Monday, May 5, 2025

எனதுசுவடுபகுதி_82

 #எனதுசுவடுபகுதி_82

1980இல் காங்கிரஸை விட்டு நாங்கள் ஏன் வெளியேறினோம்? | #Ksr | @ksrvoice
ஏறத்தாழ காங்கிரஸ் ஒரு இறுதி நிலைக்கு வந்துவிட்டது. விடுதலைக்கு முன் நேதாஜி பகத்சிங் விடுதலைக்குப் பிறகு கிருபளானி ஜெயப்ரகாஷ் நாராயணன் உத்தரப்பிரதேசத்தில் முதல் பெண் முதலமைச்சர் ஆக இருந்த சுசிதா கிருபளானி அதேபோல் ராஜபாளையம் குமாரசாமி ராஜாவை தேர்தலில் வென்ற தமிழ்நாட்டின் முதல்ப் பிரிமியர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அது மட்டுமல்லாமல் இந்திராவின் உயிரை மதுரையில் காப்பாற்றிய பழ நெடுமாறன் வரையிலான பலரின் பாவங்களை அள்ளிக்கொண்டது தான் இன்றைய சிதைந்த நிலையில் உள்ளஇந்தக் காங்கிரஸ். அதற்கான முடிவுரைகளைத்தான் சோனியா இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார். சோனியாவால் பாரம்பரியமான சிந்தியா குடும்பம் பாதிக்கப்பட்டது. அதை ஒட்டி பல பூர்வீக செழுமையான காங்கிரஸ் பற்றுள்ள குடும்பங்கள் காலாவதி ஆக்கப்பட்டன. இறுதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் பல்லாயிரத்திற்கு மேல் லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு பின்னணிக் காரணமாய் இருந்தது இப்படியாகத் தொடர்ந்த காங்கிரஸின் பெரியண்ணன் போக்கால் அரசியலிலும் பன்னாட்டு உறவிலும் செய்த தவறுகளுக்குக் காலம் இப்போது பழிவாங்குகிறது .. மீண்டும் காங்கிரஸின் புத்துயிர்ப்பிற்கான எதிர்காலம் கண்ணுக்கு எட்டிய வரை காண முடியவில்லை.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...