தவறுகளுக்குக் காலம்  இப்போது பழிவாங்குகிறது .. மீண்டும் காங்கிரஸின் புத்துயிர்ப்பிற்கான  எதிர்காலம் கண்ணுக்கு எட்டிய வரை காண முடியவில்லை.

#Sanjivareddy, #Sanjaygandhi, #Indiragandhi, #Janatagovernment, #kalaignar, #dmk,  #congress, #Charansingh, #Jagjivanram, #Nedumaran, #Tamilnaducongress, #Kamarajar,   #RVSwaminathan,

youtu.be/_vVyI2zfHnA?si…

ஈரோடுசட்டப்பேரவைஇடைத்தேர்தலில்….

#ஈரோடுசட்டப்பேரவைஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகள் வாங்கி இருப்பது எப்படிப் பார்த்தாலும் திமுகவின் மீதான அதிருப்தி வாக்குகள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கு ஆயிரம் காரணம் சொல்லுகிறார்கள்! ஒரு ஆளும் அரசுக்கு எதிர் முகாம் உருவாவது வெறும் ஜனநாயக பண்பு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அது தவற விட்ட காரியங்களுக்கு ஆன விமர்சனமும் தான்.

சீமான் தனியாக நின்று இருமுனை போட்டி போட்டது மாதிரி இருந்தாலும் கூட அதன் அளவுகளுக்குள் மறைமுகமான பாஜக அதிமுக ஓட்டுகள் இருந்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் வருகிற எதிர்கால கூட்டணிகளுக்குள் இப்படியான பரஸ்பரங்கள் நிகழ இருப்பதற்கான முன்னறிவிப்பு தான் இந்தத் தேர்தல் என்றும் கூட வகைப்படுத்தலாம்.

ஏற்கனவே நான் துவக்கத்தில் சொன்னது போல அங்கே அதிமுக போட்டி போட்டு இருந்தால் வென்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இவ்வளவு பணம் காசுகளைக் கொடுத்த பிறகும் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளை வாங்கி இருக்கிறது என்றால் எவ்வளவு எதிர்வினைகள் திமுகவின் மீது மக்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதுவும் நிரந்தரமல்ல காலங்களும் வினைகளும் கூடும்போது காட்சிகள் மாறிவிடும்!

சாதனை படைத்த நோட்டா
2023 இடைத்தேர்தலில் 798 வாக்குகளே நோட்டாவுக்கு கிடைத்தன. அதுவே, 2025 இடைத்தேர்தலில் 6,079 (3.94%) வாக்குகள் பதிவாகி உள்ளன. 
 பொதுவாக இடைத்தேர்தலில் நோட்டாவை மக்கள் நாடுவதில்லை. திமுக ஆட்சி மீது விவசாயிகள், அரசு உழியர்கள், உழைப்பாளர்கள், பால் விலை,
மின்கட்டணம் என மக்களின் பிரச்னை என இச் சூழ
லில்அவர் 20,000 கடந்ததை வியப்பாக கூறுகின்றனர்.. மீது அதிருப்தி அடைந்த பலர், அதை எதிர்த்த வேட்பாளரை ஆதரிக்காமல் நோட்டாவை நாடியுள்ளனர்! #ErodeEastByPolls2025 #ErodeEast

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-2-2025

You must first be who you really are and use time wisely spend it on activities that advance your overall purpose in life,

You must first be who you really are and use time wisely spend it on activities that advance your overall purpose in life, then do what you need to do, in order to have what you want. You may encounter many defeats, but you must not be defeated. In fact, it may be necessary to encounter the defeats, so you can know who you are, what you can rise from, how you can still come out of it..Be brave and be yourself.. 

#ksrpost
9-2-2025.


திமுக தெலுங்கர் கட்சி அல்ல

#திமுகதெலுங்கர்கட்சிஅல்ல
—————————————
பெரியார் மொழி அடிப்படையில் கன்னடர் மட்டுமே! தெலுங்கர்அல்ல! திமுகவைத் தெலுங்கர் கட்சி என்கிறார்கள். 

உண்மையில் அது தெலுங்கர் கட்சியாக இருந்தால் வைகோவை எதற்கு 
கட்சியை விட்டு நீக்கினார்கள். 2006 முதல் 2011  வரையிலான திமுக ஆட்சியில் ஆற்காடு வீராச்சாமி மிகவும் ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர் வகித்த பதவிகள் கூட கோப்புகளில் வராமல் மறைக்கப்பட்டார். அதையெல்லாம் நான் கண்ணால் பார்த்ததுண்டு. 

