Monday, May 12, 2025

படைப்பாளனின் தர்மம்.ஜெயகாந்தன்

 படைப்பாளனின் தர்மம்.ஜெயகாந்தன்



--
என் பாத்திரங்கள் மிகை இயக்கங்கள்'
கொண்டவையே என்பார் ஜெயகாந்தன்.
குறிப்பிட்ட காலத்தில் அவையே உண்
மையானவையாகத் தோற்றங்கொள்ளு
ம்.குறிப்பாகச் சிலநேரங்களில் சில மனி
தர்கள் நாவலில் அசல்ஜெயகாந்தனைச்
சரியாகப் புரிந்துகொள்ளலாம்.சண்டைச்
சிங்கமாக இருந்ததால் அவரின்மேலான
எந்த விமரிசனமும் இல்லாது போயிற்று.
கூர் கத்தியை வைத்துக்கொண்டு அலை
யும் மனிதராகத்தான் இருந்தார்.
மமதை இயல்புதான்.அவ்வாறு இருக்க
தமிழ்ப்படைப்புலகம் அவரை அனுமதித்
திருந்தது.எழுதியதை அப்படியே நியாயப்
படுத்தி தனக்குத்தானே வக்கீலாக மாறி
விடும் விசேஷ குணாம்சம். கலைஞன்
கம்பீரமாக இருக்கவேண்டும் என்பதை
கர்ஜனையாகச் சொல்லி தானே முதல்
கலைஞனாக இருந்தார்.ஜெயகாந்தன்
காலம் என்பது கேள்விகளற்ற காலம்.
கேள்விகள் என்ற அம்சம் ஒன்றிருப்பதை
யே வாசகர்திரள் மறந்திருந்த நேரமது.
விமரிசகர்களும் இதில் அடக்கம்.
ஜெயகாந்தன் தன்னைக் கம்யூனிஸ்ட்
என்று காட்டிக்கொண்டு சங்கரமடத்தின்
முன்போய் நின்றார்.எனக்கு உவப்பான
பிராந்தியம் இது என்று உரக்கவே அறி
வித்தார்.ஜெயகாந்தன் எழுத்துலக வளர்
ச்சி என்பது இடதுசாரி இயக்கம் தந்தது.
ஆனால் வளர்ந்தபின் அதைவிட்டுவிலகி
நின்று கடுமையாக விமரிசித்து எதிர்க்
கரையில் நிற்பது வழக்கமானதுதான்.
இளையராஜா தொடங்கி இதுநடைமுறை
வழக்கமாகவே மாறிப்போனது.ஜெ.கே
போன்ற உணர்வுகளில் மட்டுமே உற்சாக
மாக இருக்கத்தெரிந்தவர்கள் இடப்பெய
வு என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்.
முற்போக்குச் சிந்தனையாளர்,எங்களவர்
என்று இறுகத்தழுவிக்கொண்ட இடதுசா
ரிகள்,முற்போக்காளர்கள் ஜெ.கேயைக்
கொண்டாட வேண்டிய நிர்பந்தத்திற்கு
ஆளாயினர்.சநாதனிகள் சங்கரமடத்துக்
கதவுகளைத்தட்டியவரை நல்ல வரவாக
சநாதன ஞானஸ்தானம் செய்து மகிழ்ந்
தனர்.ஜெயகாந்தன் சநாதனி என்பது
பிழையன்று.வேஷ்டி கட்டும்போதெல்
லாம் பஞ்சகச்சமாகத்தான் கட்டுவேன்,
சமஸ்கிருதம் உன்னத பாஷை என்றெல்
லாம் அறிவித்தார்.தஞ்சாவூர் அவரை
உள்ளே அனுமதிக்கவில்லை.எனக்கெ
ல்லாம் தனிப்பட்டமுறையில் வருத்தமே.
"அக்னிப்பிரவேசம்"ஒன்றைமட்டும் வைத்
தக்கொண்டு ஜெயகாந்தன் கைகளைப்
பற்றிக் கொள்ள முடியாது.அறிவியலை
மதமாக மாறும் முயற்சிகள் அவரிடமி
ருந்தன.அறமே தெய்வம் என்றார்.பாரதி
யைத் துணைக்கு வைத்துக்கொண்டார்.
"ஜெய ஜெய சங்கர.."உருவானது .
