சீனாவின் கோபம்?? பாகிஸ்தான் ஒருபோதும் சீனாவின் கண்ணசைவின்றி இந்தியாவைச் சீண்ட முயலாது. தற்போதைய அமெரக்காவுடனான வர்த்தகப் போரில் சீனாவின் நலன்களுக்கெதிராக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சீனா கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தீர்மானித்தது மட்டுமன்றி ஆப்பிள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு நகரத் தீர்மானித்திருந்தன. அத்துடன் இந்திய அமைச்சர் ஒருவர் வரிவிதிப்பு விடயத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் சீனாவைக் கடுமையாகத் தாக்கியும் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி நிச்சயமாக சீனாவைக் கோபமூட்டியிருக்கும்.
கோவிட் பிரச்னையின்போது பிரதமர் மோடி சீனாவிலுள்ள பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சி எடுக்கப்படுமெனக் கூறியிருந்தார். இதனால் சினமுற்ற சீனா கல்வான் போரைத் தொடங்கியது நினைவு கூறத்தக்கது!
No comments:
Post a Comment