உத்தர்’ என்றால் வடமொழியில் வடக்கு என்றும் ‘அயனம்’ என்றால் வழி என்றும் பொருளாகும். சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே #உத்தராயணம் எனப்படும். தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். இதன் துவக்கம் தை மாதம் ஆகும். இதை இந்திய மக்கள் பெரும்பாலோர் வெவ்வேறு பெயர்களில் தை உதயத்தில் காடு கரையில் விவசாய தானியங்கள் வீடு வந்த மகிழ்ச்சியில் சூரியனை, மாட்டு செல்வங்களை கொண்டாடக் கூடிய திருநாள் #தைபொங்கல் - #மகர சங்ராந்தி.
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை #தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
#சிந்துசமவெளிநாகரிகத்தில் தோன்றிய ஜல்லிக்கட்டு என்கிறீர்கள் சரி ஆனால் தற்போது சிந்து வெளி நாகரிகம் எங்கு உள்ளது அங்கிருந்து வந்தவர்கள் என்னவென்று கூறுவது...?
பல மாதிரியான சூழல்உள்ளன இதில். #எருதுகட்டு, #ஜல்லிக்கட்டு,
#மாடுவிரட்டு, #மஞ்சுவிரட்டு என.. கரிசல் விவசாய பகுதி எருதுகட்டு, #ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபட்டது. ஜல்லிக்கட்டு #மதுரைநாயக்கர்மக்கள்ஆட்சி காலத்தில் உருவானது. இது ஏறு தழுவுதல் அல்ல.
No comments:
Post a Comment