ஒரு சுதந்திரமான உலகில் கருத்துரிமை
என்ற பிம்பத்தைக் கட்டமைத்தார்.தேச
பக்தி என்ற ஓரு வெற்றுச்சொல்லில்
பரவசப்பட்டு அதிகார அரசியலில் இற
ங்கி முழங்கினார்.
பல முரண்களின் கூட்டு என்றாலும் நமக்
குரிய ஜெயகாந்தனைப் பிரித்துப்பார்க்க
வேண்டியதாகிவிட்டது.நல்லவாசகனால்
விமரிசனத்தோடு ஜெயகாந்தனை வாசி
க்க முடிந்தது."பாரீசுக்குப்போ"நாவலில்
கூட அசல் ஜெயகாந்தனை அறியலாம்
என்று தாராளம் காட்டலாம்.
அவருடைய தோள்களில் ஏறிக்கொண்டு
கம்பீரமாக அவருடன் உலா வந்தவர்கள்
தாம் நாங்கள்.ஓருகட்டத்தில் தோளிலிரு
ந்து குதித்து அவரின் திசைக்கு எதிர்த்தி
சையில் பத்திரமாகப்பயணம் செய்தோம்.
அவருடைய அறிவும் ஆழமும் அபூர்வக்
கதை சொல்லியாக மாற்றினாலும் கதை
யுலகில் மாற்றங்கள் வந்துவிட்டதையறி
ந்த இளைஞர்கள் பௌராணிகக் கதை
களை நவீன எழுத்தில் ஜெ.கே வழங்கு
வதைக்கண்டு திடுக்கிட்டனர்.அப்போது
ஜெ.கே உச்சத்தில் இருந்தார்.ஸ்ரீ மடத்து
ஆலோசனைகளையே பிரதிபலித்தார்.
அவரது ஞானமொழிகள் தூக்கத்தில் பே
சியவை.அவற்றை இலக்கியமாகக் காட்ட
சீஷர்கள் நிறையபேர்குவிந்துவிட்டனர்‌.
அவரது பூர்வ வாசகர்கள் அவர் குழந்தை
மையைப் போற்றவேண்டியதாயிற்று.
முக்காடற்ற முகம் அழகானதுதான்.எதற்
கும் எதிர்ப்பு சொல்லாத இயந்திரபாகமா
கவே வாசகர் பலர் மாறிப்போயினர்.
சிலர் மௌனம் காத்தனர்.ஜெயகாந்தன்
வெற்றி என்பதே இப்படியானதுதான்.
ரோமன் ரோலேந்த், முன்ஷி பிரேம்சந்த்
இவர்களை மொழிபெயர்ததும் ஒரு சமரச ஏற்பாடுதான்.அதிக வாசிப்பும் அதிக
அனுபவச் சேர்க்கைகளும்கூட ஆபத்தா
னதே என்ற அனுபவத்தைத் தமிழ் எழுத்
துலகம் கண்டது."ஊருக்கு நல்லது சொல்
வேன்" என்ற என்ற வாசகம் செறிவற்றது.
ஜெகே இதைச் சிக்கெனப்பிடித்துக் கொ
ண்டார்.உபதேசிகளின் நாடு இது என்று
அறிந்திருந்தார்.ஆதி இலக்கியங்கள்
எல்லாமே உபதேசம் சார்ந்தவைதான்.
சரி இவ்வளவுக்குப்பின்னும் ஜெயகாந்த
னின் இடம் எது என்று பேசவேண்டியிருக்
கிறது. சிம்மத்தின் குரல் தொலைவில்
கேட்டாலும் அது சிம்மம்தான்.நேசம் மிக்க சிம்மம்.
"கம்யூனிஸ்ட் கட்சியே எனது ஞானத்
தந்தை ஆயிற்று.பின்னால்அக்ஞான
த்தந்தையானபிறகு வருத்தத்தோடு
கைவிடவேண்டியதாயிற்று" என்ற
போதும் "நம் ஜெயகாந்தன் நம் ஜெய
காந்தன்"என்றுதான் கொண்டாடினோ
ம்.மேல்விமரிசனமில்லை.நேசிப்பு வட்
டத்திற்குள்தான் இருக்கிறார்.
----
ஏப் 24 ஜெ.கே பிறந்தநாள்.

''''

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்