Monday, May 12, 2025

#1974ஆம் ஆண்டு மாநில சுயாட்சி தீர்மானத்தின் போது #அம்பேத்கர் பற்றி துரைமுருகன் பேச்சு.

 #1974ஆம் ஆண்டு மாநில சுயாட்சி தீர்மானத்தின் போது #அம்பேத்கர் பற்றி துரைமுருகன் பேச்சு.

_______________
#மாநில சுயாட்சி தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலினை போல நாளைக்கு, துணை முதல்வர் உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும், அதில் பங்கெடுத்து பேசுவேன்,” என்று துரைமுருகன் பேசியிருந்தார்.
#சரி அப்படி என்னதான் அன்று பேசியிருப்பார் என்று பார்த்தால்.....
#பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பேசியது மாதிரியான பேச்சைத்தான் அன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் துரைமுருகன்.
#இந்திய அரசியல் சட்டத்திற்குத் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கார் அவர்கள் கூட இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அல்ல. ஒரு வக்கீலாக இருந்தவரைக் கூப்பிட்டு, பரிவு காட்டி அவர்களுக்குத் தலைமைப் பதவி கொடுத்த போது, நாங்கள் என்றென்றைக்கும் டெல்லி பாதுஷாவாக இருக்க, டெல்லியில் இருந்து ஆட்சி புரிகிற வகையில் சட்டத்தை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டபடி அவர்கள் அமைத்துக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன்"
#5 நாள் விவாதத்தில் இந்த ஒரே ஒரு இடத்தில்தான் பேசியுள்ளார்

No comments:

Post a Comment

Mar 22