Monday, May 5, 2025

#விவசாயநிலங்கள்


 #விவசாயநிலங்கள்

——————————-
இந்தியா முழுக்க விவசாய நிலங்களில் மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகளில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏழை பணக்காரருக்கு இடையேயான வித்தியாசம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்றும் அந்தப் புள்ளி விவரம் சொல்கிறது.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அரசால் வங்கிக் கணக்கில் இலவசமாக செலுத்தப்படும் தொகைகள் போன்றவற்றால் கட்டடங்கள் கட்டும் வேலைக்குக் கூட ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று லார்சன் அண்டு டூப்ரோவின் சேர்மன் சுப்பிரமணியம் கூறுகிறார். இத்தகைய காரணங்களால் பலரும் சொந்த கிராமங்களை விட்டு வெளியூர் வேலைகளுக்குச் செல்வதை விரும்பவில்லை . உழைப்பற்ற சோம்பேறித்தனத்தை வளர்த்து விட்டுக் கொண்டு நாட்டுக்கு ஆக்கபூர்வமான வளங்களை உருவாக்குவதில் இன்றைய நவீனப் பொருளாதாரமும் அரசுகளும் தடுமாறுகின்றன என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்