செல்வப் பெருந்தகைக்கு மனுநீதிச் சோழன் யார் என்று தெரியுமா? ஸ்டாலினையும் மனுநீதிச் சோழனையும் ஒப்பிடுகிறாரே! தமிழகம் இத்தகைய காட்சிப் பிழைகளை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதே!
#சென்னைஉயர்நீதிமன்றத்தில் அண்ணாச்சி #ஜஸ்டிஸ்எஸ்_ரத்தினவேல்பாண்டியன் அவர்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த போது அங்கு வள்ளுவர் அல்லது காந்தியின் சிலையை நிறுவலாம் என்று பேச்சு நடந்து கொண்டிருந்தபோது நான் நீதிமன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலையை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன்.
மிக அருமையான யோசனை அப்பா என்று அவர் பாராட்டிக் கூறியது கிட்ட தட்ட 38 வருடமாகியும் இன்றுவரை என் ஞாபகத்தில் இருக்கிறது! தமிழர் ஆட்சி மரபில் எந்தச் சமரசமும் அற்று நீதியை காக்கக்கூடிய அரசனாக இருந்தவன் மனுநீதிச் சோழன்!
இதை எல்லாம் உணராமல் எதை வேண்டுமானாலும் பேசலாம் யாரை வேண்டுமானாலும் புகழலாம் என்பது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது! இப்போதுள்ளவர்களில் யார் மகாத்மா காந்தி யார் மனுநீதிச் சோழன் என்கிற விவஸ்தை இல்லாமல் விசுவாசம் காட்டுகிறேன் பேர் வழி என்று எதையாவது ஒப்புமையாக்கி உளறிக் கொட்டும்போது
இந்த மாதிரியான அமைச்சர்கள் யார் என்று காட்டித்தான் கொடுத்து விடுகிறது.

No comments:
Post a Comment