Saturday, May 3, 2025

#திருமலைநாயக்கர்
































#திருமலைநாயக்கர்
(#ThirumalaiNaicker), #மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது
திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.
ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.
திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள;
மதுரை,
திண்டுக்கல்,
ராமநாதபுரம்,
சிவகங்கை,
புதுக்கோட்டை,
மணப்பாறை,
கோயம்புத்தூர்,
சேலம் மற்றும்
திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்
கள்தான்.
442nd birth Anniversary of Thirumalai Nayakar ( 1623–1659) the ruler of Madurai Nayak Dynasty in the 17th century. He ruled Madurai between A.D 1623 and 1659. His contributions are found in the many splendid buildings and temples of Madurai. His territories comprised much of the old Pandya territories which included Coimbatore, Tirunelveli, Madurai districts, Aragalur in southern Tamil Nadu and some territories of the Travancore kingdom.

18-1-2025 

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...