————————-
மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நல்லடக்கத்தின் போது வந்த காங்கிரஸ் முதல்வர்கள் பலரும் அடக்கம் முடிந்தபின் மன்மோகன் சிங்கின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்து வரலாம் என்று விருப்பம் தெரிவிக்க சோனியா காந்தி அதைத் தடுத்து விட்டாராம்.
கேட்டால் காங்கிரஸ் முதல்வர்கள் அங்கு போகும்போது மன்மோகன் சிங் குடும்பத்தினர் காங்கிரஸ் முதல்வர்களிடம் அவருக்கு நினைவுச்சின்னம் வைக்க உதவி கேட்பார்கள் என்று யூகமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸில் உள்ள சீக்கியர்த் தலைவர்கள் “மன்மோகன் சிங் சீக்கியர்களாகிய எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் ஆகவே அவரது வீட்டிற்கு போய்ப் பார்த்துவிட்டு தான் வர வேண்டும்” என்று சொன்னபோது சோனியா காந்தி குறிப்பாக அதைத் தடுத்து செல்லக்கூடாது என்று உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸில் உள்ள சீக்கியத் தலைவர்கள் மிகுந்த வருத்தமும் மன வேதனை அடைந்துள்ளார். அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்தால் என்ன தவறு இருக்கிறது.! மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த உலகமே பாராட்டிய மன்மோகன் சிங்குக்கு இப்படி ஒரு நிலையா?
மோதிலால் நேரு சாலையில் உள்ள மன்மோகன் சிங் வீட்டிற்குப் பிரதமர் மோடி அமித்ஷா நட்டா போன்ற அனைத்து முக்கியஸ்தர்களும் இறுதி சடங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது வீட்டுக்கும் சென்று அவரது குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.
சீக்கியர்களுக்கு பிரதமர் மோடி அதிகம் உதவி செய்வதால் சீக்கியர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் அவர்களிடையே மோடிக்குச் செல்வாக்கு கூடியிருக்கிறது என்று காங்கிரஸ் நினைப்பது ஒருபுறம் இருக்க , விரைவில் டெல்லியில் தேர்தல் வரப்போகிறது ! அங்கே அதிகம் சீக்கியர்கள் வசிக்கக்கூடிய நிலையில் வரும் தேர்தலில் இம்மாதிரியான சோனியாவின் போக்கால் காங்கிரசுக்கு அவ்வளவு ஆதரவாக கிடைக்காது என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸில் இந்திரா குடும்பத்திற்கு வெளியே எதுவும் ஆதரிக்கப்படுவ
தில்லை என்பது வேதனையானது.
பி. வி.நரசிம்ம ராவ் இறந்த பின் அவர் உடல் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க விடாமல் ஹைதராபாத்துக்கு விரட்டி அடிக்கப்பட்டது மாதிரியான நிலை இதுவும்.
No comments:
Post a Comment