Monday, May 5, 2025

இன்று தை மாதத்திய பரணி நாள் !





 இன்று தை மாதத்திய பரணி நாள் !

அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்,,
இந்த கொங்கு மண்ணிலே கோலோச்சிய தமிழ்ப் பெருந்தகை ஒருவரின் குருபூஜை நாளும் இன்று தான் !
இன்று
அறுபது ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு தை மாதத்திய பரணி நாளில் ,நாஞ்சில் நாட்டில் பிறந்த பிள்ளை ஒருவன் அந்தத் தமிழ்ப் பெருந்தகையின் மலரடி தொழுது வந்தான்,,, !
இனி,,,
அப்பெருந்தகை !
கோவைநகர்க் கனி !
சைவக் குலமணி !
வித்துவமணி,
திருத்தொண்டர் புராணமணி !
சேக்கிழார் செய் சேவையினை மக்களுணர்ந்துய்ய வழி காட்டுமணி,
சிவக்கவிமணி !
இத்தனை சிறப்புப் பெயர்களைக் கொண்ட மனிதர் !
கோவையில் வாழ்ந்த சி.கே.சுப்பிரமணிய முதலியார் ! அவர்கள்,,,,,,
தொண்டை மண்டலத்து மாங்காட்டிலிருந்த கொண்டல் கட்டி குடி நெல்விளையார் மரபிலே பிறந்து கோவையிலே குடியேறியவரும், மகாவித்துவானும் , வழக்கறிஞரும், அருட்புலவரும்,
கி.பி 1866 ஆம் ஆண்டு கோவையில் சைவ பிரசங்க சாலையினைத் தோற்றுவித்து சைவப்பணி செய்தவருமான, கந்தசாமி முதலியார் , வடிவம்மையார் தம்பதிகளின் திருமகனாக 20-02-1878 ஆம் பிறந்தவர் தான் சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள்.
தன் தந்தையான கந்தசாமி முதலியாரின் மாணவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களையே தன் ஆசிரியராகக் கொண்டு தமிழ் கற்றவர் !
சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.வகுப்பில் கற்று , தமிழில், மதராஸ் மாகாணத்தின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, பிராங்லின் தங்கப்பதக்கம் பெற்றவர் !
1917 ல் பெரியபுராண வாசிப்பினை முறையாகத் தொடங்குகிறார் !
1918 ல் பேரூர் சாந்தலிங்கசாமிகள் மடத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாவிற்கு வந்த கயப்பாக்கம் சதாசிவச் செட்டியாரின் பெரிய புராண உரையினைக் கேட்கிறார்,,,
அதன் பின் தொடந்து 4 ஆண்டுகள் அவரிடமே பெரியபுராணம் பாடங்களை எல்லாம் கற்கிறார்,,,
அதுவே அவர் பின்னாளில்,,,
பெரிய புராண உரை எழுதக் காரணமாகிறது !
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் கோவைச் சிறைக்காலத்தில் அவர் கண்ட வேற்று முக மனிதர்களில் முதன்மையானவர் சி.கே. சுப்பிரமண்ய முதலியார் அவர்கள் மட்டும்,,தான்,,,
இதனாலேயே,, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்
தன் மகனுக்கு சுப்பிரமண்யன் என்று பெயரிடுகிறார்..
திருப்புக்கொளியூர் எனும் அவினாசியில் உறைகின்ற கருணாம்பிகையைப் பற்றி ‘’அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத் தமிழ் என்று நூல் எழுதுகிறார்.
பன்னிரெண்டாம் திருமுறையான பெரியபுராணத்திற்கு உரை எழுதிய வண்ணம் கண்டு,,
‘’போற்று திருத்தொண்டர் புராணத்தின் பேருரையை
வேற்றுமை இன்றி விரித்துரைத்தான் ! நீற்றணிசெய்
கோவையுறை சுப்பிரமணிக் கோமான் குறுமுனியாத்
தேவை நிகர் அண்ணல் சிறந்து ‘’ என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெண்பாப் பாடி வாழ்த்துகிறார்,,,,
இது எல்லாவற்றையும் விட,,,,,,,,
1956 ல் ’’ஒரு பித்தனின் சுய சரிதம்’’ என்று தன்னைப் பற்றியும், நூல் எழுதுகிறார்.
பேரூர் பட்டிபெருமான் கோவில் திருப்பணிகள் மட்டுமல்ல,,,
திருவிழாக்களும், நடத்துகிறார் !
1922 முதல் 1925 வரை கோவை நகரசபை உறுப்பினராகவும்,,
1926 முதல் 1929 வரை சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழி ஆணையராகவும், பணி செய்கிறார்,,,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக,,
சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திற்கு உரை எழுதிய மனிதருக்கு,,
சேக்கிழாரின் மீது எவ்வளவு பற்று இருக்கும்,,,, !
பேரூர் பட்டி பெருமான் கோவிலில் அவரின் முயற்சியில்,,,
சேக்கிழார் சிலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் !
சேக்கிழார் சிலையினை வார்க்கும் போது,,,
உலோகக் கலவையுடன் தங்கம் சிறிது சேர்த்தால் நன்றென சிற்பி கூறுகிறார் !
அப்பொழுதில்,,,
அதுவரை சென்னை மாநிலக்கல்லூரி பி.ஏ.தமிழில் முதல் மாணவனாக விளங்கியதற்காக பரிசாக அணிவிக்கப்பட்ட பொற்பதக்கத்தினைக் கழற்றி மாசிவக்கவிமணி அவர்கள் கொடுக்கிறார்,,,
தம் வாழ்நாள் முழுவதும் போற்றி வைத்திருந்த பதக்கம் அது ! என்றாலும்
தான் நேசித்த சேக்கிழார் மேனியினைப் அப்பொற்பதக்கம் தகதகக்க வைக்குமென்றால்,,,,
தான் பெற்ற பட்டங்களெல்லாம் அந்த சேக்கிழார் தந்த தமிழால் அல்லவா! என்று சொல்லிப் பெருமிதப்பட்ட சிவக்கவிமணி அவர்கள் .
1958 ஆம் ஆண்டு துறவமேற்கிறார்,,,,
ஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள் என்ற பெயர் தாங்கி , சிவனை நினைந்தபடி தவவாழ்வு வாழ்கிறார்,,,,
1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் நாள் தை மாத பரணி நாளில் சிவபதம் அடைகிறார்,,,,,,,,,
இன்று அவரின் 64 வது நினைவு நாள்,,,,
மட்டுமல்ல,,,,
இன்று அவர் நினைவாய் குருபூஜையும் பேரூரில் நடந்தது !
ஒரு நல்ல தமிழ் சொல்லிய பெரியவர் சிவக்கவிமணியின் கழலடி பணிவோம் !

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்