Monday, May 12, 2025

ஏ! #தமிழகமேசிந்தி….

 ஏ! #தமிழகமேசிந்தி….

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும் அறமும் கிடைக்க வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது வேதனை.இந்த சீரழிவையே போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களில் பல்வேறு காலங்கள் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படும் கொடுமை அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை தொடர்கின்றன. இது நாகரிகத்தின் அழிவின் நிலையை எட்டி வருகிறது.

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...