"The D.M.K. has missed the bus"
____________________
#பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தில் வாழ்ந்த கோலக்நாத் மற்றும் ஹென்றி வில்லியம் ஆகிய சகோதர்களின் 500 ஏக்கர் பண்ணை நிலத்தில், 30 ஏக்கர் நிலம் போக எஞ்சிய 470 ஏக்கர் உபரி நிலத்தை, பஞ்சாப் நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், 1953-ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில அரசு கையகப்படுத்தியது.
#இந்திய அரசியலமைப்பு தனது குடிமக்களுக்கு வழங்கிய சொத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை, சட்டம் மூலம் பறிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என 1967-இல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
#இத்தீர்ப்பினை முடக்க இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு 5 நவம்பர் 1971 அன்று நாடாளுமன்றம், 24-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
#இந்த திருத்தங்களின்படி அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது.
#அன்று இந்த விவகாரம் விவாதம் மற்றும் ஓட்டெடுப்பிற்கு வந்த போது திமுக உறுப்பினர்கள் அவையில் இல்லை.
#காரணம் அன்றைக்கு இந்திராகாந்திக்கு தன்னை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருந்தார் கருணாநிதி. எனவே இந்திரா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்க முடியுமா...? அவையில் இருந்திருந்தால் எதிர்த்திருக்கலாம்.
#மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுதான் அந்தத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அன்றைக்கு ஏன் கேட்கவில்லை.
#அந்த தீர்மானம் நிறைவேறிய போது "சுவராஜ்யா" பத்திரிக்கையில் கீழ்கண்டவாறு எழுதினார்கள்.
"The D.M.K.has missed the bus"
#இவ்வாறு இந்திய நாடாளுமன்ற வரலாறு நெடுக பஸ்ஸைவிட்டுவிட்டு இன்று பஸ்ஸுக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிற வேண்டிய நிலை.
#ஆக எல்லாக் காலங்களிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு, இன்று அதற்காகவே நாடகம் போடுகிறது திமுக.
No comments:
Post a Comment