Friday, May 9, 2025

மார்ச் 28, 1887, விடுதலைப் போராட்ட வீரரும், ‘தீரர்’ என்று போற்றப்பட்டவருமான #சத்தியமூர்த்தி நினைவு நாள்.


 மார்ச் 28, 1887, விடுதலைப் போராட்ட வீரரும், ‘தீரர்’ என்று போற்றப்பட்டவருமான #சத்தியமூர்த்தி நினைவு நாள்.

தமிழ், ஆங்கிலத்தில் சிறந்த சொல்லாற்றல் கொண்டவர். சிறந்த வழக்கறிஞராகவும் விளங்கினார். காங்கிரஸில் உறுப்பினராக சேர்ந்தார். மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரவுலட் சட்டத்துக்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
lதிலகர், சீனிவாச சாஸ்திரி அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார். பின்னர், 1920-ல் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலால் மக்களிடம் சுதந்தர வேட்கையைப் பரப்பினார். 1923-ல் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார்.
காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936-ல் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ல் சென்னை மேயராகப் பணியாற்றினார். தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்தர எழுச்சியை ஊட்டினார்.
சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்த்துக்கு சத்யமூர்த்தி பவன் என்று அவரது பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...