Saturday, May 3, 2025

#சிங்களஆட்சிநிர்வாகம் #சீனாகடன்கள்

 #சிங்களஆட்சிநிர்வாகம் #சீனாகடன்கள்

————————————-
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன பயணத்திச, இலங்கைக்கு நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன.
சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கையெழுத்தாகி உள்ளது .
ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு 255 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.சீனாவிடம் மட்டுமே 900 கோடி ரூபாய் அதுவும் கொரோனா காலத்தில்..
இந்திய நிறுவனமான (ITC) Indian Topaco Company யின் முதலீட்டு கட்டுமானமாக கருதப்படும் ITC Ratnadipa, Colombo. 6 நட்சத்திர ஹோட்டல் கட்டுமானத்தின் பெறுமதி சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்.
வேளைவாய்ப்பானது, 600 இலங்கையர்களுக்கு 20 இந்தியர்கள் என்ற அடிப்படையிலேயே கட்டுமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போதுவரை அதே நடைமுறையும் செயற்றிட்டமுமே கடைபிடிக்க படுகிறது.
450 மில்லியன் அமெரிக்க டால்களுக்கும் தான்டி தற்போது இன்னு செலவீனங்கள் அதிகரித்தாலும் பெறும் இலாபகரமான முதலீடாக ITC நிறுவனத்திற்கு அமைந்துவிட்டது..
அதேபோல்தான் இந்த சீன நாட்டின் ஒப்பந்தமும்.. Sinopac நிறுவனம் சுமார் 1600 மில்லியன் அமெரிக்க டால்களை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது..
வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் இலங்கைக்கு.. இலாபம் சீன நிறுவனத்திற்கு..
இலங்கை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் விசித்திரமான நாடு
எவ்வித குறையும் இல்லாமல் இயற்கை வளங்கள் மிகுந்த நாடு ஓரளவு உருப்படியான உள் கட்டமைப்பு செய்தால் கூட சிங்கப்பூர் ஜப்பான் தென் கொரியா போல் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கலாம்...... ஆனால் இலங்கையர்களின் கோணல் புத்தி அந்த நாடு எப்போதும் பிறரை எதிர்பார்த்து வாழ்வது போலவே இருக்கும்.
(நாளை விரிவான புவி அரசியல்- இந்து மகா சமுத்திரம் குறித்த பதிவு)

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...