1.எந்த மனிதக் குழுவும் திடீரென்று உருவாவதில்லை. வரலாறோடு உருவாகி வளர்ந்துவருவது அது. கல்வெட்டுச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், நாட்டார் வழக்காற்றியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள், இவை அறிவியல் பூர்வமாகப் பொருள் கொள்ளப்பட வேண்டும். இம் மாதிரியான அடிப்படைகளில் திரட்டப்படும் தகவல்கள் வரலாற்று அறிவியல் அடிப்படையில் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்.
எழுத்தாளர். பொன்னீலன்
நம்முடைய சமூகத்தின் நுண்வரலாற்றை சாதிகளின் பரிணாமம், உறவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இனிமேல் பேசமுடியாது. அப்படிப்பேசவேண்டும் என்றால் அது சாதிசார்ந்த சண்டையாக கீழிறங்காமல் ஒரு அறிவார்ந்த தளத்தில் நிற்கும் விவாதமாக இருந்தாக வேண்டும்.
என்ன சொல்கிறேன் என்றால் நாயர் சாதியை குறைத்து ஒருவர் எழுதினாரென வைத்துக்கொள்வோம், நாயர் சாதியினனாகிய நான் உடனே அதற்கு எதிர்நிலை எடுக்கவேண்டியதில்லை. அவ்வாய்வின் ஆதாரங்களையும் தர்க்கங்களையும் மட்டுமே நான் பார்க்க வேண்டும். அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம் அதை நான் சொல்லும்போது என்னை சாதிப்பற்றாளன் என முத்திரை குத்திவிடுவார்களா என்ற சந்தேகம் எனக்கு வரக்கூடாது. அத்தகைய சூழலே இவ்வகை வரலாற்றாய்வுக்கு உகந்த சூழல்.
அது இன்று கேரளத்தில் உள்ளது, தமிழ்நாட்டில் இல்லை. எந்த ஒருசாதியினரும் தங்கள் சாதியைப்பற்றிய எதிர்மறைக் கருத்தை கேட்பதற்குச் சற்றும் தயாராக இல்லை. சாதகமான கருத்து எத்தனை பொய்யானதாக இருந்தாலும் அதையே விரும்புகிறார்கள்.
எழுத்தாளர்.ஜெயமோகன்
No comments:
Post a Comment