அமைச்சராகும் தகுதி இருந்தும் விருதுநகர் பெ சீனிவாசன் ஏன் ஒதுக்கப்பட்டார். அதேபோல் சிந்தனைச் சிற்பி சிபி சிற்றரசு அவர்களுக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்க வில்லை? 

அதைத் தொடர்ந்து என்னைப்போல் திமுக விற்கு உதவி செய்து பல வகையில் உழைத்து ஒத்துழைத்து வந்தவர்களும் ஏன் நீக்கப்பட்டார்கள். திறமையே தகுதிக் குறைவு என்கிற பார்வை  திமுகவிற்கு எப்படி வந்தது? குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலோ தூத்துக்குடி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களிலோ ஒரு  திறமையான நாயுடு கூடத் தேர்தலில் நிற்க முடியாது? அப்படி இன்றைய நிலை.கலைஞர் போட்யிட எனக்கு வாய்ப்பு தர நினைத்தும் முடியவில்லை. 

இதே ஸ்டாலின் தெலுங்கு பேசுவர்களை விரும்பியது இல்லை. அவரின் அடிமைகளை விரும்புவார்.இப்படி இருக்கும்போது திமுக ஒரு தெலுங்கர் கட்சி என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது!? 

கலைஞரே தெலுங்கர் கிடையாது என்று அடித்துச் சொல்ல முடியும்! அவர் குடும்பம்  தெலுங்கர் குடும்பம் என்றெல்லாம் வரையறுக்க முடியாது.! 

உண்மையைச் சொன்னால்  தமிழ்நாட்டில் அதிக ஜனத்தொகை கொண்ட சாதிகளுக்கு தான் திமுகவில் அதிக மரியாதையும் இட ஒதுக்கீடுகளும் அதன் அடிப்படையில்தான் எல்லா வகைப் பலன்களும் நலன்களும் கிடைக்கின்றன. ஏறக்குறைய வலுத்த மக்கள் தொகை கொண்ட  சாதித் தலைவர்கள் தான் திமுகவைப் பயன்படுத்தி சாதித்துக் கொள்கிறார்கள்.! நிலைமை இப்படி இருக்க தமிழக நலன் மீது அக்கறை கொண்ட தெலுங்கு பேசுபவர்கள் என்று சொல்லித்  தொடர்ந்து அவர்கள் மீது வெறுப்பை ஏற்றக்கூடிய வந்தேறி என்கிற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை மௌனிக்க செய்வதும் கையாலாகாமல் ஆக்குவதுமே இந்தத் தமிழ்நாட்டு தேர்தல் அதிகாரத்தின்  யுத்தியாக இன்றைக்கு இருக்கிறது.

#திமுகதெலுங்கர்கட்சிஅல்ல #திமுக


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-2-2024

#கேஎம்முன்ஷி #KMMunshi

#கேஎம்முன்ஷி #KMMunshi 
—————————————
பிப்ரவரி 8, 1971 இன்று   கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி) நினைவு நாள். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்   விடுதலைப் போராட்ட வீரர்,  கல்வியாளர்,மற்றும்எழுத்தாளர்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று இரண்டு ஆண்டுகள் சிறை சென்றவர் 
துவக்கத்தில் சிறந்த தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குஜராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே. எம். முன்ஷி 1938ல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அண்ணல் அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு  நிர்ணயசபை உறுப்பினராக பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராக பணியாற்றினார் உத்திரபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

Kanhaiyalal Maneklal Munshi (30 December 1887 – 8 February 1971), popularly known by his pen name Ghanshyam Vyas, was an Indian independence movement activist, politician, writer from Gujarat state. A lawyer by profession, he later turned to author and politician. He is a well-known name in Gujarati literature. He founded Bharatiya Vidya Bhavan, an educational trust, in 1938.

Munshi wrote his works in three languages namely Gujarati, English and Hindi. Before independence of India, Munshi was part of Indian National Congress and after independence, he joined Swatantra Party. Munshi held several important posts like member of Constituent Assembly of India, minister of agriculture and food of India, and governor of Uttar Pradesh. In his later life, he was one of the founding members of Vishva Hindu Parishad.

#கேஎம்முன்ஷி #KMMunshi

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
8-2-2025.


திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA

திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் .?? 

1920கள் துவங்கி 1931 வரை உச்சம் பெற்ற திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை முடிவுக்கு வந்தது லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின் அடிப்படையில்.

அதற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிது சிறிதாக உருவெடுத்த சிக்கந்தர் தர்ஹா விசயம் நெல்லித் தோப்பு  அன்னச்சத்திரம் ஆக்கிரமிப்பு என்று விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் 1957ல் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹா செல்லும் இஸ்லாமியர்கள் பச்சை நிற கொடியை பறக்க விட்டனர் .



அந்த கொடிகள் பாகிஸ்தான் கொடிகளின் சாயலில் இருந்ததை கண்டு முதல் முதலில் அதை தடுக்கும் பொருட்டு களத்தில் அறவழிப் போராட்டத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தன்மானமிக்க இந்துவாக இருந்த நபர் தான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சின்ன கருப்ப தேவர் அவர்கள். 

அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700 க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிற கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்த வைத்த வெற்றி போராட்டத்தை செய்தார். 

1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய  சின்ன கருப்ப தேவர் இந்துக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்தார். 

ஆனால் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில்  புனித மலையில் ஆடு கோழி பலியிடுவதற்கு ஆதரவாக செயல்பட்டதோடு அல்லாமல். திருப்பரங்குன்றம் சென்று சிக்கந்தர் தர்காவில் வழிபட்டு சமத்துவத்தை போதிப்பதாக இன்றைய காங்கிரஸ் கட்சி.

இந்து விரோதத்தை செய்வதையும் நாளைய வரலாறு பேசும். 
காங்கிரஸ் கட்சியில் இருந்த கடைசி தன்மானமிக்க என்று அடையாளப்படுத்த வேண்டிய நபர் திருப்பரங்குன்றத்தினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா சின்ன கருப்ப தேவர் அவர்களே. 

இவர் 1957 முதல் 1967 வரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். 
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டின் உடைய தலைவராக ஆகவும் 1941 முதல் பதவி வகித்துள்ளார்

#திருப்பரங்குன்றம் 
#தைப்பூசம்


What you call your destiny is truly your character and that character can be altered.

What you call your destiny is truly your character and that character can be altered. If you create an act, you create a habit. If you create a habit, you create a character. And good character is not formed in a week or a month. It is created little by little, day by day. Protracted and patient effort is needed to develop good character.If you create a character, you create a destiny. Understand your ability can take you to the top, but it takes character to keep you there..... 

#ksrpost
8-2-2025


சீமான் - பிரபாகரன் புகைப்படம்... புலிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்" - K.S Radhakrishnan Interview

சீமான் - பிரபாகரன் புகைப்படம்... புலிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்" - K.S Radhakrishnan Interview 

#ntkseeman #prabhakaran #periyar #NTK #Naamtamilarkatchi #ntkitwing #mathivadhani #dwaraka #duvarakaprabhakaran #pazhanedumaaran #kasiananthan #karthicmanoharan #saattaiduraimurugan #idumbavanamkarthik #erodebyelection #erodeeastelection
#periyar #thanthaiperiyar #Tvkvijay #aadhavarjuna #ctrnirmalkumar #johnarokiasamy #jhonarokias

youtu.be/SVHCLYywQIQ

டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள்

ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில், வரலாற்று ரீதியாக ம'டான் என்று அழைக்கப்படும் சதுப்பு நில அரேபியர்களின் தாயகமாக இருந்த ஒரு பரந்த சதுப்பு நிலம் உள்ளது. பெரும்பாலும் ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி, நீர்வழிகள் மற்றும் மிதக்கும் தீவுகளின் சிக்கலான வலையமைப்பால் வகைப்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சதுப்பு நில அரேபியர்கள் தங்கள் தனித்துவமான சூழலுடன் சிக்கலான முறையில் இணைந்த ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளனர். முதிஃப்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் குடியிருப்புகள், நாணல் மற்றும் நாணல்களிலிருந்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மிதக்கும் கட்டமைப்புகள். இந்த நிலையான வீடுகள் ஆணி, கண்ணாடி அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளன, மேலும் சில நாட்களில் சேறு மற்றும் தாவரப் பொருட்களின் அடுக்குகளிலிருந்து உருவாகும் தீவுகளில் தங்கி கட்டப்படலாம்.
கணிசமான சவால்கள் மற்றும் அவர்களின் வாழ்விடத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை எதிர்கொண்ட போதிலும், ம'டான்கள் குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர், ஈரநிலங்களின் இயற்கை சுழற்சிகளுடன் இணக்கமாக தங்கள் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பராமரித்து வருகின்றனர். இந்த நீடித்த கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்த ஒரு வாழ்க்கை முறையைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குகிறது, அவற்றின் தகவமைப்பு மற்றும் வலிமையைக் காட்டுகிறது. இந்த சமூகங்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையைப் பாதுகாக்க முடியும் என்பது எனது உண்மையான நம்பிக்கை.  அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது, அத்தகைய வாழ்க்கை முறை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், அவர்கள் காட்டும் மன உறுதி உண்மையிலேயே போற்றத்தக்கது.


