#அரசியல்வியாபாரிகளுக்குஇதுதான்பாடம்.
———————————————————-
கர்நாடகா நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1,562 ஏக்கர் நிலங்களும் 27 கிலோ தங்கமும் வைர நகைகளும் கர்நாடக அரசு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டாற்றும் என்பதன்றி அதற்கு வேறு தகுதிகள் கிடையாது!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வீண் அகம்பாவத்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் ஊழல்களாலும் எவ்வளவு பணம் சேமித்து வைத்துக் கொண்டாலும் இறுதியில் இது மாதிரியான அவலங்களுக்கு உட்பட்டு தான் கரை சேர வேண்டியதிருக்கிறது!
பணம் பொருள் பதவி யாவும் வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை! ஒருவர் ஆற்றிய மக்கள் தொண்டும் புகழும் மட்டுமே அவர் இருந்தாலும் இறந்தாலும் நிரந்தரம் என்பதற்கு மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்வே சாட்சி!
அரசியலில் நேர்மையற்ற அரசியல் வியாபாரிகளுக்கு இதுதான் பாடம்.
No comments:
Post a Comment