Saturday, May 3, 2025

#ஈரோடுகிழக்குதொகுதி_இடைத்தேர்தல்!

 #ஈரோடுகிழக்குதொகுதி_இடைத்தேர்தல்!

இந்தத் தேர்தலில் திமுக மட்டும் களத்தில் நிற்கிறது. அதிமுக போட்டியில் இருந்து விலகிக் கொண்டு விட்டது. அதேபோல பாஜகவும் இந்தத் தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை!
எதிரணியில் சீமான் கட்சி மட்டும் அங்கே போட்டியிடுகிறது! கடந்த 2011- 15 காலத்தில் ஜெயலலிதா வலிமையாக ஆட்சியில் இருந்தபோது கலைஞர் ஒரு முறை இது மாதிரியான இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு எதிராகப் போட்டியிட விரும்பாமல் விலகிக் கொண்டார்.!
இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது! இந்த இடைத்தேர்தலில் பாஜக உண்மையாகப் போட்டியிட்டு இருக்க வேண்டும்! ஏனெனில் அதிமுகவும் பாஜகவும் இந்தத்தேர்தலில்
நிற்கவில்லையெனில் அந்த இரு அணியின் ஓட்டுகளும் சீமானுக்குத் தான் போகும்! ஏனோ தமிழகச் சூழல் இப்படியாகத் தான் இருக்கிறது!
பதிலாக பாஜக நின்றிருந்தால் அதிமுக பாஜக ஓட்டுகள் பாஜக வேட்பாளருக்குக் கணிசமான அளவில் நிறைந்து இருக்கும். அந்த வகையில் பாஜகவிற்கு அது ஒரு திருப்தியைத் தந்திருக்கும்! என்னவோ அதை விட்டு விட்டார்கள் ! இதில் என்ன அரசியல் சாணக்கியமோ! தெரியவில்லை?
போனமுறை போல மக்களை அங்கு பட்டியில் அடைக்க வேண்டிய நிலை இல்லை.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...