Tuesday, May 13, 2025

ஸ்டாலின் அவர்களே, இதற்கு என்ன உங்க பதில்….

 ஸ்டாலின் அவர்களே, இதற்கு என்ன உங்க பதில்….

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!

கேள்வி :- வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தார் என்ற வழக்கின் காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிடத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே?
தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்காவிட்டாலும், அந்தத் தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் நிலை என்ன என்பது குறித்து வருகிற 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக் கிறது. வழக்கு விவரம் என்னவென்றால், போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக பலரிடம் வசூலித்த 4.25 கோடி ரூபாயை அமைச்சரிடம் உதவியாளர் மூலமாகக் கொடுத்ததாகவும் ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பித் தரவில்லை என்றும் கூறித்தான் வழக்கே நடைபெற்றது. பல அமைச்சர்கள் மீது இதே புகார் உண்டு. ஆனால் இப்போதுதான் ஒரு புகார் உயர் நீதிமன்றம் வரை வந்திருக்கிறது

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...