திருவள்ளுவர் ஆண்டு குறித்த மறைமலையடிகளாரின் உரைச்சுருக்கம்!
1935ஆம் ஆண்டு மே மாதம் 18,19 (வைகாசி - அனுசம்) ஆகிய நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்நாள் மறைமலையடிகளார், "திருவள்ளுவரும் திருக்குறளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த உரையின் சுருக்கம் #செந்தமிழ்ச்செல்வி இதழில் (சிலம்பு 13, பரல் 10 பவ-வைகாசி) வெளிவந்துள்ளது. இந்த இதழில் திருவள்ளுவர் படம் ஒன்றும் திருக்குறள் குறித்த பிற அறிஞர்களின் அரிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தனித்தமிழ்த்தந்தை மறைமலை அடிகளாரின் உரைச்சுருக்கம் கொண்ட கட்டுரை உலகதமிழர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31ல் தொடங்குகிறது என்று பேசிய மறைமலை அடிகளார், அது தை மாதம் தான் பிறக்கிறது என்றோ, தை 2 தான் திருவள்ளுவர் நாள் என்றோ எங்குமே கூறவில்லை!! மாறாக, வைகாசி அனுசத்தில் தான் திருவள்ளுவர் நாளை கொண்டாடினார்!! ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு!!!! அதிகம் தமிழருக்கு பகிரவும்!





No comments:
Post a Comment