#விருதுநகர்_திருநெல்வேலி_தென்காசிமாவட்டங்களில்கரிசல்_நெல்லை_பொதிகைபுத்தகதிருவிழாக்கள்
———————————————————
அத்துடன் முக்கியமாக அந்த மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கட்டுரையாளர்கள் கவிஞர்கள் சிறுகதை ஆசிரியர்கள் நாவலாசிரியர்கள் போன்ற அனைவரின் படைப்பையும் ஒருங்கிணைத்து வருடம் தோறும் ஒரு புதிய தொகை நூலைக் கொண்டு வருகிறார்கள். இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
பொதிகைத் திருவிழா என்று திருநெல்வேலியிலும் விருதுநகர் கரிசல் திருவிழா என புத்தகக் கண்காட்சி என்று விருதுநகரிலும், பொதிகை புத்தகத் திருவிழா என்று தென்காசியிலும் இந்த புத்தகத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி வருவதோடு மக்களுக்கு இடையே இலக்கியம் வரலாறு பண்பாடு அரசியல் போக இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரையிலான நூல்களைக் கற்கவும் பேசவும் அவற்றை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்கிறார்கள்! நல்ல மாலை சொற்பொழிவுகள் அகன் நடக்கின்றன.
மற்றபடி இந்தத் தொகை நூல் கொண்டு வருகிற விஷயத்தில் மேற்சொன்ன விருதுநகர் , திருநெல்வேலி தென்காசி தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் அது நடப்பதாக தெரியவில்லை! இது ஒரு வேதனையான விஷயம்! விருதுநகர் மாவட்ட தலைவர் திரு ஜெயசீலன் தட் முயற்சியில் இது வரை 16 வகையான தொகை நூல்களை கொண்டு வந்துள்ளது.
கூடவே, ஒரு நூற்றாண்டு கட்டுரைத் தொகுப்பு ஒன்றை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஒரு சிறப்பான தொகை நூலாகக் கொண்டு வந்துள்ளது! அதேபோல தென்காசி மாவட்ட நிர்வாகமும் தங்கள் பகுதியைச் சார்ந்த படைப்பாளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பான தொகை நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டமும் நாட்டுப்புற இலக்கியங்களோடு சேர்த்து முன் மாதிரியாக தொகை நூலைக் கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இது மாதிரியான ஒரு தொகை நூலைக் கொண்டு வர வில்லை !ஏன் என்று தெரியவில்லை! இந்த நூல்களைப் பெற்றவன் என்கிற முறையில் நான் சொல்லிக் கொள்வது மற்ற தமிழகத்தின் மாவட்டங்கள் அனைத்திலும் இம்மாதிரியான அந்த பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளை இணைத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வருகிற போது தமிழுக்கு இன்னும் வளமான அல்லது ஒரு முழுமையான இலக்கிய அரசியல்ப் பண்பாட்டுப் பார்வை கிடைக்கும் என்பதுதான் என் போன்றோரின் விருப்பம்! இது அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளை மேலும் எழுத ஊக்குவிக்கும்! அத்துடன் கலை இலக்கிய வரலாறுகளை நாம் இதுவரைப் பாதுகாத்து வந்ததன் தொடர்ச்சியாகவும் அது அமையும்!
நான் கடந்த முப்பது வருடங்களில் "நிமிர்ந்து நிற்கும் நெல்லை"கி ரா அவர்கள் பற்றி 100 படைப்பாளிகள் எழுதிய மதிப்பீட்டுத்தொகை நூலையும் பாரதியார் குறித்த ஒரு மதிப்பீட்டுத் தொகை நூலையும் இன்ன பிற நூல்களையும் தனி ஒருவனாகக் கொண்டு வந்துள்ளேன்! கதை சொல்லி என்கிற மூன்று மாதத்திற்கு ஒரு முறையான நாட்டாரியல் இதழை 38 இதழ்களாகக் கொண்டு வந்துள்ளேன்!
இன்று மாவட்ட நிர்வாகங்கள் அதைச் செய்வது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது!
தமிழகத்தின் மற்ற மாவட்ட நிர்வாகங்கள் இம்மாதிரியான முயற்சிகளை ஒருங்கிணைப்பது மிக்க அவசியம் என்று மட்டும் கூறிக்கொள்கிறேன் !
No comments:
Post a Comment