ஈழம்-தந்தை செல்வா பற்றி பேசும் பலரும் அவர் சாகும்போது “தமிழரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என கூறிவிட்டுத்தான் இறந்தார்

வரலாற்றை மாற்றாதீர்கள்..!

தந்தை செல்வா பற்றி பேசும் பலரும் அவர் சாகும்போது “தமிழரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என கூறிவிட்டுத்தான் இறந்தார் என உரையாற்றி வரலாற்றை மாற்றுவது அப்பட்டமான பொய்  இது அறியாமை அல்ல..
வேண்டுமென தந்தை செல்வா தமிழீழத்தீர்மானத்தை எடுக்கவில்லை என ஒரு வகையான திசைதிருப்பும் பேச்சாகவே காணமுடிகிறது.

இதை பல தமிழரசுக்கட்சி மூத்த உறுப்பினர்களும் காலம் காலமாக மேடைகளிலும் பேசியுள்ளனர்.
தந்தை செல்வா சாவதற்கு ஆறுவருடங்களுக்கு முன்னரே 1970, காலப்பகுதியில் தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
அது தந்தை செல்வாவின் இறுதி வார்தையும் அல்ல..

தந்தை செல்வா சாவடைந்தது 1977, ஏப்ரல்,26, அவர் இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு முன்னர் அவர் இறுதியாக எடுத்த தீர்மானம் 1976, மே,14, ல் வட்டுக்கோட்டையில் “ தமிழருக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே”
இதுதான் தந்தை செல்வா சாகும்போது கூறிய இறுதி வார்த்தை.

இந்த தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையில்  தமிழர் விடுதலை கூட்டணி தயாரித்து 1977, யூலை,21, தேர்தலில்தான் வடகிழக்கில் 18, தொகுதிகளில் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ்மக்கள் வழங்கினர் என்பதே உண்மை.
தமிழீழத்திற்காக அன்று மக்கள் வழங்கிய ஆணை இதுவரை மீளப்பெறவில்லை என்பதும் வரலாறு.

உண்மையை மறைத்து மூத்த அரசியல் வாதிகள் சிலரும் 
இன்றைய இளைஞர்களும் தந்தை செல்வா சாகும்போது கடவுள்தான் தமிழரை காப்பாற்றவேண்டும் என கடவுளிடம்தான் தமிழர்களை பாரம் கொடுத்தமாதிரியான பொய்களை பரப்புவதை காணமுடிகிறது.

தந்தை செல்வா சாகும்போது கடவுளிடம் பாரம் கொடுக்கவில்லை பிரபாகரனினமே பாரம் கொடுத்தார் இதுதான் வரலாறு.

Friday, February 7, 2025

“Indian Constitution 75” -K.S. Radha Krishnan,

Today’s The Pioneer (7-1-2025) Delhi edition carried my article on the #ConstitutionofIndia-75….
••••
“Indian Constitution 75”
-K.S. Radha Krishnan,
Advocate

It has been 75 years since we adopted and accepted the Constitution of India as our own after achieving independence!

A significant portion of the Indian subcontinent was under British colonial rule from 1858 to 1947. During this period, the Indian independence movement gradually gained momentum to secure freedom from foreign domination. In 1934, the demand for a Constituent Assembly for India was first raised. Subsequently, the demand was reiterated in 1936 and 1939 with increased emphasis. Accordingly, the Cripps Mission in March 1942 recommended the establishment of a Constituent Assembly. Later, the Cabinet Mission in May 1946 also proposed the formation of such an assembly. Following this recommendation, elections for the Constituent Assembly were held in July 1946.

