#கிருஷணதேவராயர் பிறந்தநாள்.
Today is the birthday of #Krishnadevaraya, the best of Vijayanagara Kings. He had immensely contributed to the development of Tamilagam in multiple areas.
தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களுள் முக்கியமானவர் கிருஷ்ணதேவராயர். இன்று அவர் பிறந்தநாள்.
வரலாற்றை எப்படிப் பார்ப்பது என்றே அறிவே இல்லாத திராவிடர்கள் ராஜராஜனை இழிவு செய்தனர். இவர்களுக்குப் பதில் தருகிறேன் என்று தமிழ்தேசியர் கிருஷ்ணதேவராயரை பதிலுக்கு இழிவு செய்கின்றனர். இந்த இரண்டு கூட்டம் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
மாமன்னரின் புகழை இரண்டு தமிழ்ப் புலவர்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்துவிட்டனர்.
ஒருவர் தமிழ்ப்புலவர் அரிதாசர். இருசமய விளக்கம் என்ற ஓர் அரிய தமிழ் நூலைச் செய்தவர் இவர். இந்நூலில் காணப்படும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு
‘கிரிபோல் விளங்கிக் கிளரும்புயக் கிட்ணராயன்
தரைமீது சிங்காத் திரியிற்செயத் தம்ப நாட்ட
வரமா தரவா லளித்தேவட கூவ மேவும்
கருமா மணிவண் ணனைநீடு கருத்தில் வைப்பாம்’.
இதில் கிருஷ்ணதேவராயர் புகழப்பட்டுள்ளார்.
அதேபோல சூடாமணி நிகண்டு நூலை இயற்றிய மண்டல புருடர் என்பவர் கிருஷ்ண தேவராயரை,
படைமயக் குற்ற போதும்
படைமட மொன்றிலாதான்
மடைசெறி கடகத் தோளான்
மதிக்குடை மன்னர் மன்னன்
கெடிமன்னர் வணங்குத் தாளான்
கிருட்டின ராயன் கைபோற்
கொடைமட மென்று சொல்ப
வரையாது கொடுத்த லாமே
எனப் புகழ்ந்து கூறியிருக்கிறார். இதில் கிருஷ்ண தேவராயரின் வீரமும், கொடைச் சிறப்பும் புகழப்படுகின்றன.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ராயர் புகழ் அவர் கட்டிய கோபுரங்கள் போல் வானளந்து நிற்கும்.

No comments:
Post a Comment