Saturday, May 3, 2025

#தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழகத்தில் தொழில்த் துவங்க எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை!

 #தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் தமிழகத்தில் தொழில்த் துவங்க எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை! என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் 2025 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் நடந்தது! இதில் மகாராஷ்டிரா 5.70 லட்சம் கோடி தெலுங்கானா 1.70 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால் இதில் பெரும் முழக்கத்துடன் பங்கேற்ற தமிழகத்திற்கு எந்த முதலிடம் கிடைக்கவில்லை இது தமிழகத்திற்கு பெரும் தோல்வியாகும்! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழகத்திற்கு குறைந்து வருகிறது! மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாம் இடத்தில் இந்த தமிழக இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது! ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு தொழில் துறையில் முன்னிவையில் இருப்பதாகவும் முதலீடுகள் குவிந்து வருவதாகவும் பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது!
வெறும் இலவசங்களால் கஜானாவைக் காலி ஆக்கி விட்டு கடன்களுக்கும் அந்நிய முதலீடுகளுக்கும் வெறும் கையுடன் காத்துக் கிடக்கிறார்கள்! என்ன சொல்ல!
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இன்றிக் கெடும்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்