The Constituent Assembly convened in December 1946, with Sachidananda Sinha being elected as its interim chairman on December 9. Subsequently, Rajendra Prasad was elected as the permanent chairman of the assembly on December 11, 1946.

On August 15, 1947, India was partitioned into two nations—the Dominion of India and the Dominion of Pakistan. As a result, the task of drafting the Constitution exclusively for independent India became the responsibility of the Constituent Assembly.

The Constituent Assembly of India was constituted by members elected by the Union and State Legislatures. Eminent leaders such as Jawaharlal Nehru, Rajagopalachari, Rajendra Prasad, Sardar Vallabhbhai Patel, Sandip Kumar Patel, Dr. B.R. Ambedkar, Maulana Abul Kalam Azad, Syama Prasad Mukherjee, Nalini Ranjan Ghosh, and Balwant Singh Mehta were among the key figures in the Assembly. The Assembly included over 30 members from Scheduled Castes. Frank Anthony represented the Anglo-Indian community, while H.P. Modi represented the Parsi community. Arendra Kumar Mukherjee, a distinguished Christian leader, served as the head of the Minority Group and represented all Christians except Anglo-Indians. Hari Bahadur Gurung represented the Gorkha community.

Prominent legal minds such as Alladi Krishnaswami Ayyar, B.R. Ambedkar, Benegal Narsing Rao, K.M. Munshi, and Ganesh Mavlankar also played pivotal roles as members of the Assembly. Women leaders like Sarojini Naidu, Hansa Mehta, Durgabai Deshmukh, Rajkumari Amrit Kaur, and Vijaya Lakshmi Pandit were significant contributors. Dr. Sachidananda Sinha served as the first President of the Constituent Assembly, later succeeded by Rajendra Prasad as the permanent Chairman. The members of the Constituent Assembly convened for the first time on December 9, 1946.

The Constitution comprises 25 parts, 12 schedules, 106 amendments, 448 articles, and 117,369 words. Alongside the English edition, it also includes an official Hindi translation. The task of drafting the Indian Constitution began on August 29, 1947, under the Constituent Assembly of India. The completed Constitution came into effect on January 26, 1950—a date chosen to commemorate the declaration of Purna Swaraj on January 26, 1930. This marked India’s proclamation as a unified, sovereign, and democratic republic under the principles of popular sovereignty.

Upon its implementation, the Indian Constitution replaced the Government of India Act of 1935, which had previously served as the fundamental governing document. From that moment, the Indian Constitution became the foundational document of governance for the nation.

On August 29, 1947, the Constituent Assembly of India passed a historic resolution to draft the Indian Constitution. Pursuant to this resolution, a Drafting Committee comprising seven eminent members was formed, with Dr. B.R. Ambedkar as its chairman. The esteemed members of the Drafting Committee were:

​•​Dr. B.R. Ambedkar
​•​N. Gopalaswami Ayyangar
​•​Alladi Krishnaswami Ayyar
​•​K.M. Munshi
​•​Syed Muhammad Saadullah
​•​N. Madhava Rao
​•​T.T. Krishnamachari

The Drafting Committee submitted its report on February 21, 1948. The final draft of the Constitution was presented to the Constituent Assembly on November 4, 1948, for deliberation. After meticulous discussions and amendments, the Constitution was adopted on November 26, 1949, with the signature of Dr. Rajendra Prasad, the President of the Constituent Assembly. Subsequently, on January 24, 1950, in the final session of the Constituent Assembly, Dr. Rajendra Prasad was unanimously elected as the first President of independent India.

In subsequent years, the Preamble of the Constitution underwent a notable amendment during the tenure of Prime Minister Indira Gandhi. Through the 42nd Constitutional Amendment, the words “Socialist” and “Secular” were incorporated into the Preamble, reflecting the evolving ideals of the Republic. This amendment stands as a testament to the dynamic nature of the Indian Constitution in addressing the socio-political aspirations of the nation.

Accordingly, the concept of a “secular government” and terms such as secularism or socialism have become incompatible with the original Constitution. This is exactly what I have repeatedly emphasized: the term secularism itself is erroneous. The correct term should be communal harmony. The original Constitution did not contain the words socialist and secular. These were later inserted by the Congress government under Indira Gandhi’s rule.

