சட்டமன்றத்தில் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து விட்டதாகச் செய்தி ஊடகங்களில் மிகையாக ஒளிபரப்புகிறார்கள். ஆனால் நடப்பது மிகக்குறைவு தான்! என்று சொல்கிறார்.
அப்படியானால் முதல்வர் அவர்களே!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மூலமாக தமிழகத்தில் அதிக அளவில் கொலைகள் நடைபெறுவது போல் தோற்றம் ஏற்படுத்தி வருகின்றன.
செய்தி ஊடகங்கள் உங்க பிடியில் இருக்கிறது.நீங்கள் கணக்குக் கொடுங்கள்! கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாட்டில் இது மாதிரியான கொலைகள் எத்தனை நடந்திருக்கின்றன என்பதற்கான புள்ளி விவரங்களோடு நீங்கள் அதன் தகவலையும் தர வேண்டும் அல்லவா? அத்துடன் இல்லாமல் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் எத்தனை? காவல் நிலைய மரணங்கள் எத்தனை நடந்துள்ளது? போதை பொருட்கள் கடத்தல், கள்ளச்சாராயம் சாவுகள் என்பதற்கான புள்ளி விவரங்களையும் நீங்கள் கொடுக்க வேண்டும். காவல்த்துறை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா! அல்லது தன்னிச்சையாக இயங்குகிறதா என்பதற்கான சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டிருகிறது!
எல்லாவற்றிற்கும் ஆன ஆதாரங்கள் இருக்கும் அடிப்படையில் கொலைகள் அதிகரித்து விட்டதாகச் சொல்வதை ஏற்காமல் வன்முறைகளும் கொலைகளும் குறைவாகத்தான் நடந்துள்ளது என்று கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகிறது! தொடரும் கொலைகளுக்கான உங்கள் நடவடிக்கை என்ன?
No comments:
Post a Comment