A related case has been under deliberation in the Supreme Court for the past three days. Justice Sanjiv Khanna, who recently assumed office as the 51st Chief Justice of India, also discussed this matter. Justice Khanna remarked that the term socialism pertains to the welfare of all people. However, yesterday, the case was dismissed.

What we are asserting here is that the fundamental meaning has been altered by the 42nd Amendment, which, as recommended by the Swaran Singh Committee, reflects the ideology of a specific political party. Every ruling party attempts to amend the Constitution to suit its political objectives.

To date, the Indian Constitution has been amended 105 times, with an additional 10 amendments proposed. In terms of its framework, the Indian Constitution is the most extensive among the democratic nations of the world.

However, in the United States, the world’s largest democracy, even after 200 years of independence, their Constitution has permitted no more than 25 amendments. Furthermore, their Constitution has fewer pages and significantly fewer provisions.

In nations like Britain, Israel, and New Zealand, there is no written political Constitution; instead, governance relies on traditions. In contrast, our Constitution incorporates provisions from various countries, including Britain, Australia, Canada, the United States, France, and the Soviet Union. To achieve this, B. N. Rau traveled extensively to the aforementioned nations, compiling and organizing these provisions. Yet, his name is seldom mentioned these days.

Based on his groundwork, the Drafting Committee was constituted under the leadership of Dr. B. R. Ambedkar.

The book I am holding in my hand, as shown in the photograph below, is a replica of the original manuscript of the Constitution.

The final draft of the Constitution, adopted by the Constituent Assembly, bears the unique distinction of having a signature in Tamil. This was by M. C. Veerapagu, a member of the Assembly from Thoothukudi and a close friend of my father. I have highlighted his signature in the accompanying photograph.

It is crucial to understand that the term Constitution pertains to the foundational framework of governance, whereas political parties represent a separate entity altogether. When political parties insert amendments to suit their conveniences, the original intent of the Constitution becomes distorted, and unnecessary interpretations accumulate.

The Constitution is the cornerstone of a nation. It must be regarded as a collective agreement ensuring harmony for all citizens, carefully balanced and structured by both the legislative and judicial branches.

The essence of the Constitution’s secular integrity should not be diluted through divisive terminology or misinterpretations of its original purpose. Instead of being swayed by enticing rhetoric, the focus must remain on measured and effective actions that serve the holistic interests of the nation.

Rahul Gandhi is seen carrying the Eastern Law Publication edition of the Constitution in red binding, speaking about it wherever he goes. But does he know who introduced the 42nd Amendment to the Constitution? Is he aware of the history of this Constitution? Has he read and understood who undermined the very laws of the Constitution? Does he know who stripped the judiciary of its powers during the Emergency through the 42nd Amendment? And who misused these amendments arbitrarily for their own ends?

It was, after all, your ally, the Congress Party, that took education reform laws from the states and placed them under the central government! It was the Congress that moved agriculture into the central list!

With all this in mind, how can Stalin not find it absurd to celebrate the Constitution with your ally, the Congress Party, which made such moves? Isn’t it strange to see those who never respected the Constitution join hands with those who tainted it, claiming to celebrate it together? What meaning does such a celebration hold?



Any protest or political movement must be informed by an understanding of its history—of why and how things unfolded as they did. Yet those who have historically disrespected the Constitution now declare its birth anniversary a cause for celebration. Isn’t that ironic?
- Political activist

#ConstitutionofIndia
#ksrpost
7-2-2025.


Thursday, February 6, 2025

முதலில் தலைமைச் செயலகத்தை வேறு இடத்தில் கட்டுங்கள்".| #Ksr | #ksrvoice |

முதலில் தலைமைச் செயலகத்தை வேறு இடத்தில் கட்டுங்கள்".| #Ksr | #ksrvoice | youtu.be/gqmrgopiys0?si…

#*உழவர் தலைவர் நாராயணசாமிநாயுடு நூற்றாண்டு*

#*உழவர் தலைவர்
நாராயணசாமிநாயுடு
நூற்றாண்டு* 
————————————
நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டு விழாவில்  கோவில்பட்டியில் நினைவுச் சிலை வைப்பதற்கான ஏற்பாடு!

விவசாய சங்கத் தலைவர் திரு நாராயணசாமி அவர்கள் மிக தீவிரமாக விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு மக்களை திரட்டிக் கொண்டிருந்த கால வர்த்தமான சமயத்தில் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் கூட்டம் கூட்டமாக பச்சைத் துண்டை அணிந்து கொண்டு பல்வேறு கூட்டங்களில் தங்களது உரிமைகளை முழக்கமாக வைத்து அவரது தலைமையில் போராடிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளை மையமாக வைத்து தொடங்கிய அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பான இயக்கமாகி வந்த வேளையில் அன்றைய ஆளும் வர்க்கங்கள் அனைவரும் அவரது நியாயமான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட விவசாயகளின் உரிமைகள் அவர்களின் விவசாய பொருட்களுக்கு நிர்ணய விலை சந்தையில் இடைத்தரகர்களின் நீக்கம்  குறித்த பேச்சின் மீது அச்சம் கொண்டிருந்தார்கள். அப்படியான சமயத்தில் தான்



 
அவர் பிறந்த கோவை மாவட்டம் வையம்பாளையம் கிராமத்திற்கு அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களும் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களும்  நேரில் சென்று வருகின்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கான ஆதரவுகளை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதெல்லாம் நடந்தது. கலைஞரும் திரு நாராயணசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என்னிடம் கூறிய போது நான் தான்  சென்று அவரைக் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்து வந்தேன். பிறகு அது குறித்து கல்கி பிரியன் கூட ஒரு கட்டுரை எழுதினார் எனக்கு நாராயணசாமி அவர்களுடன் இருந்த அந்தக் காலங்கள் இன்றளவும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றன. அப்போது நாராயணசாமி அவர்கள் சென்னைக்கு வந்தால் ஸ்வாகத் ஓட்டலில் அல்லது ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியில்தான் தங்குவார்.
1984 தேர்தலில் அவர் கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் நின்ற கம்யூனிஸ்ட் கட்சி அழகிரிசாமி அவர்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கான மேடையில் ஆதரித்து பேசினார். அப்படி பேசிவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் வந்து தங்கும் போது தான் இதய வலி காரணமாக இயற்கை எய்தினார். அச்சமயத்தில் நான்  முழுவதுமாக அங்கு இருந்து ஆவண செய்ய வேண்டியதும் நேர்ந்தது. விவசாயிகளுக்காகவே தன் முழு வாழ்வையும் போராட்டத்தில் செலவழித்து பெருமளவில் மக்கள் ஆதரவையும் பெற்ற எளிமையான தலைவர்தான் நாராயணசாமி அவர்கள். ஒரு காலத்தில் விவசாய மக்கள் அனைவரும் அவர் பின்னணியில் திரண்டு நின்றது பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இலவச மின்சாரம் மற்றும் விவசாயின் கோரிக்கைகளுக்காக அவர் போராடிய போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 48 விவசாயிகள் 1972 முதல் 92 வரை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குள்   ஆளும் அரசுகளால் சுடப்பட்டு  உயிரிழந்த சம்பவங்களைச் சந்தித்தது தான் தமிழ்நாடு. அதன் பிறகு தான் விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் அறிவிக்கப்பட்டது. அது ஒரு மாபெரும் போராட்டமாக இருந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

அத்தகைய வேளாண் சமூக மக்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு துணையாய் நின்று போராடியவருடைய நினைவு நாட்களின் போது இன்றைய அரசியல் தலைவர்கள் ஒரு காலத்தில் அவரது உதவி வேண்டும் என்று கேட்டவர்கள் கூட அவரை மறந்து விட்டு தங்களின் சுயலா அரசியல் வேட்டையில் இன்று நீடிக்கிறார்கள்.

என்ன செய்ய?அப்படியான உத்தமர்களை போராட்டத்தில் இறக்கும்படி வைத்துதான் தமிழ்நாட்டின் சூழ்ச்சி மிக்க சுய லாபமிக்க அரசியலின் அறம்.

அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே அவருக்கான கூட கோபுரங்கள் மாடமாளிகைகள் அமைத்து தரப்பட்டிருக்கும். ஆனால் விவசாய மக்களின் வேதனைகளை அறிந்த அந்த உத்தமர் தனது கிராமத்தில் தன் வாழ்நாளின் கடைசிவரை ஓட்டு வீட்டில் வாழ்ந்தார். அவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என்று விட்டு கொடுத்தாலும் மின் கட்டணம் கட்ட மாட்டேன் என்று சொல்லி இறுதிவரை பெற்றோமாக்ஸ் அல்லது ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வாழ்ந்தார் என்றால் இன்றைக்கு யாரும் நம்புவார்களா?

ஆகவே அவரின்  நூற்றாண்டு நினைவின் பொருட்டு அவர் இறந்த கோவில்பட்டியில் அவருக்கு சிலை வைக்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் இதை செய்ய வேண்டியது மத்திய அரசுகளும் இந்த மாநில அரசுகளும் தான்.
அதன் அடிப்படையில் ஐயா விவசாயிகளின்  உழவர்களின் புனிதர் நாராயணசாமி ஐயா அவர்களின் நினைவாக ஒரு தபால் தலை வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அவரது போராட்டங்கள் அவற்றின் வரலாறுகள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த யாவும் இன்று இளம் தலைமுறையினர் வாசிக்க அறிந்து கொள்ள ஏற்ற வகையில்   வரலாற்று ஆவணமாகும்படி ஒரு புத்தகத்தை கொண்டு வரவும் முயற்சி எடுத்து இருக்கிறோம். 

ஒடுக்கப்பட்ட விவசாய மக்களின் உரிமைகளுக்காக மிகுந்த வலிமையுடன் போராடிய அவர் புகழ் ஓங்குக!  அவருகான நூற்றாண்டு விழாவை  சிறப்புற நடத்தி அவரை நினைவு கொள்வோம் ! அவரோடு 1971 முதல் 1984 வரை உழவர் இயக்கத்தில் நெருக்கமாக பயணத்தவன்.

திரு சி.நாராயணசாமி  நாயுடு அவர்களின் புகழ் ஓங்குக! அவர் வழியில் இன்றைய விவசாயிகளுக்கான வாழ்வுரிமையை மீண்டும் மீட்டெடுப்போம்!

#உழவர்தலைவர்நாராயணசாமிநாயுடு
#cnarayanasamynaidu

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-2-2025.


*With everything that has happened to you, you can feel sorry for yourself or treat what has happened as a gift*

*With everything that has happened to you, you can feel sorry for yourself or treat what has happened as a gift*. Everything is either an opportunity to grow or an obstacle to keep you from growing.If you believe it will work out, you’ll see opportunities. If you believe it won’t you will see obstacles. Understand You are not stuck where you are unless you decide to be.You get to choose..... 




#ksrpost
6-2-2025.

Wednesday, February 5, 2025

*You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before*

*You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before*. When it's time to act, the energy will come. When it's time to make the choice, you'll know what to decide. When it's time to leave, you'll find yourself writing the resignation. Trust yourself. You don't have to predict every possible turn of the future, but strengthen your faith in the fact that you will be taken care of no matter where you find yourself along the way.

#ksrpost
5-2-2025.

#கரிசல்மண் 
Pic- வானம் பார்த்த கரிசல் பூமி - நாற்று சோள சாகுபடி.


*It is easy to run away from everything. Don't run from your life, from your Duties, from those*

*It is easy to run away from everything. Don't run from your life, from your Duties, from those* Around you. Wake up and face them as challenge. Stop wasting time on things that are contributing to your unhappiness.The  people, the environment.None matters more than your own mental health. Let go, without regret. Be proud of yourself for standing up and saying "this isn't working." It takes strength and courage to pursue happiness, even when it hurts...

#ksrpost
5-2-2025.


Tuesday, February 4, 2025

எம்ஜிஆர்

பொழுது விடிஞ்சு எழுந்தா இதே தேதியில் அன்று என்ன நடந்ததுன்னு யோசிக்க வைக்கிறது. ஞாபகம் வந்து அந்த நினைவில் மூழ்கினால் அதுவே நாள் பூரா நம்மை சுறுசுறுப்பா வைக்கிறது.

இப்பதான் நடந்தா மாதிரி இருக்கு. 40 வருசம் ஓடிப்போச்சுங்க. 1984 அக்டோபரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற மக்கள் திலகம், அங்கிருந்தே தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகவே 1985 பிப்ரவரி 4 ல் இதே தேதியில் சென்னை திரும்பினார்.  சென்னை விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானத்தில் மக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் காலை 7 மணியளவில் கலந்து கொண்டார். அவரைக் காண இரவு முழுவதும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.




பரங்கிமலை மைதானத்தில் தனக்கு வரவேற்பு அளித்த மக்களை நோக்கி எம்.ஜி.ஆர் கும்பிடும் படம் இதோ..40 வருசம் ஆச்சு


*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*...  ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...